வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள். வான்புலிகள் இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் இன்று…!! வான்புலிகள் (Tamileelam Air Force – TAF)… Read More வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்

கடற்கரும்புலிகள் கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன்,கப்டன் வானதி ஆகியோரின் 14 ம் ஆண்டு வீரவணக்க நாள்

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் எதிரியுடன் களமாடத்துடித்த கடற்கரும்புலிகள். கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன் , கப்டன் வானதி ஆகிய எங்கள் வீரவேங்கைகள் எங்கள் தலைவனின் வழிகாட்டலில் 24.03.1997 அன்று எதிரியின் கடற்கலம் ஒன்று முல்லைத்தீவை நோக்கி வந்த அந்த கடற்கலத்தை தாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. மேயர் தமிழ்மாறன் கப்டன் வானதி மேயர் நாவலன் கப்டன் கலைவள்ளி எதிரியின் கடற்கலத்தை எதிர்பார்த்து கடற் புலிகளுடன் காத்திருந்து கடலில் சண்டையிட்டு எதிரியின் கடற்கலத்தை… Read More கடற்கரும்புலிகள் கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன்,கப்டன் வானதி ஆகியோரின் 14 ம் ஆண்டு வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் தனுசன் ,கரும்புலி மேஜர் சுதாஜினி வீரவணக்கம்

திருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது. நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் கொடுமையானதாக இருந்தன.… Read More கரும்புலி மேஜர் தனுசன் ,கரும்புலி மேஜர் சுதாஜினி வீரவணக்கம்

லெப் கேணல் வானதி /கிருபா 02 ம் ஆண்டு வீரவணக்கம்

லெப்.கேணல் கிருபா /வானதி நித்தியகரன் – மாலதி 21 / 03 / 2009 விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது தாயக களங்களில்… Read More லெப் கேணல் வானதி /கிருபா 02 ம் ஆண்டு வீரவணக்கம்

வெளித்தெரியா வெள்ளிகள் – 01

இதுவொரு காலத்தின் பதிவு. ஆங்கிலத்தில் நூலாக வெளிவரவிருக்கின்ற இப்பதிவின் தமிழ்ப்பதிப்பு தொடராக ஈழநேசனில் வெளிவருகின்றது. தமிழீழ விடுதலைக்காக புறப்பட்ட ஒருவனின் வாழ்க்கையோடு பயணிக்கும் இப்பதிவு – ஒரு சிறுமுயற்சியே. தாயகத்தமிழர்களின் வேதனைகளும் வலிகளும் அவர்களது தியாகப்பயணமும் இன்னும் தொடரும் நிலையில் வெளிவருகின்ற தொடர்பதிவு இதுவாகும். தமிழிலக்கிய பரப்பில் ஈழத்துபோராட்ட இலக்கியமும் முக்கியமானது என்ற வகையில் இதனை வெளியிடுகின்றோம். —————————————————— ”அம்மா நான் ஒருக்கா லைப்ரரிக்கு போட்டுவாறன்” எனச்சொன்ன கீதன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானான். ”ஒரே… Read More வெளித்தெரியா வெள்ளிகள் – 01

லெப். கேணல் ரவி வீரவணக்கம்

வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார். அமைதிகாக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த ராஜீவின்… Read More லெப். கேணல் ரவி வீரவணக்கம்

கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம்

1991.03.19 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது. “அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது. சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி… Read More கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம்

போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்

தாயகத்தின் கலையுலகில் குறிப்பாக வன்னியில் நன்கு அறியப்பட்டவர் லெப்.கேணல் சங்கர். மிகக் கம்பீரமான குரல் வளம் கொண்ட சங்கர் பதினைந்து ஆண்டுகளுக்கு கூடிய காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துப் பயணித்தவர். கலைத்துறை சார்ந்த செயற்பாடுகளில் கூடுதல் பங்குவகித்த சங்கர் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக நன்கு அறியப்பட்டவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கங்களில் கலைத் துறை அம்சங்களுடன் கூடுதலான அல்லது பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம் தெருவெளி நாடக நிகழ்வுகளாகும். இந்த… Read More போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம்

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி… Read More லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம்

ஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் 2ம் ஆண்டு வீரவணக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். ஆறு… Read More ஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் 2ம் ஆண்டு வீரவணக்கம்