தொடரும் துரொக வரலாறு பகுதி 2

கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் நாள் மும்பை நகர் முற்றுகைக்கு உள் ளானது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒரே நேரத்தில் எட்டு முனைகளில் நடத்திய தாக்குத லில் மும்பை போர்க்களமானது மட்டுமல்ல இந்தியா ஸ்தம்பித்து நின்றது. தாக்குதல் நடத்திய அணியினரில் ஒருவனான அஜ்மல் அமீர் கசாப் உயிருடன் பிடிபட்டான். மும்பை தாக்குதல் மூலம் லஷ்கர்-இ-தொய்பா சாதிக்க விழைந்தது என்ன? இந்திய அரசமைப்பை திகிலடையச் செய்து அதன் தன்னம்பிக்கையை சிதைப்பது, இசுலாமிய மக்களை தேசிய நீரோட்டத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தி, அவர்களிடையே இந்திய அரசமைப்பு மீதான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது.

உண்மையில் இந்தியாவின் இசுலாமிய மக்கள் மிகுந்த வணக்கத்திற்குரியவர்கள். கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. குடும் பத்தின் வெறுப்பு பிரச்சாரங்களால் ஒருபுறம் துரத்தப்பட்டு, பாகிஸ்தான்-தலிபான் பின்னணி யோடான, இந்தியாவை சீர்குலைக்கும் அரசியல் நோக்கு கொண்ட பயங்கரவாதத்தால் மறுபுறம் நெருக்கப்பட்டும் கூட இந்திய அர சமைப்பு மீது இன்னும் நம்பிக்கை இழக்காதவர்களாக இருக்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் நம்பிக்கையோடு வாக்களித்து பங்கேற்றிருக் கிறார்கள்.

கல்லூரிக் காலத்திலும், இன்றும் கூட “”மார்க்கம்” என்ற வகையில் இசுலாம் எனக்கு மிக மிக பிடித்த மதம். இந்தியாவின் கொடுமையும் அவமானமுமான சாதி அமைப்பு முறையை ஆணி வேரிலேயே ஆப்பு வைத்து தகர்த்த மதம் இசுலாம் மட்டும்தான். ஷியா, சன்னி மற்றும் வேறுசில சிறு பிரிவுகளைத் தவிர்த்து ஒருவர் இசுலாமியர் ஆகிவிட்டாரென்றால் அவரது சாதி அப்போதே அழிந்து விடுகிறது. அவர் இசுலாமியராக மட்டுமே அறியப்படுவார். கிறித் துவத்தில் கூட இது நடக்கவில்லை. இசுலாத்தின் இன்னொரு சிறப்பு அதன் எளிமை. சடங்கு, சம்பிரதாயங்கள் அதிகம் இல்லை. இறைவன் ஒருவர், நாம் அவர் பிள்ளைகள் என்பதோடு சரி.

எல்லா மதங்களையும் போல் விமர்சிப்பதற்கு இசுலாத்திலும் பல உண்டு. ஆனால் அவை மனிதர்களின் குறையேயன்றி, மார்க்கத்தின் குறை அல்ல. அவை பற்றி விவாதிக்கும் களமும் இதுவல்ல.

