தலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்

1975ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுகநகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

முருகா!… முருகா! சந்நிதி!……முருகா!……
‘விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை ‘முருகா’ வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’!…….
{கந்தரலங்காரம்}

1975ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுகநகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

துறைமுகப் பணியாளர்கள் சீமேந்துதொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அயல்க்கிராமங்களில் இருந்துவரும் பலநூற்றுககணக்கான மக்கள் என எப்பொழுதும் சனசந்தடிமிக்கதாகவே இருக்கும் இந்நகரத்தின் பஸ்நிலையம் கிழக்கு மேற்க்கான பருத்தித்துறை கீரிமலை வீதியில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிவரும் யாழ்–காங்கேசன்துறை வீதியும் இணையும் முச்சந்தியின் வடக்குப்புறமாக அமைந்திருந்தது. பஸ்நிலையத்தின் இடதுபுறமாக வீதிக்கு அணித்தாக அமைந்திருந்த ‘லக்கி’ சிற்றுண்டிச்சாலையும் எப்பொழுதும் ஓர்இரு வாடிக்கையாளர்களுடன்  ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.

யாழப்பாணவீதியில் நாலுமுழவெள்ளை நிறவேட்டியும் வெள்ளை முழுக்கைச் சட்டையை முழங்கைக்கு  மேலாகமடித்துவிட்டு நேர்த்தியாக வாரிவிடப்பட்ட தலையுடன் பஸ்நிலையத்தை நோக்கி அமைதியாக ஓரு இளைஞர் நடந்து கொண்டிருந்தார். பஸ்நிலையைத்தை நோக்கி வீதியின் வலதுபுறமாக அவர் நடந்து சென்றாலும் அவருடையகண்கள் அங்குமிங்கும் சுற்றிச்சுழன்று கொண்டே இருந்தன. பாலகனாகி சிறுவயதுகடந்து பாடசாலை மாணவனாகி இளைஞனாகிவிட்ட போதும் ‘அந்த ஒளிமிகுந்த கண்கள்’ தான் அவனை மற்றவர்களிடம் இருந்து எப்பொழுதும் வேறாக்கிக் காட்டும். அடையாளச்சின்னம்.

பேரொளிமிகுந்த அழகான அந்தப் பெரியவிழிகள். ஒரு அற்புதம்தான் ஆண்டவன் படைத்த உலக அதிசயங்களில் நிச்சயமாக அதுவும் ஒன்றுதான்!….. சந்தேகமேயில்லை. அமைதியாக நடந்துவந்த இளைஞரும் வீதிக்கு குறுக்காக நடந்து சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்த பஸ்நிலையத்தை அடைந்தார். மூன்று திசைகளில் இருந்துவரும் பஸ்களை எதிர்பார்த்து காத்திருந்த ஒருசில மக்களுடன் தானும் ஒருவனாகக் 763ஆம் இலக்க பஸ்ஸின் வரவை எதிர்பார்த்து மேற்குத்திசையினை நோக்கியவாறு ஓரமாகக் காத்திருந்தார்.

763ஆம் இலக்க பஸ் பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பலாலி மயிலிட்டி காங்கேசன்துறை என கடற்கரையோரமாக கீரிமலைக்குச் சென்று மீண்டும் அதே  வழியாகத் திரும்பிவரும் இதனை எதிர்பார்த்தே இவரும் காத்திருந்தார்.

இவர் பஸ் நிலையத்தை அடைந்த சிறிது நேரத்தில் 763 இலக்க பஸ்சும் பஸ்நிலையத்தில் வந்து நின்றது. சாவகாசமாக பஸ்சில் ஏறிய இளைஞரும் சாரதியைப்பார்த்து இலேசாகப் புன்னகைத்தவாறு எந்தப்பதற்ற மும் இன்றி பஸ்சாரதியின் ஆசனத்திற்குபின்னல் இருந்த இரண்டாவது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இதன் மூலம் அந்த இளைஞரும்  சில நாட்களாகவேனும் அதேபஸ்சில் தொடர்ந்து பயணம் புரிகின்றார் என்பதை அறிந்துகொள்ளலாம்.  காங்கேசன்துறை பஸ்நிலையத்தில் இருந்து பஸ் புறப்படவும் ‘லக்கி’ சிற்றுண்டிச்சாலையின் முன்பாக நின்ற இருவர் ஓடிவந்து முன்கதவினூடாக ஒருவரும் பின்கதவினூடாக ஓருவருமாக ஏறிக்கொண்டனர்.. முன்கதவுவழியாக ஏறியவர் நமது இளைஞர் இருந்த ஆசனத்திற்கு இடதுபுறமாக நடைபாதைக்கு அருகிலிருந்த ஆசனத்தில் இளைஞரைப் பார்தபடி அமர்ந்து கொண்டார். பின்னால் ஏறியவரோ பின்கதவால் யாரும் இறங்கமுடியதவாறு வழியை மறித்தவாறு பின்கதவின் மிதிபலகையிலேயே நின்றுகொண்டார்.

