தமிழ் மக்களின் காவலர்கள்

தரைப்புலி, வான்புலி, கடற்புலி,எனும் முப்படைகளும் கொண்டு ஒரு அரசாங்கத்துக்கு நிகராக 30 வருட காலமாக போர்புரிந்து வரும் ஒரு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள். தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தலமையில் வழிகாட்டலில் பல வெற்றிப் பாதைகளைக் கடந்து வந்த ஒரு அமைப்பு. இன்று தமிழின் என்ற ஒரு இனம் உலகில் இருக்கு என்றால் அதற்கு காரணம் இந்த அமைப்பே. தமிழர்களின் பிரதிநிதிகளான இந்த அமைப்பின் படைகளின் காட்சிகள் thamil kodan

உள்ளிருந்து ஒருகுரல்

முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது. அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள… Read More உள்ளிருந்து ஒருகுரல்

போர் முகம்

“இரவு 2.30 மணிக்கு தொடங்கின சண்டையில ஆமிக்காறங்கள் எங்களின்ர பொசிசனுகள் கொஞ்சத்தைப் பிடிச்சிட்டாங்கள். ஆமிக்காறங்களிட்ட பிடிபட்ட பொசிசனுகளையும் பண்டையும் பிடிக்கிறதுக்காக நாங்கள் சண்டைக்கு வந்திட்டம். விடிய 5.00 மணிக்கு தம்பியவ நீங்கள் உடனையும் இறங்குங்கோ’ எண்டுற கட்டளை வந்திட்டுது. சண்டை துவங்கினதில இருந்து எப்பதான் எங்களுக்குச் சந்தர்ப்பம் வரப்போகுதோ தெரியேல்ல எண்டு ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் கட்டளை வந்தது தான் உடனையுமே நாங்கள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேந்திட்டம்” என்ற முறியடிப்பு அணிப் போராளி கீரன்… Read More போர் முகம்

உள்ளிருந்து ஒரு குரல்

2008 யூலை மாதம், மன்னார்க் கட்டளைப் பணியகப் போராளிகளும், 2ஆம் லெப்.மாலதி படையணியினரும் தேத்தாவாடியில் உடனடியாக ஒரு முன்னணிக் கோட்டை ஏற்பாடு செய்து அதில் காப்பிலீடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உடனடி ஏற்பாடு போதிய காப்பானதாக இருக்கவில்லை. வெள்ளமெனத் திரண்டு வரும் கடலலைகளுக்கு முன்னால் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டுத் தடுப்புச் செய்வதுபோல, மூர்க்கமும் போர்வெறியுங்கொண்டு முன்னேறும் சிங்களப் படைகளுக்கெதிராக மனத்திடத்தை மட்டும் காப்பாக முன்னிறுத்தியபடி புலிகள் சண்டை செய்து கொண்டிருந்தனர். தேத்தாவாடியில் அரண்களைப் போட்டு பாதுகாப்பு… Read More உள்ளிருந்து ஒரு குரல்

கரும்புலிகளின் வரலாறு

ஒப்பிரேசன் லிபரேசன்” எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே… Read More கரும்புலிகளின் வரலாறு

சுதந்திர போராட்ட வீரர்கள் தினம்

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப் பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீரர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூர்ந்தது தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல் லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய… Read More சுதந்திர போராட்ட வீரர்கள் தினம்

அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்

ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும்… Read More அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்

மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் – மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின்… Read More மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்