நாட்டுப்பற்றாளர் நல்லதம்பி ஐயா

தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட நல்லதம்பி ஐயா (G3 ஐயா) அவர்கள் 06 .08 .2012 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார். மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த நல்லதம்பி ஐயா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சுயமரியாதைக் கழகம் என்னும் பெயரில் பகுத்தறிவு அமைப்பைத் தோற்றுவித்த காலத்திலிருந்து, பின்னர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ஏற்பட்ட தமிழர் எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய எழுச்சிக்கும்… Read More நாட்டுப்பற்றாளர் நல்லதம்பி ஐயா

2ம் லெப் பூபாலினி வீரவணக்கம்

ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணம் 2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம். அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள்.… Read More 2ம் லெப் பூபாலினி வீரவணக்கம்

மெளனிக்கப்பட்ட கல்வித் தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் நினைவிற் கொள்வோமாக

வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச்சமூகத்தின் கல்வி… Read More மெளனிக்கப்பட்ட கல்வித் தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் நினைவிற் கொள்வோமாக

வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன் முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த ‘வீரத்தமிழிச்சி’ செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார். தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய… Read More வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்

கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் ,கப்டன் மணியரசன் வீரவணக்கம்

பருத்தித்துறைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் – கப்டன் மணியரசன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 29.08.1993 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமாக சுப்பர் டோறா அதிவேபீரங்கிப் படகினை தகர்த்து மூழ்டித்து, 1. கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) (சுப்பிரமணியம் நாதகீதன் – அரியாலை – யாழ்ப்பாணம்) 2. கடற்கரும்புலி கப்டன் மணியரன் (வேதநாயம் ராஜரூபன் – குடத்தனை, மணற்காடு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ… Read More கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் ,கப்டன் மணியரசன் வீரவணக்கம்

தலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்

1975ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுகநகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும். முருகா!… முருகா! சந்நிதி!……முருகா!…… ‘விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத்துணை ‘முருகா’ வெனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன்… Read More தலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்

போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5

துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்த குமிழ்முனைப் பேனாவினால் T.N.T என எழுதிவிட்டு அதனைமேலும் அழகுபடுத்தும் முயற்சியில் கலாபதி ஈடுபட்டிருந்தார்.  T.N.T என்பது ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற தமிழ்ப்பதத்தினை நேரிடையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்பதால் உருவாகும் TAMIL NEW TIGERS என்பதன் முதலெழுத்துக்கள் இணைந்த குறியீடாகும். 1974 இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பி பிரபாகரன் சந்தித்துக் கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ. இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்த இடமாக கொண்ட இவர்… Read More போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5

லெப்.கேணல் ராஜன் உட்பட்ட 9 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில் மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்) (சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கணேஸ்) (புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை) கப்டன் வன்னியன் (கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு) லெப்டினன்ட் தயாபரன்… Read More லெப்.கேணல் ராஜன் உட்பட்ட 9 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

அம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் – தம்புலுவில், அம்பாறை) கப்டன் கமால் (கந்தையா செல்வராசா – அம்பாறை) கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை… Read More லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம்

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் நினைவுநாள் (26.08.1993) இன்றாகும். 26.08.1993 அன்று கிளாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி, கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்… Read More கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம்