போர்முகம் 1

சப்பிளேப் பாதையால் சில நேரம் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரேயடியாய் போட்டுக்கொண்டு போனார்கள். சரியான பெரிய ஸ்ரெச்சர். அதில நாலு பக்கத்திலையும் நாலு ஆமிக்காறங்கள் பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போவாங்கள். ஏழு எட்டுத் தரத்துக்குமேல் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரே தரத்தில் போட்டுக்குவிச்சுக் கொண்டு போனாங்கள். காயப்பட்ட ஆமிக்காறங்களை இப்பிடிக் குவியலாய் போட்டுக்கொண்டு போகமாட்டாங்கள். அப்பிடி எண்டால் இதில கொண்டுபோறது செத்த ஆமிக்காறங்களாய் தான் இருக்கவேணும். அப்படியே படுத்துக்கிடந்தபடி எட்டிப்பார்த்தன். அந்த ஸ்ரெச்சரில் கொண்டு போற ஆமிக்காறங்கள்… Read More போர்முகம் 1

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008

எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2008.… Read More தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008

வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில்… Read More வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்

இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம்

1994 புரட்டாதி 13ம் நாள் இலண்டன் பி.பி.சியின் தமிழ் சேவையின் சார்பில் திருமதி.ஆனந்தி என்ற நிருபர் தமிழீழத் தேசியத் தலைவரைப் பேட்டி கண்டபோது ‘பேச்சுவார்த்தைகள் ஒரு சுமூகமான சூழ்நிலையில், ஒரு சமாதானமான சூழ்நிலையில் நடைபெறுவதையே விரும்புகிறோம். ஒரு சுமூகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசுதான் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். இந்தத் தேர்தல் முடிவுகளும் அதனையே நிரூபித்துக் காட்டுகின்றன. நாமும் சமாதானத்தையே… Read More இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம்

தமிழீழப் போர் 3

மூன்றாம் கட்ட ஈழப்போரானது தரையில் நிகழ்ந்ததற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைவில்லாமல் கடற்பரப்பிலும் நிகழ்ந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் இருபெரும் தாக்குதல்கள் திருமலைத் துறைமுகத்தினுள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அதேவேளை தொடர்ச்சியாக நடந்த ஆழ்கடற்சமர்கள் பெரும்பாலும் விநியோகமார்க்கத்தை மையமாகக் கொண்டவையாகவே இருந்தன. மேலும் கடற்புலிகளின் தாக்கி அழிக்கும் திட்டத்தின் அடிப்படையிலும் தரைத்தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற ரீதியிலும் இச்சமர்கள் இடம்பெற்றன. இறுதியில் யாழ்.குடாநாட்டிற்கான விநியோகத்தை மட்டுப்படுத்தும் அளவில் வட-கிழக்குக் கடற்பிராந்தியத்தில் கடற்புலிகளின் கைமேலோங்கியதாக இருந்தது. இது யாழ்.… Read More தமிழீழப் போர் 3

காந்தரூபன் அறிவுச்சோலை

1993 காhத்திகை 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் ‘எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள். எமது போராளிகள் அனைவருமே இவர்களது சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணைபிரியாத அங்கமாக இணைந்து உள்ளனர். தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த… Read More காந்தரூபன் அறிவுச்சோலை

தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்

1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் ‘போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்… Read More தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்

தமிழீழ சட்டக் கல்லூரி

1993 தை 25ம் நாள் தமிழீழ சட்டக் கல்லூரியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாறும் போது ‘தமிழீழத் தனியரசு என்ற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தனியரசுக்கான அத்திவாரங்களை நாம் இப்போதிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். நீதித்துறை அரச நிர்வாக இயந்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு நிறுவனம் என்பதால் இப்பொழுதிருந்தே இத்துறை சம்பந்தமாக எமது போராளிகளாகிய உங்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மை, ஒழுக்கம், கண்ணியம்,… Read More தமிழீழ சட்டக் கல்லூரி

தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை

தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடத்திய தமிழீழப் பொதுக்கல்வித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 1993 மாசி 13 இல் வெளியிட்ட அறிக்கையில் ‘மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. சமுதாய விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிக்கும,; கல்வி கற்கும் உரிமைக்கும் இடையில் நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயல- வில்லை. இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமை- யாதவை. போரும் கல்வியும் இணைந்த ஒரு… Read More தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை

புலிகளின் குரல் வானொலிச் சேவை

புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.