தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா

விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது. குருக்கள் கந்தையா, ஞனாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார். இவர் தனது பதின்ம வயதில் நெல்லியடி… Read More தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா

ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

சிவராமின் நினைவுதினம் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் 6 ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.… Read More ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

தீச்சுவாலை எதிர்ப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்

புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ்நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் எல்லோருக்கும்… Read More தீச்சுவாலை எதிர்ப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, ‘புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்’ என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச்… Read More ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

அன்னை பூபதியின் 23ம் ஆண்டு நினைவு நாள் காணொளி

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது. தன் மக்களை அழிவிலிருந்து காக்க… Read More அன்னை பூபதியின் 23ம் ஆண்டு நினைவு நாள் காணொளி

கப்டன் பூங்குழலி ,கப்டன் ஈழவேந்தன் வீரவணக்கம்

18.04.1998 அன்று திருமலைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . கப்டன் பூங்குழலிசாமிநாதன் சின்னமலர்நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம்08.08.1976 – 18.04.1998 கப்டன் ஈழவேந்தன்ஆறுமுகம் வீரசிங்கம்சுழிபுரம் யாழ்ப்பாணம்15.03.1978 – 18.04.1998

லெப் கேணல் கலையழகன் வீரவணக்கம்

கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக் குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். ஆரம்பப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன்,… Read More லெப் கேணல் கலையழகன் வீரவணக்கம்

லெப்.கேணல் கிறேசி அவர்களின் வீரவணக்கம்

லெப்.கேணல் கிறேசிகணபதிப்பிள்ளை கோபாலபிள்ளைஇல.187, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி,கிளிநொச்சி19.08.1960 – 19.04.1991 மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ… Read More லெப்.கேணல் கிறேசி அவர்களின் வீரவணக்கம்

சமர்க்கள நாயகர்கள் நினைவுப் பகிர்வு ஒலிவடிவம்

பிரிக்கேடியர் சொர்ணம்http://www.box.net/embed/desg35o0fmtaj8u.swf ————-பிரிகேடியர் தீபன் ————-பிரிக்கேடியர் மணிவண்ணன்http://www.box.net/embed/7h369fls676lnu7.swf ——–http://www.box.net//static/flash/box_explorer.swf?widget_hash=y52bioo51s&v=0&cl=0&s=0