லெப்.கேணல் நெடுங்கீரன் ,கப்டன் நிசாரின் வீரவணக்க நாள்

01.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நெடுங்கீரன்(நவம்) அவர்களின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 31.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் நிசாரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

மாவீரன் பண்டாரவன்னியனின் 209 ஆவது நினைவுநாள்

முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.… Read More மாவீரன் பண்டாரவன்னியனின் 209 ஆவது நினைவுநாள்

மேஜர். பிரான்சிஸ் வீரவணக்க நாள்

விடுதலை ஒளியாக,தமிழர் அரசியல் வானில் மேஜர். பிரான்சிஸ். கல்லாறு மண் ஈன்ற வீரப்புதல்வன். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பமும், விடுதலைப் போராட்ட எழுச்சியும் 1978 ஆண்டிலும், 1980 களிலும் தீவிரமடைந்திருந்தன….. …இவ்வெழுச்சியில் தமிழ் இளைஞர் பேரவையின் செயல்பாட்டிலிருந்த பலரும் இணைந்ததன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பல்வேறு மட்டத்திலும் ஆதரவும், அனுசரணையும் இருந்ததைக் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது. ஏனெனில் இவ்விளைஞர்களின் நேர்மையும், புரட்சிகரப் பார்வையும், இனத்தின் மீதிருந்த பற்றும் அளவிட முடியாதளவு… Read More மேஜர். பிரான்சிஸ் வீரவணக்க நாள்

“துன்கிந்த” கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாளும், 30.10.2006 அன்று… Read More “துன்கிந்த” கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

அளவெட்டியில் படைநிலைகளிற்குள் ஊடுருவித் தாக்குதல் 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 11.10.2006 அன்று முகமாலைப் பகுதியில் இராணுவத்துடனான முறியடிப்புச்சமரில் விழுப்புண் அடைந்து 29.10.2006 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் வீரவேங்கை தாமரைச்செல்வி அவர்களின் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் . 29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத்… Read More அளவெட்டியில் படைநிலைகளிற்குள் ஊடுருவித் தாக்குதல் 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட்ட மாவீரர்களின் நாள்

முல்லைத்தீவில் காவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, திருகோணமலையில் காவியமான கப்டன் அகத்தியன், கப்டன் நீலவாணன், 2ம் லெப். பூவிழி ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி (சின்னப்பு நந்தினி – செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இதேநாள் திருகோணமலை மாவட்டம் உப்பாறு… Read More கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட்ட மாவீரர்களின் நாள்

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி

தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று. “இந்த வாறன். இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ” என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக்… Read More கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி

கடற்கரும்புலிகள் மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

25.10.1995 அன்று வீரச்சாவடைந்த மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 17 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 25.10.1995 அன்று திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவடைந்த மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகிய வீர மறவர்களின் 17ம் ஆண்டு வீர வணக்க நினைவு நாள் இன்றாகும். 25.10.1995 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச்… Read More கடற்கரும்புலிகள் மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் – 4 நாகர்கோவில் தாக்குதலில் வீரகாவியமான கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

“ஓயாத அலைகள் – 4” நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன், கப்டன் சரத்பாபு ஆகியோரினதும், மட்டக்களப்பில் காவியமான லெப். அருள்மதன் என்ற மாவீரரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 24.10.200 அன்று “ஓயாத அலைகள் – 4” நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்காக நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றின்போது கரும்புலி மேஜர் சோபிதன் (துரைச்சாமி ஜீவகணபதி – மூன்றுமுறிப்பு, வவுனியா) கரும்புலி மேஜர் வர்மன் (மேனவன்) (வடிவேல் தங்கத்துரை – களுவாஞ்சிக்குடி,… Read More ஓயாத அலைகள் – 4 நாகர்கோவில் தாக்குதலில் வீரகாவியமான கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

திருகோணமலைத் துறைமுகத்தில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

திருகோணமலை துறைமுகத்தில் வைத்து மூன்று சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி உட்பட்ட ஆறு கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகத்தின் மீது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா கடற்படை பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகத்தினை நோக்கி கடுமையான மோட்டார் தாக்குதல் நடாத்தப்பட துறைமுகத்திற்குள் உள்நுழைந்த கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் சிறிலங்கா கடற்படையுடன் கடுமையாகச் சமரிட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். இதன்போது… Read More திருகோணமலைத் துறைமுகத்தில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்