எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக

சிங்களபேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தியபடியே, எங்களின் ரத்தஉறவுகளை சிதறடித்தபடியே முன்னேறிவந்த ஒரு பொழுது அது. மரணவலயத்தை நோக்கி எமது மக்கள் கூட்டம கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்த நேரம்அது. தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக அடக்கப்பட்டு உரிமைமறுக்கப்பட்ட தேசியஇனமொன்றின் உன்னதமான விடுதலைப்போராட்டம் உலகின் கண்களுக்கு முன்னாலேயே கருவறுக்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுதும் அதுதான். வன்னிப்பெருநிலத்தின் ஒரு சிறுநிலத்துண்டில் சின்னஞ்சிறுசுகளும், குழந்தைகளும், பெண்களும், முதியோரும் ஆக்கிரமிப்புப்படைகளின் குண்டுவீச்சுக்களால் உடல் சிதறி வீழ்ந்துகொண்டிருந்த… Read More எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக

ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்

  கு.முத்துக்குமார் 2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது. அவருக்கு வயது 26… Read More ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்

லெப்.கேணல்கள் காவியா, மதி உட்பட்ட 70 மாவீரர்களின் வீரவணக்க நாள்

விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின்  நினைவு வணக்க நாள் இன்றாகும். நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று… Read More லெப்.கேணல்கள் காவியா, மதி உட்பட்ட 70 மாவீரர்களின் வீரவணக்க நாள்

கேணல் கிட்டு அவர்களின் அழகான ஆளுமை

“ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன” “அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்.போராடினான்” “போர்க்களத்தில் வீரனாகவும்பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின்வீச்சு நிறைந்திருந்தது” “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.” “நீண்ட ஓய்வில்லாதபுயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு அவன்” “நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக நான் அவனை நேசித்தேன்.” “எனது சுமைகளை தாங்கும் இலட்சியதோழனாக நான் அவனை நேசித்தேன்.இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாற்பட்டது” “அதுவும்… Read More கேணல் கிட்டு அவர்களின் அழகான ஆளுமை

கேணல் கிட்டு வீரவணக்கம்

எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் “என் ஆன்மாவை பிழிந்த ஓர் சோக நிகழ்வு அதை சொற்களால் வர்ணிக்க முடியாதென்பது” தலைவர் மொழிந்தவை. “மனதின் ஆழத்து உள்ளுணர்வுகளை வார்த்தையில் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பி விடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனித மொழிகளில் விபரிக்க முடியாது.எனது அன்புத்தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனை சொற்களால் வார்த்து விடமுடியாது.” “நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக… Read More கேணல் கிட்டு வீரவணக்கம்

உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்

இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத – புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர், இராணுவ கோட்பாட்டாளர்கள் பலரின் போரியல் சமன்பாடுகளுக்குள் புலிகளை அடக்க முடியவில்லை.  அவர்களின் கணிப்பீடுகள், மதிப்பீடுகள் இன்று தமிழீழத்தில் கலைத்துப் போடப்பட்டுள்ளன. உலக இராணுவ மேதைகளினதும் படைவரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்குள் அடங்க முடியாமல் திமிறிக்கொண்டு நிற்கிறது புலிகள் சேனை. புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயழிய உற்றுப்பார்க்க முடியவில்லை. காற்றைப்போல் அலையும்… Read More உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்