தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார்.
இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார்.
அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார்.
மேலும், சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார். குறிப்பாக துடுப்பாட்டத்தில் இவர் சிறந்து விளங்கினார்.
இதே காலப் பகுதியில் வன்னிப் பகுதியில் நடந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டிகளில் இவர் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.
யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக செய்து வந்தார்.
சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தாயக விடுதலைப் போராட்டத்தில் எதிரியின் வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான களத்தில் லெப். கேணல் சிறீ தனது இன்னுயிரை ஈர்ந்தார்.
————————–
விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலி-ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர் லெப்.கேணல் மதியழகன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார்.
லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.
புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவரும் இவர் ஆவார்.
அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் இவர் திறம்பட நெறிப்படுத்தினார்.
ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன், சிறிலங்கா படையினருக்கு எதிரான களத்தில் எதிரியுடன் மோதி வீரச்சாவடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
———————————
————————————————
போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி
வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.
சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.
இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் லெப். கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.
ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்ட இவர், விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவில் இணைந்து மருத்துவ கல்வி கற்று மருத்துவர் ஆனார்.
மக்களுக்கான மருத்துவ பணிகளில் இவர் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டார்.
நான்காம் ஈழப் போரில் மடு தொடங்கி சகல பகுதிகளிலும் மக்களுக்கான மருத்துவ சேவையினை போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி செய்து வந்தார்.
————————-
லெப். வினோதினி (நற்குணம் ஜெயந்தி, மட்டு, மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்
07.02.2009
01-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
வீரவேங்கை எல்லாளன் (வேலாயுதம் சுதர்சன், யாழ். மாவட்டம், த.மு: ஆ. பகுதி, தேவிபுரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு)
லெப். அலைமதி (அமிர்தலிங்கம் ஜெயதாசன், திரு கோணமலை மாவட்டம், த.மு: பொன்நகர் மேற்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, வேறு முகவரி: 200 வீட்டுத் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
கப்டன் இளங்குமரன் (யோகப்பிரகாசம் திவாகரன், திருகோணமலை மாவட்டம், த.மு: வசந்தம் குடியிருப்பு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
கப்டன் மெய்யப்பன் (சிவசுப்பிரமணியம் வேலுகாசன், இல: 9802, திருவையாறு, கிளிநொச்சி)
லெப். கலைஒளி (விஜயரத்தினம் தட்சாஜெனனி, யாழ். மாவட்டம், த.மு: றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு)
மேஜர் சிந்துக்குமரன் – வேலன் (முத்துலிங்கம் அரியநாயகம், மட்டு, மாவட்டம்)
லெப். கேணல் மயூரதன் (செபஸ்ரியான் அரியநாயகம், மன்னார் மாவட்டம், த.மு: இரத்தினபுரம், கிளி நொச்சி, வேறு முகவரி சுதந்திரபுரம் உடையார்கட்டு;, முல்லைத்தீவு)
வீரவேங்கை மருதன் (ஆறுமுகம் தவகரன், முப்பெரும் தேவியார் கோவில், முன்பாக, உடையார்கட்டு, முல்லைத்தீவு)
கப்டன் அறிவு (ஆதிராம்பிள்ளை தேவநாயகம், பிரமந்தனாறு, விசுவமடு, முல்லைத்தீவு)
கப்டன் திருமாள் (மகாதேவன் பிரபாகர், திருமலை மாவட்டம், த.மு: ரகு திட்டம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)
Reblogged this on tamilellalan's Blog.