மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 07

கண்காணிப்புக் குழுவினர் மக்களை சந்திப்பதையும் அவர்களிடம் இருந்து உண்மைகளை அறிந்துகொள்வதையும் சிறீலங்கா அரசு விரும்பவில்லை. மக்களின் கருத்துக்கள் வெளியே வந்தால் விடுதலைப் புலிகள் பொது மக்களை பணயமாக வைத்திருக்கின்றார்கள் என அது சர்வதேசரீதியாக மேற்கொண்டிருந்த பிரச்சாரம் பொய்யாகிப் போய்விடும் என்பதை அறிந்திருந்தது. எனவே, அந்த மக்களை கண்காணிப்புக் குழுவினர் சந்தித்துவிடாதபடி, கண்காணிப்புக் குழுவினரின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் செல்லும் இடங்கள் மீது படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள். இதன்போது கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினார்கள்.… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 07

மாவீரர் நாதன் கஜன் நினைவு சுமந்து

“நாதன் எனும் நாமம்” நாளும் புவி வாழும்….. “கயனின் திருநாமம்” தரணி தினம் கூறும்.. .. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் – லெப் கேணல் நாதன் எமது விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினருள் ஒருவராவார் நேர்மையும் கண்ணியமும் மிக்க இவர் விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர் நீண்ட காலமாக அனைத்துலக… Read More மாவீரர் நாதன் கஜன் நினைவு சுமந்து

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவலைகள்

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பதிவுகள் நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விம்பகம் தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார்.மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க… Read More பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவலைகள்

நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் -புதுவை இரத்தினதுரை

புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”“துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக – இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை… ”அட மானுடனே!தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்நிலம் சுமப்பதோ… Read More நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் -புதுவை இரத்தினதுரை

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 06

விடுதலைப் புலிகளால் திருகோணமலை கைப்பற்றப்பட்டு விட்டால் அங்கு தமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற எண்ணம் இந்தியாவிடம் காணப்பட்டது. திருகோணமலை படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல்களும், கடற் பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கமும் திருகோணமலையை சிறீலங்கா இழக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்துவிட்டுவிடும் என்பதை இந்தியா உணர்ந்திருந்தது. எனவே, அதனைத் தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் அது இறங்கியது. திருகோணமலையில் இந்தியாவிற்கு சொந்தமான எண்ணைய்க் குதங்கள் மட்டுமல்ல பல பொருளாதார நலன்களும் இருக்கின்றன. இவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது திருகோணமலையில்… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 06

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 05

சமாதான உடன்படிக்கைக்கு முரணாக சிறீலங்கா செயற்பட்டுக் கொண்டிருந்த போதுதான், விடுதலைப் புலிகள் மாவிலாறு அணையை மூடுகின்றார்கள். போரினால் மட்டுமல்ல இயற்கைப் பேரனர்த்தமான ஆழிப்பேரலையால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் உதவுவதற்கு முனையாத சிறீலங்கா, அப்பாவி மக்கள் மீது கெடுபிடிகளை ஒரு போர்க்கால நிலை போன்று ஏற்படுத்திய நிலையில்தான், அதற்கு எதிராக விடுதலைப் புலிகள் மாவிலாறு அணை விவகாரத்தை கையிலெடுத்தார்கள். 2006ம் ஆண்டு யூலை 22ம் திகதி சிங்கள குடியேற்ற மக்களுக்கு செல்லும் தண்ணீருக்கான அணைகள் மூடப்பட்டன. இது மூடப்பட்டதும், இரு… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 05

"எல்லாளன் நடவடிக்கை" கரும்புலிகளின் 2ம் ஆண்டு வீரவணக்கம்

“எல்லாளன் நடவடிக்கை”22-10-2009 ‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.” கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. எல்லாளன் சிறப்பு தாக்குதல். ‘எல்லாளன் நடவடிக்கை’… Read More "எல்லாளன் நடவடிக்கை" கரும்புலிகளின் 2ம் ஆண்டு வீரவணக்கம்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – பகுதி 04

இயற்கையின் பேரனர்த்தத்தில் (சுனாமி) இருந்து மக்களை மீள் கட்டமைக்கும் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளால். கிழக்கிலும், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளிலும் சிறப்புற மேள்கொள்ளப்படுகின்றன. இதற்கான நிர்வாக அலகுகள் திறம்படச் செயற்படுகின்றன. விடுதலைப் புலிகளின் அனைத்துக் கட்டமைப்புக்களும் மக்கள் மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. உலக நாடுகளிடமும், புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்து கிடைத்த உதவிகளை பெற்று மக்களுக்கு சென்றடைய விடுதலைப் புலிகள் நிர்வாகங்களை உருவாக்குகின்றார்கள். இதேவேளை, சமாதான செயலகத்தால் சுனாமி மீள்கட்டுமான செயற்குழு உருவாக்கப்படுகின்றது. இதனுடாக உலக நாடுகளிடம் இருந்து… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – பகுதி 04

எம்.ஜி.ஆரின் துணிவும், தெளிவும்!

ஈழத் தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர். நடத்திய பேரணி ராணுவ நடவடிக்கை மூலமே தீர்வு என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து ஜெயவர்த்தனா செயல்படுவதன் மூலம் இனி பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது என்பது உறுதியாயிற்று. இதன் காரணமாக தமிழர்கள் பகுதியில் பயம் தொற்றிக் கொண்டது. போராளிகள் இயக்கங்களில் களத்தில் நிற்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகள், ஈரோஸ் ஆகிய இரண்டு அமைப்புகளையும் பலப்படுத்துவது என்றும், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்துவது என்றும் எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். விடுதலைப் புலிகளுக்கு 3 கோடி… Read More எம்.ஜி.ஆரின் துணிவும், தெளிவும்!