தலைவர் பிரபாகரன் தொடர் 12

‘ஐயோ, உயிருக்கு ஆபத்தில்லையே?’ என்றுதான் முதலில் கேட்டிருக்கவேண்டும். ஆனால் பிரபாகரன் கேட்டது, `ஐயோ, யார் செய்தது?’ அவருக்குத் தெரியும். அத்தனை எளிதில் போகக்கூடிய உயிர் இல்லை அது. ஏனெனில் சதாசிவம் கிருஷ்ணகுமார் என்கிற வெங்கிட்டு என்கிற கிட்டுவின் உயிர், ஏழு கடல் தாண்டி, ஏழு மலைதாண்டி எங்கோ ஒரு ரகசிய இடத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அசுரனின் உயிர் போல ஈழ விடுதலை என்னும் பெருங்கனவுக்குள் புதைத்துவைக்கப்பட்டிருப்பது. சற்றும் நிகரற்ற போராளி. அப்பழுக்கே சொல்லமுடியாத அர்ப்பணிப்பு உணர்வின் சொந்தக்காரர். ஒப்புவமையற்ற… Read More தலைவர் பிரபாகரன் தொடர் 12

தலைவர் பிரபாகரன் தொடர்-11

மன்னிக்கவேண்டும். நீங்கள் சாக அனுமதிப்பதற்கில்லை என்றார்’ பிரபாகரன்.நான்கு பெண்களும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். நான்கு முகங்களிலும் நான்கு கோபங்கள். இதே உண்ணாவிரதம் கூடாது என்று அரசாங்கக் காவல் துறையினர் வந்து இழுத்துச் செல்வார்கள் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். போகிற வழியில் தர்ணா செய்யலாம். லாக்கப்பில் கலாட்டா செய்யலாம். கோர்ட்டில் கோஷம் போடலாம், சிறைச்சாலையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கலாம், செய்தி வெளியே வரும், விஷயம் பெரிதாகும், மக்கள் திரண்டு ஊர்வலம் போவார்கள், கல்லூரி காலவரையறையற்று மூடப்படும் என்று… Read More தலைவர் பிரபாகரன் தொடர்-11

தலைவர் பிரபாகரன் தொடர் -9

1984-ம் ஆண்டு இரண்டு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய விஷயம். சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர். அந்தத் தொகையைத் தன் சொந்த சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்ததில் மலைத்துப் போனார் பிரபாகரன். இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள். அத்தனையும் நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள். எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது. `தம்பி நேரில் வராததில் முதல்வருக்கு வருத்தம்தான்’ – பாலசிங்கம் சொன்னார். `அவசியம் நேரில் பார்த்து நன்றி சொல்லத்தான் வேண்டும்’ என்றார் பிரபாகரன். அந்த… Read More தலைவர் பிரபாகரன் தொடர் -9

தலைவர் பிரபாகரன் தொடர் 10

ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தேவதைகளாலும் சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள்! திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள். வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது. தொழில் போனது. உறவுகள், தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.தறிகெட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இல்லை அது. உட்கார்ந்து யோசித்து திட்டமிட்டுச்… Read More தலைவர் பிரபாகரன் தொடர் 10

தலைவர் பிரபாகரன் தொடர் 8

என்ன நடக்கிறது இலங்கையில்? யார் இந்த இளைஞர்கள்? தமிழகத்தில் என்ன செய்கிறார்கள்? இந்திய அரசு ரகசியமாக இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறதாமே? பண உதவி செய்கிறதாமே? உண்மையா? எப்படிச் செய்கிறார்கள்? ரா (RAW) மூலமாகவா? யார் பொறுப்பு? எம்.ஜி.ஆருக்கு அப்போது பல சந்தேகங்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த விவரம் கூட மாநில அரசுக்கு சரியாகத் தெரியாது. `ஆமாம், பயிற்சி நடக்கிறது’ என்று தெரியவந்தபோது எங்கே, எந்த இடத்தில் என்கிற விவரமில்லாமல்தான் வந்தது.… Read More தலைவர் பிரபாகரன் தொடர் 8