"துன்கிந்த" வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்

30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், 30.10.2006 அன்று… Read More "துன்கிந்த" வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்

தனித்துவமான போரியல் அம்சங்களுடன் திகழ்ந்த மகளீர் போரணிகள்

இராணுவத்தில் பெண்கள் – உடற் பலமும் மன பலமும் உள்ள பெண்களால் இராணுவ சேவையில் ஆண்களைப் போல் செயற்பட முடியும் அரசியலிலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை. பெண்களும் சாதிக்க பிறந்தவர்கள் என்பது வரலாற்றுச் செய்தி. சுவீடன் நாட்டு உடற் கூறியல் விஞ்ஞானி டாக்டர் லென்னார்ட் லெவி செய்த ஆய்வில் பெண்களின் தாக்குப் பிடிக்கும் வலு பற்றிய திறன் கூறும் தகவல் வெளிவந்துள்ளது அவர் தனது ஆய்வுக்கு 20க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதினரான 32… Read More தனித்துவமான போரியல் அம்சங்களுடன் திகழ்ந்த மகளீர் போரணிகள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒரு தமிழ்ச்செல்வம்

தமிழ்ச்செல்வம் ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பலவீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர்நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றிகாலந்தோறும் தன் புகழைப் பன்மடங்காகப் பெருக்கும் ‘சே’யின் மறைவின் நினைவினை உலகம் அண்மையில்தான் மலர்த்தி முடித்திருந்தது. இவ்வேளையில் இப்பொழுது இன்னொரு பலியெடுப்பு. இன்னொரு கொடுங் கோன்மை அரசால் பொலிவியாவின் வலே கிரான்ட்பகுதியில் இருந்து தமிழீழத்தின் கிளிநொச்சி வரை நீளுகின்ற பலியெடுப்புக்களிவை. ஆனால் ஒரு உயரியபோராளிக்குக் கிடைக்கக்கூடிய… Read More பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒரு தமிழ்ச்செல்வம்

12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 11.10.2006 அன்று முகமாலைப் பகுதியில் இராணுவத்துடனான முறியடிப்புச்சமரில் விழுப்புண் அடைந்து 29.10.2006 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் வீரவேங்கை தாமரைச்செல்வி அவர்களின் 4 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் .29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்… Read More 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்

26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற மோதலின்போது விழுப்புண்ணடைந்து 26.10.2001 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.… Read More கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்

கரும்புலிகள் சோபிதன், வர்மன், சந்திரபாபு வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் – 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும் வீரவணக்க நாள் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை… Read More சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

‘எல்லாளன் நடவடிக்கை’ – 21 வீரவேங்கைகள் விபரம்

எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள். இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். லெப்.கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது… Read More ‘எல்லாளன் நடவடிக்கை’ – 21 வீரவேங்கைகள் விபரம்

"எல்லாளன் நடவடிக்கை" கரும்புலிகளின் 3ம் ஆண்டு வீரவணக்கம்

“எல்லாளன் நடவடிக்கை”22-10-2007 ‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.” கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. தாயக மண்ணே எல்லாளன் திரைப்பாடலும் எல்லாள்ன்களும்… Read More "எல்லாளன் நடவடிக்கை" கரும்புலிகளின் 3ம் ஆண்டு வீரவணக்கம்