மாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து நினைவுகூருவோம் (காணொளி)

தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் தமிழீழ தேசமெங்கும் கொடிபரப்பி பூத்துக் குலுங்கும். கார்த்திகைப் பூச் சின்னம் கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. தாய் மண்ணிற்காக மரணித்த மாவீரர்களின் உயரிய தியாகங்களே தமிழீழத்தின் உரமாக, தொடரும் போராட்டத்தை முன்னெடுக்கும் இளையோரின் உயிருக்குள் உறைந்திருக்கின்றன.

இவ்வாறு எம்முயிர் காக்க தம்முயிர் நீர்த்து இன்று மலரப்போகும் தமிழீழத்தின் விதைகளாகி எமது இதயத்தில் வீற்றிருக்கும் வீரவேங்கைகளை நினைவூட்டும் முகமாக இக்கார்த்திகைப்பூச் சின்னங்களை எமது இதயத்திற்கு அருகில் அணிந்து கொள்வோம். சாவினை கழுத்தில் கட்டி களத்தில் சரித்திரமாகிய 30,000ம் மாவீரர்களை இச் சின்னம் அணிந்து கார்த்திகையில் நினைவு கொள்வோம். கனடா வாழ் அனைத்து பல்கலைக்களக மற்றும் பாடசாலை மாணவர்கள், இச் சின்னத்தை ஒன்றிணைந்து வெளியிட்டுள்ளனர். அத்தோடு, அனைத்து வியாபர மற்றும் வாணிப நிலையங்களிலும் இச் சின்னத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

கீர்தனா பத்மநாதன், ரொறொன்ரோ பல்கலைக்களகம் – மிசிஸ்சாகா மாணவி- பின்வருமாறு தெருவித்தார்

“மாவீரர் நாளானது, ஈழத்தமிழர் வாழ்வில் ஓர் தெய்வ மரியாதைக்குரிய நாளாகும். நான் இப்போது இரு பூக்களை அணிகின்றேன். ஒன்று கனடா நாட்டிற்காக போராடி இறந்த வீரர்களை நினைவூட்டும் லில்லி பூ போன்ற சின்னம், மற்றையது எனது தாய்நாடாம் தமிழீழத்திற்காய் களப்பலியான மாவீரர்களை நினைவூட்டும் கார்த்திகைப் பூ சின்னம். மாவீரர் நினைவுகளை நெஞ்சில் தாங்கும்வண்ணம் கனடா தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்டதையிட்டு நான் பெருமையடைகிறேன் ”

இவ்வகையில் தமிழீழ விடுதலைக்கு வித்திட்டு ஈழத்தமிழர் நெஞ்சில் அணையாத் தீபங்களாகிய புலிவேங்கைகளை நினைவுகூறும், அவர்களின் தியாகங்களை போற்றும் முகமாக கார்திகைப்பூ 2003ம் ஆண்டு தமிழீழத்தில் பிரகடணப்படுத்தப்பட்டது. தமிழீழத்தின் தேசியப் பூவான கார்திகைப்பூவை அனைவரும் மாவீரர் மாதமாகிய கார்த்திகையில் அணிந்து கொண்டு எமது சூரியப்புதல்வர்களாகிய மாவீர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s