லெப்.கேணல் ஜஸ்ரின் வீரவணக்கம்

29.08.1991 அன்று ஆரம்பித்த மின்னல் என்ற பாரிய படையெடுப்பு தமிழீழத் தாயகத்தை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 26 செப்டம்பர் வரையான 28 நாட்கள் நீடித்த இச் சமரில் எமது முதுநிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட எம் 236 வீரர்கள் வீரச்சாவடைந்து தேசத்தைக் காத்தனர். pdf லெப்-கேணல்-ஜஸ்ரின் Advertisements

2ம் லெப்டினன்ட் பூபாலினி வீரவணக்கம்

ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணம் 2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம். அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள்.… Read More 2ம் லெப்டினன்ட் பூபாலினி வீரவணக்கம்

கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) கப்டன் மணியரசன் வீரவணக்கம்

கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 18ம் ஆண்டு நினைவு நாள். திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.  

லெப்.கேணல் ராஜன் வீரவணக்கம்

புலிகளின் முதன்நிலைத் தளபதிகளுள் ஒருவரான ராஜன் இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் திறமையாகச் செயற்பட்டு தலைவரின் பாராட்டைப் பெற்றவர். சக போராளிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த இவர் மாதகல் பகுதியில் இராணுவம் மீதானா தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) , கப்டன் மதன் வீரவணக்கம்

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 18ம் ஆண்டு நினைவுநாள் (26.08.1993) இன்றாகும். வன்னியில் (05.07.08) நடைபெற்ற நிகழ்வில் கரும்புலி மேஜர் நிலவனின் பாடல்களைக்கொண்ட “புதிய காற்று” குறுவட்டை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.

கேணல் ராயு வீரவணக்கம்

இன்று (25-08-2010) கேணல் ராயு அண்ணையின் நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.… Read More கேணல் ராயு வீரவணக்கம்

லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) வீரவணக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள்(24.08.2004)

மேஜர் நாயகன் வீரவணக்கம்

23.08.2001 இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது. இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல்.… Read More மேஜர் நாயகன் வீரவணக்கம்

லெப்.கேணல் யோகா – லெப்.கேணல் தாயசிலன் வீரவணக்கம்

20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பாவா(தயாசீலன்), தொண்டுநிறுவனங்களிற்கான மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட இணைப்பாளரான லெப்.கேணல் யோகா ஆகியோரின் 7ம் ஆண்டு நினைவு.