எல்லை தாண்டி இங்கு வந்து சேரும் பயங்கரவாதத்தில் இந்தியாவின் இசுலாமிய மக்களது பங்கு, பூஜ்யம் புள்ளி ஒரு சதம் கூட இருப்பதில்லை. அப்பயங்கரவாதத்திற்கு முக்கிய காரணங்கள் அநீதியான இன்றைய உலக ஒழுங்கும் (Global order), நம்மிடையே இருக்கும் மதவாத அரசியலும், அரசு அமைப்புகள் சிலவற்றின் தவறான அணுகு முறைகளும். அமெரிக்காவும் சோவி யத் ரஷ்யாவும் சேர்ந்து தகர்த்த ஆப்கானிஸ்தானின் சிதிலங்கள் பாகிஸ்தானில் கரையொதுங்கும் என்பதும், பலவீனமாகி உருக்குலை யும் பாகிஸ்தானின் சிதிலங்கள் இந்தியாவில் கரையொதுங்குமென் பதும் அரசியல் விஞ்ஞானத்தில் சராசரி அறிவு கொண்டவர்களுக்கே புரியும். எனவேதான் வளமாகவும், வலுவாகவும் வாழ்கின்ற பாகிஸ் தான் நாடு இந்தியாவுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என நாம் சொல்வது. இன்று சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் ஈழமக்களின் தாயகமும் தேசியமும் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஈவிரக்கமற்ற சிங்களப் பேரினவாதத்திற்கு உற்ற துணையாய் நின்றது இன்றைய உலக ஒழுங்கும் (ஏப்ர்க்ஷஹப் ர்ழ்க்ங்ழ்), இந்தியாவும். தகர்க்கப்பட்ட ஈழத் தின் சிதிலங்கள் தமிழகத்திலோ இந்தியாவிலோ கரையொதுங்கு மானால் அதற்கு முழுப் பொறுப்பும் நாமாகத்தான் இருக்க முடியும்.

இந்திய அரசமைப்பை திகிலடையச் செய்து அதன் தன்னம் பிக்கையை சிதைக்க முயன்ற அஜ்மல் கசாபும் கூட்டாளிகளும் உல்லாசப் பயணிகள் போல் அரபிக் கடல் வழி இந்தியக் கரையை வந்தடைந்தார்கள். அவர்களால் “ஜாலி’யாக வந்து சேர முடிந்தமைக்கு முக்கிய காரணம் இந்தியாவின் கடற்படை வளங்களில் பெரும்பகுதி இந்தியாவின் இறையாண்மைக்கு எவ்வித அச்சுறுத்தலும் முழங்காத தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழிக்கும் இலங்கை ராணுவத்திற்குப் பின்புலமாக இந்தியப் பெருங்கடல் பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தமைதான்.

இந்தியப் பெருங்கடலில் நின்ற கடற்படை வளங்கள் நிகர் நிலையாக அரபிக் கடலிலும் நின்றிருந்தால் கசாபும் கூட்டாளி களும் இந்தியாவுக்குள் நுழையும் வாய்ப்புகள் குறைந்திருக்கும். அல்லது கடினமாக இருந்திருக்கும் அல்லது இல்லாமலே போயிருக்கும்.

சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது நடத்திய இறுதிப் போரில் சீனாவுக்கு அடுத்தபடி அதிக ஆயுதங்களை இலங் கைக்கு கொடுத்துதவிய நாடு பாகிஸ்தான். 2006-ம் ஆண்டு திருகோணமலை சம்பூர் பகுதியில் இருந்த இலங்கை ராணுவத்தின் 27 சிறு முகாம்களை விடுதலைப்புலிகள் அதிரடித் தாக்குதலில் அழித்தார்கள். தாக்குதல் முடிவில் அறியப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால் பாகிஸ்தான் ஏற்பாட்டில் தலிபானிடம் பயிற்சி பெற்ற சுமார் 700 பேர் அம்முகாம்களில் இருந்தனர். இந்த உண்மையை இலங்கை அரசு நுட்பமாக மறைத்துவிட்டது. இன்றும்கூட ராஜபக்சே அரசில் பங்கேற்கும் அமைச்சர் அதாவுல்லாவின் மறைமுக ஆளுகையில் இயங்கும் “கிழக்கு பாதுகாப்பு படையின்’ சுமார் 1400 பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் கள் எனக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு சீனா-பாகிஸ்தான்- ராஜபக்சே அரசு இணைந்து செய்த ஏற்பாடு எனவும் சொல்லப் படுகிறது. வெற்றிடம் வெறுமனே இருக்காது. கிழக்கு மாகாணத் தில் விடுதலைப்புலிகள் அகற்றப்பட்டு ஏற்பட்ட வெற்றிடத்தை கடந்த மூன்று ஆண்டுகளாய் பாகிஸ்தான்-தலிபான் பின்னணி கொண்ட ஆயுதம் தாங்கியவர்கள் நிரப்பியுள்ளார்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் சில ஆண்டுகளில் இதுவரை அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகம் குண்டுகள் வெடிக்கும் அச்ச பூமியாக மாறுமேயானால் அதற்கான முழுப் பொறுப்பை யும் தமிழர்களை அழிக்க உதவிய நமது அதிகார அமைப்பினரே ஏற்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு பிறப்பித்த மகத் தான தளபதிகளில் ஒருவரான கருணம்மான் “துரோகி’ என்று தலை முறை நினைவுகளில் பதிவு பெறுவது மிகவும் வேதனையானது. அவரது எத்தனையோ சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கிழக்குப் பகுதி களின் இசுலாமிய மக்களையும் தமிழர் என்ற அடையாளத்திற்குள் உறுதியாக நிலைபெறச் செய்தமை. காத்தான்குடி இசுலாமிய வர்த்தகர்களோடு அவர் உரு வாக்கிய விரிவான வர்த்தக உறவுகளும், பொதுவான அவரது தோழமை அணுகு முறையும் அதற்கு முக்கிய காரணங்கள். அவர் இயக்கத்தை விட்டு விலகிய பின் னணியின் அனைத்து தன்மைகளையும் இங்கு அரங்கேற்றுவது இன்றைய கால கட்டத்திற்கு ஒவ்வாத ஒன் றாகவே கருதுகிறேன்.