இடையிடையே குறிப்பிடும் இளைஞரை  கவனித்தவாறே நின்றார். முன்கதவால் ஏறியவரே அல்லது பின்கதவால் ஏறியவரோ பற்றுச்சீட்டு எதனையுமும் நடத்துனர் இடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை.

நடக்கும் சம்பவங்களைப் பார்த்தவாறு இருந்த இளைஞருக்கோ சிறு சந்தேகம் பொறிதட்டியது. யார் இவர்கள்? அவர்கள் இருவரையுமோ அல்லது ஒருவரையோ அண்மையில் சிலநாட்களாக அடிக்கடி பார்ப்பதான ஞாபகம்? தன்னைத்தான் பின்தொடர்கிறார்களா? ……. ஊகூம். எனினும் தனது இடையைத் தட்டிப்பார்த்தவாறு இடையிடையே இருவரையும் கடைக்கண்னால் நோட்டமிடவாரம்பித்தார். ‘மடியில் கனம்இருந்தால் வழியில்பயம்; வரத்தானேவேண்டும.;’ தன்னைத்தான் கவனிக்கிறார்கள்!…….. புரிந்து கொண்டார். அடுத்து வருவதை எதிர்பார்த்து எதற்கும் தன்னைத்தாயார் படுத்தியவாறு அடுத்த நிகழ்வுக்காகக் காத்திருந்தார் பஸ் ஓடிக் கொண்டிருந்தது.

பலாலிச்சந்தியில் இருந்த புறப்பட்ட பஸ் மனித நடமாட்டங்கள் அற்ற அல்லது அரிதாகக் காணப்பட்ட இடைக்காட்டைத் தாண்டி ‘மான்பாய்ந்த வெளியில் ஓடத்தொடங்கியது. பஸ் இப்பொழுது அச்சுவேலி தொண்டைமானாறு வீதியில் அமைந்திருந்த வெளிக்களநிலையத்தை கடந்து திரும்பியது. அப்பொழுதுதான் ஏதேட்சையாகக் கவனித்தார்.

அதுவரை பஸ்சுக்குப்பின்னால் வந்துகொண்டிருந்த A40 ரக கார் திடீர் என்று பஸ்சுக்கு முன்னால் வந்து நின்றது…….. சாரதி தீடீர் என்று பஸ்ஸைநிறுத்தவும் அதுவரை முன்கதவால் ஏறி தனக்கு இடதுபுறமாக சீற்றில் இருந்த நபர் திடீர் என்று எழுந்து சாரதியின் ஆசனத்திற்கு பின்புறமாக முதலாவது ஆசனத்தில் அமர்ந்திருந்தவரை துப்பாக்கியைக்காட்டி எழுந்து நிற்கச் செய்யவும் அதுவரைபின்கதவில் நின்றவரும் உடனடியாகமுன்னிற்கு வந்து  இருவரும் முன்சீட்டில் இருந்த நபரை வலுக்கட்டாயமாக பஸ்ஸிலிருந்து இறக்கமுற்பட்டனர்.

அதேசமயம் பஸ்ஸிற்கு முன்னால் திடீரென நிறுத்தப்பட்ட காரில் இருந்து வேகமாக இறங்கிய இருவர் பஸ்ஸின் முன்கதவுவரை ஓடிவந்து விட்டனர். அப்பொழுதுதான் இளைஞர் நன்றாக கவனித்தார் பலாத்காரமாக பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர் தன்னைப்போலவே வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை…… எப்பொழுது இவர் பஸ்ஸில் ஏறினார்?……… தனக்கு முன்பாகவா?  பின்பாகவா?  எப்படி நடந்தது? யார் அவர்?…….. அடுத்த சீற்றில் அமர்ந்திருந்தவரையும்  பின்னுக்கு நின்றவரையும் தொடர்ந்து கவனித்ததால் முன்சீற்றில் இருந்தவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே?…….. கணநேரத்தில் உணர்வுகள் உந்தித்தள்ளின!….. சிந்திக்கநேரமில்லை பஸ்ஸிலிருந்து  வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட நபரை காரில் தள்ளி ஏற்றியதும் கார் திரும்பி சென்றுவிட்டது.

ஒருசில கணங்களில் சுயநினைவிற்கு வந்த அவர் வலதுபுறம் திரும்பினார். ஆறுமுகவேலனின் சந்நிதியான் ஆலயம் தொண்டைமான் ஆறு கடந்து நேரெதிரே தெரிந்தது.    அதுவரை சஞ்சலப்பட்டு அலைபாய்ந்த இளைஞரது மனது தன்னையறி யாமலேயே கூறிக்கொண்டது ‘முருகா’….’முருகா’…. மனதுக்குள் மீண்டும் கேட்டது ‘முருகா முருகா’ எப்படிநடந்தது?   மூளையில் இருந்து மனதுக்கு சென்றதா?….. அல்லது மனதில் ஆழப்பதிந்திருந்த ‘முருகனே’ இளைஞரை மீறி வெளி வந்ததா?.

ஆத்திகமும் நாத்திகமும் அன்றிலிருந்து இன்றுவரை போராடிக் கொண்டே இருக்கின்றன!…… தொடர்கிறது போராட்டம் இன்னும் முடிவில்லை! ஆனால் நாத்திகவாதிகளில் பலர் இறுதியில் ஆன்மீகத்தை சார்ந்து விடுவதும் அல்லது நாத்திகம் பேசாமல் மௌனமாகி விடும் வரலாறும் இன்றுவரை தொடர்ந்து கொண்டேவருகின்றது.

ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே அனைத்தும் முடிந்து விடுகின்றது. பஸ்ஸில் ஒரே சலசலப்பு! யார் அந்த இளைஞன்? அவனைப்பிடித்துச் செல்பவர்கள் யார்? …… எதைப்பற்றியும் கவலைப்படாத மனிதர் போல சாரதி பஸ்சை மீண்டும் இயக்குகிறார். அடுத்த தரிப்பு தொண்டை மானாற்றுச்சந்தி!….. ஆம் சந்நிதி கோவிலின் இறங்குமிடம். வேகமாக எழுந்த இளைஞர் பஸ்ஸை விட்டு இறங்கி விடுகின்றார். ஆம் அவருக்கு புரிந்து விட்டது. யாரோ ஒரு அப்பாவி தனக்குப்பதிலாக கொண்டுசெல்லப்படுகிறார். ஆனால் யாரவர்?  சிந்திக்கநேரமில்லை. வேகமாக நடந்த இளைஞர்  நாதன் என்னும் தனது உதவியாளரின் வீட்டுக்சென்று அவரின் முலம்  தனது நன்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார்!…….

வேவில்பிள்ளையார் கோவிலடியில் அவசரமாக நண்பர்கள் கூடிக் கதைக்கின்றனர். நிச்சயமாக தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள் காவல் துறையினர்தான். உடனே சம்பந்தப்பட்டவர்கள்; இடம்மாற வேண்டும்! சில பொருட்களை இடம்மாற்ற வேண்டும்!……நண்பர்கள் வேகமாக செயல்படு கின்றார்கள்! ஆனால் காலையில்  குறியை தப்பவிட்டவர்கள் அன்று பிற்ப்கலில் அதேவிதமாக பஸ்சில் வரும் போது ஒருநண்பனை மடக்க்கிவிடுகின்றார்கள். அடுத்தநாள் அதிகாலையில் அடுத்த நண்பனும் மடக்கப்படுகிறார்.

சந்தேகமேயில்லை குறிவைக்கப்பட்டவர் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அழகிய கண்கள் கொண்ட இளைஞன் தான். 27.7.1975ல் நடந்த யாழ்மேயர் துரையப்பா கொலையை வெற்றிகரமாக துப்புத்துலக்கிய புத்திசாலிகளான தமிழ் இரகசியப்பொலிசார் இறுதியில் எப்படிப் பஸ்ஸினில் தமது நண்பனைக் கோட்டைவிடடனர்? நண்பனின் அங்க அடையாளங்களை மட்டுமல்லாது அவரைப்பற்றிய பல விடயங்களையும் விசாரணையில் தவறின்றிக் கூறிய காவல்த்துறையினர் எப்படி பஸ்ஸில் தமது நண்பனை விட்டுவிட்டு. ஆள்மாறி யாரோ ஒரு அப்பாவியைப்பிடித்தார்கள்;?

