பிரபாகரன் வரலாற்றைப் படைத்தவன்

உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று. காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக… Read More பிரபாகரன் வரலாற்றைப் படைத்தவன்

Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்

** மேலும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures

பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி

இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும்,அவரது பயணத்தையும் நோக்கி,நுணுகப்பார்த்து தங்கள் தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை அவசரகதியில் எடுத்து ஏமாறுகிறார்கள். ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல் நேசிக்கப்படும் ஒரு அதிமானுடனாக அவர் இன்னும் கருதப்படுவதற்கு பின்னால் அவரின் ஒப்பற்ற ஆளுமையும்,தான் நேசித்த இலட்சியத்துக்காக எத்தகைய இடர்கள்வரினும் தொடரும் ஓர்மமும் நிறைந்தே காணப்படுகின்றது. இதோ,அவருடைய ஐம்பத்திஆறாவது பிறந்ததினமும் வந்துவிட்டது.மிகவும் இருள் சூழ்ந்த ஒரு குழப்பம்நிறைந்த பொழுதில் அந்த மனிதனின்… Read More பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி

தனியனாக நின்று தணலேற்றிய தலைவனின் தூரப்பார்வை..

இன்றைய மாவீரர் நாள்கூட இதற்கு முந்திய மாவீரர்நாட்களை விட வித்தியாசமாகிவிட்டது அதிசயம்தான். இந்த நாளை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை தேடும் புதியதொரு சவாலுடன் இந்த நாள் மறுபடியும் எம் கண்முன் மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாவீரர் நாள் வந்தாலும் சிங்கள தேசம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும். பலாலி முகாமில் இருந்து பனாகொட முகாம்வரை ” எங்கு விடியப்போகிறதோ..? ஐயோ..! எப்படி விடியப்போகிறதோ..? ” என்று சிங்கள இனவாதத்திற்கு கெடிக்கலக்கத்துடன் விடிவதுதான் மாவீரர் தினத்தின்… Read More தனியனாக நின்று தணலேற்றிய தலைவனின் தூரப்பார்வை..

அவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்!

இதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.என்று ஐம்பெரும் பூதங்களுக்குள்ளும் கலந்தவர்களாக என்று ஆயிரம் விதமான அர்ப்பணிப்புகளின் பெயர்கள். எங்கள் தேசப் புதல்வர்களின் பெயர்கள். என்ன செய்யப்போகின்றோம் இந்த மாவீரர்நாளிலும்…?இந்த மாவீரர்நாளிலும் போய்நின்று மனம்உருகி பூதூவுவோம்.… Read More அவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்!

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே நவம்பர் 27 (மாவீரர் நாள்) எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று வணக்கத்துக்குரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத்தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள். இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக… Read More தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு

கனவுகளைச் சுமந்தவர்கள் வழியில் நடப்போம்…

வரலாற்றின் இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மாவீரர் தின ஏற்பாடுகள் புலம்பெயர்ந்த மண்ணில் பலத்த நெருக்கடியை சந்தித்துள்ளது. உலக நாடுகளில் ஏற்பாடாகியுள்ள மாவீரர் தின நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக சிறீலங்கா புலனாய்வுத்துறையின் மிகப்பயிற்றப்பட்டவர்கள் பல்வேறு வேடங்களில் வெளிநாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து இயங்கும் சிங்கள ஊடகங்கள் தமிழர்களை அச்சுறுத்துகின்றன. -தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே- தமிழர் தாயகத்தில் அனைத்து மாவீரர் இல்லங்களையும் சிதைத்தழித்துள்ள சிங்கள தேசம், தங்கள் சொந்த உறவுகளுக்காக ஒரு… Read More கனவுகளைச் சுமந்தவர்கள் வழியில் நடப்போம்…

நமது மாவீரர்கள் நினைவாக ……..Fallen in the cause of the free‏

நமது மாவீரர்கள் நினைவாக …….. நவெம்பர் 27ஆம் திகதி நாம் நமது மதிப்புக்குரிய மாவீரர்களை நினைவு கூர்கிறோம். சென்ற மே மாதப் பேரழிவின் பின்பாக வரும் மாவீரர்நாள் என்பதினால் அது நமது தேசம், இனம் தழுவிய சோகதினமாகவும் அமைகிறது. ஈழத்தமிழர்கள் பெரிய இழப்புகளைச் சந்தித்தபோது எங்களுக்கு தம் ஆதரவை வழங்குவதற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழகஉறவுகள் முத்துக்குமரன்,ரவிச்சந்திரன்,தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம் ….. போன்றோர்,ஜெனிவாவில் உயிர்த்தியாகம் செய்த இங்கிலாந்துத் தமிழர் முருகதாசன் என்போரின் தியாகவேள்விகளால் இந்த மாவீரர்நாள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள்… Read More நமது மாவீரர்கள் நினைவாக ……..Fallen in the cause of the free‏

தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் காணொளி

தேசியத் தலைவரின் 50வது அகவையை ஒட்டி நிதர்சனத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழர்களின் நிமிர்வு முழுமையான காணொளி பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு

தாய்க்கு நிகர் தலைவன்

நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு… என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். “ஒமண்ணை” என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும்… Read More தாய்க்கு நிகர் தலைவன்