உகண கப்பல் மீதான கரும்புலித்தாக்குதல் கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்
26- 06- 2000 அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள். “அடிக்கடி வீட்டை வா மோனை” என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் “கிட்டடியில வந்திடுவன் அம்மா” அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில்… Read More உகண கப்பல் மீதான கரும்புலித்தாக்குதல் கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்