தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… ! தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன் 30ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு… Read More தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்

கரும்புலி மேஜர் ஆந்திரா வீரவணக்கம்

அவள் குறும்புக்காரி ஏதாவது கதை சொல்லி மற்றவர்களை கொல்லெனச் சிரிக்கவைத்துவிடுவாள். சின்ன வயதில் சைக்கிள் ஓடப்பழகிய ஆரம்ப நாட்களில் இவளுக்குச் சைக்கிள் ஓடப்பழக்கியது அண்ணன்தான். மண் ஒழுங்கைகள் எல்லாம் அவன் சைக்கிளைப் பிடிக்க அவள் ஓடுவாள். ஒவ்வொரு அடிதூரம் போகவும் அவன் கையை விட்டுவிடுவானோ என்ற பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்ப்பாள். “நேர அந்த வீட்டைப்பார்… நேர அந்த வீட்டைப்பார்” என்று அண்ணன் அடிக்கடி கத்துவான். அவள் தயங்கித் தயங்கி நேரே பார்த்து ஓட முயன்றாள். அவன்… Read More கரும்புலி மேஜர் ஆந்திரா வீரவணக்கம்

கேணல் இளங்கீரன் வீரவணக்கம்

வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில்… Read More கேணல் இளங்கீரன் வீரவணக்கம்

மாமனிதர் ஜெயக்குமார் வீரவணக்கம்

வீழ்ந்துபோன பெருவிருட்சம் மாமனிதர் ஜெயக்குமார் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மேற்குலக நாடுகளிலிருந்து கொண்டு வலுச்சேர்த்தவர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார் இவரைப்பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். சாவுச் செய்தியையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையும் தவிர்த்து இவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். 29.03.2007 அன்று வியாழக்கிழமை அதிகாலை திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் மெல்பேணில் அவரது வீட்டில் தனது 56 ஆவது வயதில் அகால மரணமடைந்தார். இறப்பின்பின் தமிழீழத் தேசியத்தலைவரால் தமிழீழத்தின் அதியுயர் விருதான ‘மாமனிதர்’ விருது வழங்கிச்… Read More மாமனிதர் ஜெயக்குமார் வீரவணக்கம்

3 ம் ஆண்டு வீரவணக்கங்கள்

  தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார். இதன் ஊடாக ஊடகப்… Read More 3 ம் ஆண்டு வீரவணக்கங்கள்

வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள். வான்புலிகள் இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் [ மார்ச் 26, 2007 ] இன்று…!! வான்புலிகள்… Read More வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்

கடற்கரும்புலிகள் மேஜர் நாவலன் , தமிழ்மாறன்,கப்டன் வானதி , கலைவள்ளி வீரவணக்க நாள்

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் எதிரியுடன் களமாடத்துடித்த கடற்கரும்புலிகள். கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன் , கப்டன் வானதி ஆகிய எங்கள் வீரவேங்கைகள் எங்கள் தலைவனின் வழிகாட்டலில் 24.03.1997 அன்று எதிரியின் கடற்கலம் ஒன்று முல்லைத்தீவை நோக்கி வந்த அந்த கடற்கலத்தை தாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. எதிரியின் கடற்கலத்தை எதிர்பார்த்து கடற் புலிகளுடன் காத்திருந்து கடலில் சண்டையிட்டு எதிரியின் கடற்கலத்தை சேதமாக்கி தமிழீழ வீரத்தின் வரலாற்று சொந்தமாக வீரமரணம் அடைந்தார்கள். இந்த… Read More கடற்கரும்புலிகள் மேஜர் நாவலன் , தமிழ்மாறன்,கப்டன் வானதி , கலைவள்ளி வீரவணக்க நாள்

கரும்புலிகள் மேஜர் தனுசன் ,மேஜர் சுதாஜினி வீரவணக்கம்

திருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது. நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் கொடுமையானதாக இருந்தன.… Read More கரும்புலிகள் மேஜர் தனுசன் ,மேஜர் சுதாஜினி வீரவணக்கம்

லெப் கேணல் வானதி /கிருபா வீரவணக்கம்

லெப்.கேணல் கிருபா /வானதி நித்தியகரன் – மாலதி 21 / 03 / 2009 விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது தாயக களங்களில்… Read More லெப் கேணல் வானதி /கிருபா வீரவணக்கம்

லெப். கேணல் ரவி வீரவணக்கம்

வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார். அமைதிகாக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த ராஜீவின்… Read More லெப். கேணல் ரவி வீரவணக்கம்