லெப்.கேணல் நரேஸ், லெப்.கேணல் ரதன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள்

சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட யாழ்.தேவி படைநடவடிக்கையில் கிளாலி நோக்கிய முன்நகர்விற்கு எதிரான முறியடிப்புச் சமரில் 29.09.1993 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நரேஸ்(நாயகம்) உட்பட் மாவீரர்களினது 17ம் ஆண்டு நினைவு நாளும் 29.09.2006 அன்று யாழ். தீவகக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ரதன்(பொன்முடி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

மாவீரர் மேஜர் இனிதன் 3 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

வடமுனையில் சிறப்புடன் செயற்பட்டவர் மேஜர் இனிதன்.. மேஜர் இனிதன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தை நிலையான முகவரியாககொண்ட புண்ணியமூர்த்தி பிரதீபன் என்ற மாவீரனின் மூன்றாம் ஆண்டு வீரவணக்கநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. வடபேர்முனையில் பிரிகேடியர் தீபன் அவர்களின் கட்டளையின் கீழ் சிறப்புற செயற்பட்டு பலகளங்களை கண்ட மேஜர் இனிதன் 2007.09.27 அன்று முகம்மாலையில் சிறீலங்காப்படையினரின் படைநகர்விற்கு எதிரான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

ஓயாத அலைகள் 2இல் வீரகாவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்

27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம் நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ !! எங்களைப் பார்க்க வேண்டம் எனக் கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் !!!! லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா),… Read More ஓயாத அலைகள் 2இல் வீரகாவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் நினைவு சுமர்ந்து

“தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? “இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.” ” தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்புதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத்… Read More தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் நினைவு சுமர்ந்து

மூத்த தளபதி கேணல் சங்கர்

வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்26-09-2001 தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த… Read More மூத்த தளபதி கேணல் சங்கர்

வேரில் விழுந்த மழை தியாகதீபம் திலீபன்-காணொளி

வேரில் விழுந்த மழை என்ற காணொளியை தியாகதீபம் திலீபனின் 23ம் ஆண்டு நினைவாக வெளியீட்டுள்ளோம் ———வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில் தியாக தீபம் திலீபன் பாடல்

லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள்

25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். வீரமரணம் 25-09-1992 லெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன்… Read More லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தது

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தது

Lt. Col. Thileepan – Rasaiah Parthipan and Vaithilingam Sornalingam B.Sc. – Colonel Shankar

“…Our Liberation struggle has achieved tremendous victories at great cost. All these achievements were victories which our movement earned in the course of our armed struggle. But my dear comrade Thileepan’s death is different from everything else ; it is something to be pondered over because it is something qualitatively different…. My dear people, for… Read More Lt. Col. Thileepan – Rasaiah Parthipan and Vaithilingam Sornalingam B.Sc. – Colonel Shankar

வான்படை தளபதி கேணல் சங்கர்

தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார். கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார். வான்புலிகள் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு ஆரம்பிக்கப்படமுன்னர் கடல்புறா என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகள் இடம்பெற்றகாலத்தில் கடல்புறாவின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அவர்… Read More வான்படை தளபதி கேணல் சங்கர்