இன்றுவரை அந்த மூன்று நண்பர்கள் மட்டுமல்ல. இச்சம்பவத்தை அறிந்த எல்லோருக்கும் ஒரே கேள்விதான்.! பஸ்ஸில் வந்து காவல் துறையால்  அழைத்து செல்லப்பட்ட்வர் யார்? ஆனால் தப்பிக் கொண்டதும்   முருகனை அழைத்த இளைஞருக்கு அன்றே ஞானம் பிறந்தது. தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியும் எனப்புறப்பட்டவருக்கு அன்று தன்னைக்காப்பற்றியது தனது அதீதமான தன்னம்பிக்கையல்ல தன்னைமீறி தனக்குள்ளே ஒழிந்திருந்த ‘தெய்வநம்பிக்கை’ என்பதைப்புரிந்து கொண்டார்.

ஆம் அன்றுமுதல் அவர் ‘சன்னதி முருகனின் ‘ பக்தனானார்.  பசிக்கு உணவில்லை என காட்டுக்கு வேட்டைக்கு செல்பவர்களிற்கும் அவர் கூறுவது ‘மயிலைச்சுடாதே’….. காரணம் புரிந்தவர்களிற்கே தெரியும் மயில் முருகனின் வாகனமென்பது. தான்செய்யும் எக்காரியத்தையும் ‘சந்நிதி முருகனை’ நினைத்தே தொடங்கும். பழக்கமும் வழக்கமும் அவரிடம் ஏற்ப்பட்டது. கடல்கடந்த போதும் சந்நதி முருகனை எண்ணித் ‘திருப்போரூர்’ முருகன் கோவிலில் தனது திருமணத்தை 1984 இல் நடத்தினார்.

1984 ஒக்டோபர் 1ம் திகதி திருப்போரூர் முருகன் ஆலயத்தில் தலைவர் பிரபாகரனின் திருமணம்

பாய்க்கப்பல் மூலம் திரைகடலோடி திரவியம் தேடிய வம்சத்தில் வந்த அவர் தனது முதலாவது இயந்திரக்கப்பலின் கன்னிமுயற்சி வெற்றியடைந்ததும் 1985ல் ‘பழனி’ முருகனின் முன்னால் சந்நிதி முருகனைநினைத்து மொட்டை போட்டு தனது நேர்த்திக்கடனை தீர்த்துக்கொண்டார். பிறந்த குழந்தைக்கு தாய்பால் தவிர்த்து முன்முதல் வேறு உணவு கோவில்களில் ஊட்டப்படும் நாள் ‘அன்னப்பால் பருக்கல்’ எனப்படும்;. முன்சொன்ன இளைஞருக்கும் சன்னதிகோவிலிலேயே அன்னப்பால் ஊட்டப்பட்டது. அதனால்ப்போலும் சன்னதியில் அன்னப்பால் கொண்ட அக்குழந்தை பெரும் சகாப்தமாகி சரித்திரம் படைத்தது.

இப்போது உங்களிற்கும் புரிந்திருக்கும் 1975 செப்டம்பர் 16இல் சிங்கள அரசின் காவல்துறையினரிடமிருந்து ‘சந்நிதிமுருகனால்;’ காப்பாற்றப்பட்டவர் அல்ல முருகனால் ஆட்கொள்ளப்பட்டவர் வேறுயாருமல்ல சாட்சாத் மேதகு திரு. வேலுப்பிள்ளை ‘பிரபாகரன்’ ;தான். அன்று தம்பியாக இருந்தவர் அதன்பின் நம்பிக்கையுடன் 34வருடங்கள் ஈழத்தமிழினத்தின் அரசியல் பாதையை  நிர்ணயிப்பவராகவும் ஈற்றில் அனைத்து தமிழர்களின் தலைவிதியையும் தன்தலையில் சுமந்தவராகவும் வாழ்ந்து காட்டியவர் தேசியத்தலைவர் பிரபாகரன்.

இன்றையநிலையில் இவர் ஆட்சிக்காலம் மிகஅதிகம். தமிழர்களின் வரலாற்றில் இவர் இராஜ இராஜ சோழனைவிடவும் இரா  ஐந்திரசோழனைவிடவும் தமிழனையும் அவனது புலிக்கொடியையும் உலகம் எல்லாம் அடையாளம் காட்டினார். ஆம் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலம் வெறும் 28 வருடமே!……… அதையும் விட அதிககாலம் ஆண்டுகாட்டியவர் ‘தலைவர்’ பிரபாகரனே! ஏனெனில் கார்த்திகைப் பெண்களின் மடியில் தவழ்ந்தவர்’ பாலமுருகன்’ கார்த்திகைமாதம்  மண்ணில் பிறந்தவர்; ‘பிரபாகரன்’  இதுவிந்தைதான்!…… இன்னும் வியக்கும் இவ்வுலகம் !………

வருணகுலத்தான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s