பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்

31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் . லெப் கேணல் ஈழப்பிரியன் பிரியா என் அன்பு நண்பனே உனக்கு என் வீர வணக்கங்கள்..ஈழப்பிரியன்… ஆரம்பத்தில் இருந்தே.. அரசியல் துறைப்பொறுப்பாள்ர் பிரிகேடியர் சு.ப. தமிழ்… Read More பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்

லெப்.கேணல் நம்பியின் வீரவணக்க நாள்

மணலாறு கோட்டத்தில் 30.12.2000 அன்று தவறுதலாக இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நம்பி (துசி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.  

லெப்.கேணல் நிலவன் வீரவணக்கம்

கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் அவர்களின்  வீரவணக்க நாள் (26.12.2007) ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன். லெப்.கேணல் நிலவன் பாடல் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து… Read More லெப்.கேணல் நிலவன் வீரவணக்கம்

மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 28.12.1994 அன்று பூமாஞ்சோலை படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகள் லெப்.கேணல் லக்ஸ்மன் – பொம்பர் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் – வாழைச்சேனை, மட்டக்களப்பு) மேஜர் துவாரகன் – பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)… Read More மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம்

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால்… Read More மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம்

எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள்

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் பிறப்பு: ஜனவரி 17.1917 நாவலப்பிட்டி, இலங்கை இறப்பு: டிசம்பர் 24.1987 தமிழ்நாடு, இந்தியா தொழில்: நடிகர், அரசியல்வாதி வாழ்க்கைத் துணை: தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி பிள்ளைகள்: கிடையாது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பெருந்தொகை நிதியை அளித்து போராட்டத்தை முன்னெடுக்க உதவியிருந்தார். பிரபாகரனை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று பிரபாகரன்… Read More எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள்

லெப்.கேணல் அப்பையா அண்ணை வீரவணக்கம்

எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.… Read More லெப்.கேணல் அப்பையா அண்ணை வீரவணக்கம்

நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் வீரவணக்கம்

வி.நவரத்தினம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருது தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள்… Read More நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் வீரவணக்கம்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பாடல்கள்

நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவன் ஓய்ந்து போனதே எம் உயிரின் பாடலே ராஜ பறவை சிறகைவிரித்து உயரப் போனது புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்றால் மரணம் தான்.

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நாள்

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார். ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.… Read More ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நாள்