தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் வீரவணக்கங்கள்

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை(பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிக மன வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழீழத்தாய் இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார். வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார். கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா… Read More தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் வீரவணக்கங்கள்

வான்கரும்புலிகள் 2ம் ஆண்டு வீரவணக்கம்

“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்”: வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் வான்கரும்புலிகளின் பாடல் வான்கரும்புலிகளின் தாக்குதல் காணொளி சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். வான்புலிகள் “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும்… Read More வான்கரும்புலிகள் 2ம் ஆண்டு வீரவணக்கம்

லெப்.கேணல் தவம் 3ம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப்.கேணல் தவம் . தவா(நாராயணபிள்ளை முகுந்தன்) திரியாய், திருமலைபிறப்பு 08.04.1966 -வீரச்சாவு 17. 02.2008 லெப்.கேணல் தவம் உழைப்பையே உயிராக்கி மலையானவன் மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு… Read More லெப்.கேணல் தவம் 3ம் ஆண்டு வீரவணக்க நாள்

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி 2 ம் ஆண்டு வீரவணக்கம்

பிரிகேடியர் தமிழேந்திதமிழீழ நிதிப் பொறுப்பாளர்(சபாரத்தினம் செல்லத்துரை)யாழ் மாவட்டம்10.03.1950 – 15.02.2009 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர் . 15.02.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார். ஈழவிம்பகம் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி/Thamilenthi-Head of the LTTE Financial Division

மேஜர் கேடில்ஸ் அவர்களின் 24ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

வீரஜனனம 14-05-1966வீரமரணம் 14-02-1987 போராட்டத்தின் நிழலில் பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கண்டாவளையிவ் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த… Read More மேஜர் கேடில்ஸ் அவர்களின் 24ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப்.கேணல் பொன்னம்மான் மற்றும் 9 மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப்.கேணல் பொன்னம்மான் 23-12-1956- 14-02-1987 ஈழ விடுதலைப்போரின் ஈடிணையில்லா வீரம் யாழ்ப்பாணம் யோகரத்தினம் குகன் என அறியப்பட்டு பொன்னன் எனப் புகழப்பட்டு அவன் வல்லமையினால் அரவணைப்பினால் அம்மான் என மகுடம் சூட்டப்பட்ட விழுதெறிந்த வீரம் தான் எங்கள் நினைவில் என்றும் வாழும் லெப்.கேணல் பொன்னம்மான். இந்த உன்னத வேங்கையின் உயிர்தியாகத்தை எமக்கு கற்பிதமாக்கியவர் கேணல் திலீபன் அவர்கள்… மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான… Read More லெப்.கேணல் பொன்னம்மான் மற்றும் 9 மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள்

வீரத் தமிழ்மகன் முருகதாசன் 2ம் ஆண்டு வீரவணக்கம்

வர்ணகுலசிங்கம் முருகதாசன்(டிசம்பர் 2, 1982 – பெப்ரவரி 12, 2009) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர். அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு… Read More வீரத் தமிழ்மகன் முருகதாசன் 2ம் ஆண்டு வீரவணக்கம்

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி 2 ம் ஆண்டு வீரவணக்கம்

ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 22-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின்… Read More நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி 2 ம் ஆண்டு வீரவணக்கம்