அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து…..

இலக்கம் 109, இடதுகரை வாய்க்கால், இரணைப்பாலை, வன்னிப் பெருநிலப்பரப்பு, தமிழீழம். மாசி 21, 2009. அன்புள்ள அப்பாவுக்கு! வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே. பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று… Read More அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து…..

வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்: கப்டன் நெடுஞ்செழியன் வீரச்சாவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார். இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின்… Read More சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்

"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று… Read More "விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

உள்ளிருந்து ஒரு குரல்

சிங்களத்தின் போர் வெற்றி உச்சங் கொண்ட பொழுது நிலப்பரப்புக் குறுகித் தமிழர் வாழ்வு அவல முற்றுதத் தவிக்கின்றது. இந்த இக் கட்டை முற்கூட்டியே உணர்ந்து கொண்ட செருந்தியின் அம்மா தனது குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு படைவ ல்வளைப்புக்குள் இருக்கும் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். எல்லோரையும் கூட்டிச் செல்வதற்கு முன் கணவரும் தானுமாக ஊருக்குச் சென்று நிலைமையைக் கணக்கிட்டனர். அம்மாவுக்கு அகவை ஐம்பது. ஐயாவுக்கு ஐம்பத்தைந்து. ஊருக்குச் சென்ற தனது வயது முதிர்ந்த தமக்கை ஒருவருடன்… Read More உள்ளிருந்து ஒரு குரல்