ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரர்கள் வீரவணக்கம்

கு.முத்துக்குமார் 2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது. அவருக்கு வயது 26 சொந்த… Read More ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரர்கள் வீரவணக்கம்

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – 9

நித்திரை கொள்ளவே விடாது தூவாணம் அடித்தது. வீடு முழுக்க ஒரே ஒழுக்கு. என்ன செய்வது சமாளிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தவாறே அப்படியே தரையில் படுத்து நித்திரை கொண்டேன். திடீரென்று ஏதோ எனது காலை நக்கிறமாதிரியிருந்தது. கண்ணைத்திறந்து பார்த்தேன். ஒரு நாய்க்குட்டி. எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அந்த நாய்க்குட்டியையும் தூக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நித்திரை கொண்டேன். அதுவும் எனக்குப் பக்கத்தில் படுத்துவிட்டது. வாய் பேசாத ஜீவன் என்றாலும் அந்த நேரத்தில் ஒரு துணையைப் போல உணர்ந்தேன்.விடியப் போகுது… Read More நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – 9

2007,2008 தை வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

கல்லறைத் தொட்டிலிலே 2007 ,2008 தை காவியமான மாவீரர்களைச் சுமந்து- தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். ஈழவிம்பகம் 2007ம் ஆண்டு தை காவியமான மாவீரர்கள் #gallery-1 { margin: auto; }#gallery-1 .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 25%; }#gallery-1 img { border: 2px solid rgb(207, 207,… Read More 2007,2008 தை வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள்

வரலாற்றுப் பிண்ணனி தளராத துணிவோடு களமாடினாய் பாடல் போர்க்கைதிகள் விடுவிப்பு கைக்குண்டுத்தாக்குதலில் கால் இழந்தபின்னர் மக்கள் முன்தோன்றி பேச்சு சுதுமலையில் கேணல் கிட்டு அவர்களின் பேச்சு வைகோவுடன் கேணல் கிட்டு அவர்கள் கேணல் கிட்டு – கேடயமாய் காத்த எம்மக்களே பாடல் காணொலியில் கேணல் கிட்டு – வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் – I கேணல் கிட்டு – வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் – II கேணல் கிட்டு பற்றி தளபதி பொட்டு கேணல்… Read More கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள்

லெப்.கேணல்கள் காவியா, மதி உட்பட்ட 70 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்

விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001… Read More லெப்.கேணல்கள் காவியா, மதி உட்பட்ட 70 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்

கிட்டு ஒரு பன்முக ஆளுமை

வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத… Read More கிட்டு ஒரு பன்முக ஆளுமை

இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள்

‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ”இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை”” என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால்… Read More இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள்

கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்கம்

தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டுகேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993)சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக… எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ்… Read More கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்கம்

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம்.“வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும். விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது. உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே. அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்.… Read More இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்