நம்மூரில் “வடக்கு வாழ் கிறது- தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கம் இருந்ததுபோல், இயக் கத்திலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிலருக்கு ஒரு மனக்குறை இருந்திருக்கிறது. போர்க்களத்தில் மடியும் போராளிகள் அதிகம் பேர் கிழக்குப் பகுதியினர், ஆனால் முக்கிய பதவிகளில் இருப்போர் வடக்கு மாகாணத் தவர் என்ற மனக்குறை அது. அதை ஊதிப் பெருக்கி இடைவெளியாக்குவதில் இலங்கை புலனாய்வுத்துறை வெற்றி பெற்றதாகவே சொல்ல வேண்டும். இதில் தீர்க்கமான சதிவேலை செய்தவர் இலங்கை ராணுவ புலனாய்வு பிரிவால் நடத்தப்படும் “”ஏசியன் ட்ரிபியூன்” (ஆள்ண்ஹய் பழ்ண்க்ஷன்ய்ங்) என்ற இணைய இதழை இயக்கும் தமிழர். பெயர் ராஜசிங்கம் என்று நினைக்கிறேன். ஓஸ்லோ அமைதிப் பேச்சுவார்த்தை அணியில் சென்ற கருணம்மானை ரகசியமாகச் சந்தித்து கரைத்த மனிதர் இவர் என கதைக்கப்படுகிறது.

முக்கியமாக வடக்கும், கிழக்கும் தொடர் நிலப்பரப்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாதிருந்தமையால் கிழக்குப் பகுதி வன்னியை மையமாகக் கொண்ட பொது நிர்வாகத்தின் கீழ் இயங்கவில்லை. உண்மையில் கிழக்குப் பகுதி கருணம்மானின் முழு ஆளுகைப் பரப்பாகவே இருந்தது. இதனால் விடுதலைப் புலிகளின் பொது நிர்வாகப் பிரிவில் இருந்த சிலருக்கும் கருணம்மானுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்ததும், அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டபின் அக்கருத்து வேறுபாடுகள் உரசலாக மாறியதும் உண்மை. இவற்றோடு பெண்கள் குறித்த சில குற்றச்சாட்டுகளும் எழ பிரச்சனை சிக்கலுக்குள்ளாகியது.

இதில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இறுதிவரை கருணம்மானை இயக்கத்திலிருந்து வெளியேற்றக்கூடாது என்பதில் பிரபாகரன் பிடிவாத மாயிருந்த, ஆனால் உலகிற்கு அதிகம் தெரியாத உண்மை.

