பிரிகேடியர் பால்ராஜ் 3 ம் ஆண்டு வீரவணக்கம்

பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள்

http://www.youtube.com/p/0C98213F62F21F93?hl=en_US&fs=1

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்


தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.




Reserved hero: Brigadier Balraj

In over two decades of service with the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Brig. Balraj, who passed away Tuesday after a heart attack, had been a courageous…

பிரிகேடியர் பால்ராஜ் 2ம் ஆண்டு வீரவணக்கம்

தமிழீழ தேசியத் தலைவர் அறிக்கை:தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.மே 21, 2008.எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது….

மக்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார். என்கிற செய்தி கடந்த 20ம் திகதி மாலை புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டதும் அதனை நம்புவது கடினமானதாக இருந்தது. அச்செய்தி மக்கள் மனங்களை இடிபோல் தாக்கியது….

மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “”என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந் தான். அவன் யாரெனத் தெரியுமா உங்க ளுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன்,…

பிரிகேடியர் பால்ராஜ் 1ம் ஆண்டு நினைவு வணக்கம்

மாவீரன் பால்ராச்

சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து…

மதிப்புக்குரிய தளபதி

இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம்.ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள்…

வீரர்கள் மதிக்கும் வீரன்

முதற்பயணம்அது 1984 ஆம் ஆண்டு.செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது.அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர்.விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத்…

பிரிகேடியர் பால்ராஜ் – ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்

வானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது. வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம்;. போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத…

பிரிகேடியர் பால்ராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s