யுத்த துரோகம்!

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர் ஆயினும் போரது நீறும், புலி ஆடும் கொடி நிலம் ஆறும். பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப் பைகளும் ஆயுதம் ஏந்தும். மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த சிங்கள கூட்டங்கள் ஓடும். -இணையத்தில் இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த… Read More யுத்த துரோகம்!

பிரபாகரனின் மகன்… மகள் இறுதி நிமிடங்கள்!

காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர் களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள் ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை. முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து… Read More பிரபாகரனின் மகன்… மகள் இறுதி நிமிடங்கள்!

புலிகள் காட்டிய மனிதாபிமானம்!

தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! எங்கே, எங்கேஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியேமறுபடி உறங்குங்கள்! விடுதலைப் போராளிகளுக்கு வீர வணக்கம்!கடந்த இதழ் படித்துவிட்டு தொலைபேசியில் கதறி அழுதவர் பலர். நா தழுதழுத்து விம்மியவர் பலர். அரசு, தனியார் துறைகளில் உயர்பதவி வகிப்போர் கூட “இப்படி நாமெல்லாம் கையாலாகாத வர்களாகிவிட்டோமே, நம் கண்ணெதிரே ஒரு இனத்தை, விடுதலைப் போராட்டத்தை அழித்து விட்டார்களே’ என்று கலங்கினர். நடு வயதுத் தாய் ஒருவர் என் அலுவலகம்… Read More புலிகள் காட்டிய மனிதாபிமானம்!

வரலாறு படைத்த பிரபாகரன்

மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது.“”உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?” அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: “”என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!” வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது… Read More வரலாறு படைத்த பிரபாகரன்

"தமிழீழம் மலரும்’ -பேசுகிறார் பிரபாகரன்!

காணும் பொழுதெல்லாம் உணர்வாளர்கள் எழுப்பும் கேள்வி, “ஈழம் இனியும் சாத்தியமா?’ தர்மத்தை சூது வெல்லும், தர்மம் மறுபடியும் வெல்லும். ஈழம் வரும். கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் மக்கள் சமூகங்களையும் நாகரீக வளர்ச்சியையும் அதிகமாகப் பாதித்தவை போர்களும் நாடு பிடித்தல்களும்தான். வரலாற்றின் மிகப்பெரிய நாடுபிடித்தல், ஐரோப்பிய வெள்ளையர்கள் இன்று லத்தீன் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தம் ஆளுகையின் கீழ் கொண்டு வந்த நிகழ்வு. பூர்வகுடி திராவிடர்களுக்கும் ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு மிடையான முதல் சந்திப்பும் மோதலும்… Read More "தமிழீழம் மலரும்’ -பேசுகிறார் பிரபாகரன்!

மக்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார். என்கிற செய்தி கடந்த 20ம் திகதி மாலை புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டதும் அதனை நம்புவது கடினமானதாக இருந்தது. அச்செய்தி மக்கள் மனங்களை இடிபோல் தாக்கியது. மக்கள் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த, மக்களாலும் பேரன்புடன் நேசிக்கப்பட்ட ஒரு தளபதியாக திகழ்ந்தவர் பிரிகேடியர் பால்ராஜ். 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜ். முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப்… Read More மக்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! – ஜெகத் கஸ்பர்

ஒருவகையில்இருளின் காலமே நமக்கு நம்பிக்கையாகவும் ஆயிற்று. நக்கீரன் வாசகர்கள்அத்தகு நம்பிக்கையின் குறியீடாக மாறியதையும் வரலாற்றிற்காய் இங்கு பதிவுசெய்ய விழைகிறேன். ஈரோட்டிலிருந்துஒரு தாய். நேரில் பார்த்ததில்லை. தொலை பேசினார். நக்கீரன் வாசகர்,””ஈழத்து அகதி, அனாதைக் குழந்தை கள் 20 பேரைத் தாருங்கள், எல்லாம் நான்பொறுப்பேற்கிறேன். மருத்துவம், பொறியியல், வர்த்தக மேலாண்மை… எந்தப்படிப்பென் றாலும் நான் படிக்க வைக்கிறேன்” என்றார். இந்த உரையாடல்நிகழ்ந்தது மே மாத இறுதியில். மீண்டும் தளபதி பால்ராஜ் அவர்களைப்படித்துவிட்டுப் பேசினார். இருவாரங்களுக்கு முன். திருச்சியிலிருந்து வந்திறங்கி… Read More எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! – ஜெகத் கஸ்பர்

போராளிகளின் சுவடுகள்

சம்பவம் நடந்த காலப்பகுதியைப் பற்றிய சுருக்கமான விவரிப்பு: இது 1998 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதி. வன்னியில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது. தொடக்கத்திலேயே எதிரி நெடுங்கேணியைக் கைப்பற்றியிருந்தான். பின் கண்டிவீதி வழியாக நகர்ந்து புளியங்குளத்தைத் தாண்ட முடியாமல் திணறியதால் கண்டிவீதிக்குக் கிழக்குப்புறமாக காடுகளால் முன்னகர்ந்து மாங்குளம் – ஒட்டுசுட்டான் சாலையில் கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான். அதன்பின் சண்டையின்றியே புளியங்குளம், பிறகு கனகராயன் குளம் என்பவற்றைக் கைப்பற்றியநிலையில், மாங்குளத்துக்காகச் சண்டைபிடித்துக் கொண்டிருந்தான். கண்டிவீதி வழியான நகர்வுகள் சரிவராத நிலையில்… Read More போராளிகளின் சுவடுகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’

ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள். அவர்கள் அந்தத் தீவின் பூர்வ… Read More "ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’