பிரபாகரன் அவர்களின் ஆழமான ஆளுமை குணாதிசயங்களில் ஒன்று “எல்லையற்ற நன்றியுணர்வு’ எனச் சொல்கிறார்கள். தன்னைச் சுற்றியிருந்த முக்கிய தளபதிகள் சிலர் கருணம் மானை கைது செய்து, விசாரித்து தண்டிக்க வேண்டுமென பிடிவாதம் செய்தபோது பிரபாகரன் அவர்கள், “கருணா விஷயத்தை என்னிடம் விட்டு விடுங்கள், ஜெயசிகுறு எதிர்சமரில் அவன் இல்லையென்டால் நீங்களும் நானும் கிளிநொச்சியில் இன்டு இருந்திருக்க முடியாது. நானே கதைத்து சரி செய்கிறேன்’ என்றிருக்கிறார். அதற்காகவே கருணம்மானை வன்னிக்கு வரும்படி அழைத்திருக்கிறார்.

ஆனால் தலைவர் தன்மீது வைத்திருந்த தனிப்பட்ட நேசத்தின் ஆழத்தை ஒன்றேல் கருணம்மான் அறியவில்லை, அல்லது ஐயப்பட்டார் என்றே தெரிகிறது. அவசரப்பட்டு இயக்கத்தை உடைத்தார்.

உடைத்தபோதும் கூட இயக்கத்தோடு முழு மோதலில் இறங்காமல் மட்டக்களப்பை விட்டு அவர் அகன்றது சாதுர்யமான முடிவு என்றே கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பை விட்டு அவர் புறப்படும் செய்தி யறிந்து கொழும்பு மட்டக்களப்பு சாலையில் ஆங்காங்கே புலிகளின் புலனாய்வு அதிரடிப் படைகள் நின்றிருக்கின்றன. ஆனால் அவரை கொழும்புக்கு பத்திரமாக தனது அரசு வாகனத்தில் அழைத்து வந்தது பாராளுமன்ற உறுப்பினர் அலிசார் முகம்மது. அன்று மட்டக்களப்பிலிருந்து வெளியேறிய அலிசார் முகம்மது இன்று வரை எங்கிருக் கிறார் என்பது தெரியாது. அலிசார் முகம்மது, கருணம்மான் இருவருமே பாதுகாப்பிற்காக இந்தியா வந்தார்கள் -அல்லது வருவிக்கப்பட்டார்கள். அலிசார் முகம்மது இங்கு கஸ்தூரி என்ற பழைய திரைப்பட நடிகையோடு சிலகாலம் ஐக்கியமாகி வாழ்ந்து பின் எங்கோ வெளிநாடு போய் விட்டதாகத் தெரிகிறது.

கருணம்மான் இந்திய உளவுத்துறை ஏற்பாட்டில் கேரள மாநிலம் திருச்சூரில் ஈராண்டு காலம் “மலேசிய தொழிலதிபர்’ எனச் சொல்லி வாழ்ந்து பின்னர் இங்கிலாந்து சென்று, அங்கும் நிம்மதியாக வாழ முடியாமல் மீண்டும் இலங்கைக்கே திரும்பி தானும் பெரும்பாடுபட்டு வளர்த்த இயக்கமும், தனது மக்களும் கொடூரமாகத் தகர்க்கப்பட்ட களத்தின் சாட்சியானார்.

ஆயினும் இன்றைய சூழலில் விலங்குகளிலும் கேவலமாய் வதை முகாம்களில் கிடக்கும் மூன்று லட்சத்திற்கும் மேலான தமிழர்களும், கைதாகி படுகொலை, சித்திரவதைகளுக்கு உள்ளாகி வரும் பல்லாயிரம் போராளிகளும் பாதுகாக்கப்பட அவர் உறுதியாக இயங்குவாரேயானால் அவரது பழிகளில் சிலவேனும் கழுவப்படும்.

(நினைவுகள் சுழலும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s