22 ம் ஆண்டு வீரவணக்கம்
கப்டன் நிசார்
கப்டன் நிசார்
லெப்.கேணல் கிருபா /வானதி
வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில்… Read More கேணல் இளங்கீரன் 1ம் ஆண்டு வீரவணக்கம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார். இதன் ஊடாக ஊடகப் பணியினை… Read More ஊடகப்போராளிகள் லெப்.கேணல் சிறீ ,லெப்.கேணல் மதியழகன் 1ம் ஆண்டு வீரவணக்கம்
தாயகத்தின் கலையுலகில் குறிப்பாக வன்னியில் நன்கு அறியப்பட்டவர் லெப்.கேணல் சங்கர். மிகக் கம்பீரமான குரல் வளம் கொண்ட சங்கர் பதினைந்து ஆண்டுகளுக்கு கூடிய காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துப் பயணித்தவர். கலைத்துறை சார்ந்த செயற்பாடுகளில் கூடுதல் பங்குவகித்த சங்கர் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக நன்கு அறியப்பட்டவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கங்களில் கலைத் துறை அம்சங்களுடன் கூடுதலான அல்லது பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம் தெருவெளி நாடக நிகழ்வுகளாகும். இந்த… Read More போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்
போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் லெப். கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்ட இவர், விடுதலைப்… Read More மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1ம் ஆண்டு வீரவணக்கம்
01-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கப்டன் செஞ்சுடர் (இராசலிங்கம் வேலுகோபால், இல: 80, 155ஆம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளி நொச்சி) என்ற போராளியே வீரச் சாவடைந்துள்ளவராவார். 02-02-2009 அன்று நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். வீரவேங்கை எல்லாளன் (வேலாயுதம் சுதர்சன், யாழ். மாவட்டம், த.மு: ஆ. பகுதி, தேவிபுரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு) லெப். அலைமதி (அமிர்தலிங்கம் ஜெயதாசன், திரு கோணமலை மாவட்டம், த.மு: பொன்நகர் மேற்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, வேறு முகவரி: 200… Read More 1 ம் ஆண்டு வீரவணக்கங்கள்
2ம் லெப்டினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி(விஸ்வசந்திரன் நவநீதா) கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வசந்திரன் தம்பதிகளின் இரண்டாவது புதல்வியான நவநீதா மண் மீட்புப் போரில் வீரச்சாவடைந்த இரண்டாமாண்டு நினைவு தினம் கடந்த வாரம் அனுட்டிக்கப்பட்டது.
08-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். மேஜர் முல்லைமணி / ஜெகன்(ராஜகோபால் ஜெகதீஸ்வரன், பழைய வாடியடி, புளியங்குளம், வவுனியா, த.மு: முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். 09-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கப்டன் நாயகன் (யோகவேல் ஜெகதீஸ்வரன், ஊற்றுப்புலம், கோணாவில், கிளிநொச்சி) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். 10-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கப்டன் இசைநிலவு (புலேந்திரன் துஸ்யந்தன், யாழ். மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். 27-01-2009 அன்று எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.… Read More 1 ம் ஆண்டு வீரவணக்கங்கள்
1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது. “அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது. சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப்… Read More கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம்,