மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 15

இரணைமடு விமானத்தளம் பிரதானமாக இருக்கையில், ஏனைய சில இடங்களில் சிறு சிறு விமான ஓடுபாதைகள் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு வந்தது. குறைந்த தூரத்தில் பறப்பில் ஈடுபடவும், தாக்குதல்களின்போது அவசர தரையிறக்கங்களுக்காகவும் மற்றும் எதிரியை திசைதிருப்புவதற்காகவும் என திட்டமிடப்பட்டு விமான ஓடுபாதைகள் மேலும் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் விமான ஓடு தளம் என்பது தேவையான நீளத்திற்கு ஏற்றவகையில் நிலத்தினை பண்படுத்திவிட்டு தார் போட்டு கொள்வதுதான் விமான தளமாக காணப்பட்டது. இதற்கமைவாக பூநகரி, சுண்டிக்குளம், இருட்டுமடு, கொண்டமடு,… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 15

தலைவர் பிரபாகரன் நாம் அறிந்ததும் அறியாதவையும்

விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான். ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும்… Read More தலைவர் பிரபாகரன் நாம் அறிந்ததும் அறியாதவையும்

ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கம் சமாதானப்பாதையில்

இலங்கையில் நான் பயணித்துக்கொண்டிருந்த போது ஈழவர்களாலும் சிறீலங்காவினராலும் பல சமயங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, நான் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துள்ளேனா என்பதேயாகும். ஐயத்திற்கிடமில்லாமல் எனது அந்தஸ்து அவரைச் சந்திப்பதிலேயே தங்கியிருந்தது. நான் அவரைச் சந்திக்கவில்லை என்ற உண்மையைக் கூறினேன். ஆனால் அவரைச் சந்திப்பதையிட்டு நம்பிக்கையற்ற நிலையில் நான் இருக்கவில்லை. ஏனெனில் இதனைவிட நான் வேறு ஒரு பேற்றைப் பெற்றிருந்தேன் என்று சொல்லலாம். ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கத்தின் உறுப்பினர் சிலரது ஆழமான நட்பைக் கொண்டிருந்தேன். இருபது… Read More ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கம் சமாதானப்பாதையில்

எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும்,… Read More எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.

பிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்

தமிழ் இலக்கியத்திலே உலக இலக்கியத்தின் இலக்கைத்தொட்ட மகாகவிகள் பலர்: எழுத்துத்துறையிலே, தமிழ் மொழியைக் காத்தவர்கள் – வளர்த்தவர்கள் என்று வந்துகொண்டே இருக்கிறார்கள். நாடு பிடிக்கும் நாட்டத்தோடு வலிமைமிக்க சரித்திர நாயகர்களாக, வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பெருமைக்குரிய தமிழ் மன்னர்கள் பலர். ஆனால்…அழிந்து விடுமோ என்ற அச்சத்தின் அங்கலாய்ப்பில் உள்ள தமிழ் இனத்திற்கு அபயமாக, ஒரு விடிவெள்ளியாக, தமிழனுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்க இளமையிலேயே புயலாகப் புறப்பட்ட வேங்கையே பிரபாகரன். உலகெங்கும் வாழுகின்ற தமிழருக்குப் புது… Read More பிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்

தமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்

தமிழீழத் தலைவர் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைக்கும் போதெல்லாம் எனது கருத்தில் மூன்று பெரியார்கள் தோன்றுவதுண்டு. அவர்கள் முவரும் தனியே தோன்றுவதில்லை. அந்த மூவரும் ஒரே நேரத்தில் பிரபாவில் ஒருவராகத் தெரிகிறார்கள். இக்கட்டுரையில் அவர்களது வயதை அடிப்படையாக வைத்து அவர்களை வரிசைப்படுத்துகிறேன். 1.மோசஸ்: இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, யூத மக்கள் அடிமைகளாக எகிப்து நாட்டில் வாழ்ந்தகாலம். அன்றைய எகிப்து பலமான, வளமான நாடு. தாழ்த்தப்பட்டது, கடினமானது, ஆபத்தானது என்று கருதப்பட்ட அத்தனை வேலைகளையும்… Read More தமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்

பொற்காலம் படைக்கும் தம்பி -பழ.நெடுமாறன்-

24/12/2009 ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வுதுயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது. தமிழர் வரலாற்றில் விந்தையான செய்தியொன்று உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பொற்காலத் தமிழர்கள் தோன்றி செயற்கரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில், அதாவது சங்க காலத்தில் பொற்கொட்டு இமயத்து புலி பொறித்து ஆண்டான் சோழன் கரிகால் பெருவளத்தான். ஆரியப்படை கடந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். இமயம்வரை சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டிக் கனக விசயர் தலையில் ஏற்றிக்கொண்டு வந்து கற்பின்… Read More பொற்காலம் படைக்கும் தம்பி -பழ.நெடுமாறன்-

தலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்

1970ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் `தமிழ் மாணவர் பேரவை’ தனது ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை தரப்படுத்தியதே அப்பேரணி நடத்துவதற்குக் காரணாகும். அதனை அடுத்து பாடசாலைகளுக்குச் சென்று விளக்கவுரை அளித்து வந்தேன். வல்வை-சிதம்பராக் கல்லூரியில் முதல் முதலாக தம்பியைப் பார்க்கிறேன். அடுத்து, வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அவர் சார்ந்த இளைஞர்களுக்கு தமிழர் எதற்காக ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்பதையும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இந்நாட்டின்… Read More தலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்