தக்க நேரத்தில்… அறிவரசன்

ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப,; 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன. இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின்… Read More தக்க நேரத்தில்… அறிவரசன்

என் பாசமிரு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது

18.04.1995 என் பாசமிரு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது. ஜெயமலர், நான் கரும்புலியாகச் சென்று வீரச்சாவடைந்தயிட்டு கவலைப்படக்கூடாது. ஏனெனில் நாம் இருவரும் ஒரு வரலாற்றுத் தலைவனின் வழி காட்டலில் நிற்கின்றோம். இழப்புக்கள் எமக்கு புதியவை இல்லை.இழப்புக்கள் இல்லாது எம் தமிழீழத்தை வென்று எடுக்க முடியாது என்பதை நீ படித்திருப்பாய். மற்றும் நீ எனது பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.நீ இயக்கத்தை விட்டு விலகக்கூடாது இதுதான் நீ செய்யும் ஆத்மா சாந்தியாகும். இப்படிக்கு,தணிகைமாறன்,(அன்ரன் பெனடிற்).

டாக்கியினுள் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன்

அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவிவிட, எம்மிடம் அடிவேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின்வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டு;ம் முயன்றனர். 20, சித்திரை, 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம். எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக ஒலுமடுப் பகுதியூடாகவும் கனகராயன் ஆற்றுப்பகுதியாலும் மூன்று… Read More டாக்கியினுள் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன்

ஒரு கரும்புலி வீரனின் உட்கிடக்கை

திகதிதமிழீழம். என் இனிய மக்களே…. எமது மூதாதைகளான பண்டாரவன்னியன், சங்கிலியம், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராயும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில் தன்னும் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” இவ்வண்ணம்,போராளி செழியன்

இப்ப ஆமி எங்கள நெருங்கிட்டான் எங்கள் மீது செல் அடியுங்கோ

மொத்தம் முப்பத்து நான்கு நாட்கள் தொடர்ந்த கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமின்றி ஆனையிறவிலுங்கூடவே சிங்களத்தின் போர் வலிமை புலிகளிடம் தோற்றுப்போனது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவிற் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2003, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு சூடாகவே விடிந்தது. கண்டி வீதியை மையமாகக் கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலவற்றை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக எதிரி… Read More இப்ப ஆமி எங்கள நெருங்கிட்டான் எங்கள் மீது செல் அடியுங்கோ