லெப் கேணல் டேவிட் வீரவணக்கம்

கடலில் கலந்த….. டேவிட். தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் , எல்லாக் காலங்களிலும் , கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின் , தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில் , கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின் , அதே அளவு இடத்தை ,… Read More லெப் கேணல் டேவிட் வீரவணக்கம்

ஈழப்போர் – 4 ஆட்டிலறிகளின் போர்

ஈழப்போர் வரலாற்றில்: இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலையில் இருந்து உலகில் வேறெங்கும் நிகழாத வரலாற்றுப் பதிவை உருவாக்கிய பிரபாகரன் எனும் பிம்பம் மூன்றாம் கட்ட ஈழப்போருக்கும் நான்காம் கட்ட ஈழப்போருக்கும் இடையில் நிலவிய போர்நிறுத்த காலத்தில், ஒரு மென்தீவிர யுத்தம் நடந்தது யாவரும் அறிந்ததே. அந்தக் காலகட்டத்தில், இருதரப்புமே ஆட்டிலறிகள், மோட்டார்கள், கொண்டு மோதிக் கொள்ளாவிட்டாலும், தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் மோதிக் கொண்டன. துப்பாக்கிகள் மூலமும் மறைமுகமாக சண்டையிட்டன. ஒருவரையொருவர் போட்டுத்… Read More ஈழப்போர் – 4 ஆட்டிலறிகளின் போர்

புலிகளைச் சமபல நிலைக்கு உயர்த்திச் சென்ற ஈழப்போர்-3

ஈழப்போர் -1, 1983 தொடக்கம் 1987 வரை 4 ஆண்டுகளும், இந்திய – புலிகள் போர் 1987 தொடக்கம் 1990 வரை சுமார் இரண்டரை ஆண்டுகளும், ஈழப்போர் -2, 1990 தொடக்கம் 1994 வரையான கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளும், ஈழப்போர் -4, 2006 தொடக்கம் 2009 வரையான சுமார் 3 ஆண்டுகளும் நீடித்தது. ஒரு வகையில் சொல்லப் போனால், இருதரப்பையுமே முடிவில் களைப்படைய வைத்த போர் என்றால் அது, ஈழப்போர் -3 தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக… Read More புலிகளைச் சமபல நிலைக்கு உயர்த்திச் சென்ற ஈழப்போர்-3

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர் இயக்குனர் மணிவண்ணன் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் (வயது 59) மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.   என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார். நூறாவது நாள், 24 மணி… Read More தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர் இயக்குனர் மணிவண்ணன் காலமானார்

14.06.2003 சர்வதேச கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள்

14.06.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் விடுதலைப் புலிகளின் எண்ணெய்க் கப்பல் மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நிமால் (நிமல்) தங்கராசா செல்வக்குமார் கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் மணியரசன் முத்துலிங்கம் லவக்குமார் வவுனியா கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் துரை கைலேஸ்வரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர் செல்வரட்ணம் சசிந்திரன் யாழ்ப்பாணம்  ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த… Read More 14.06.2003 சர்வதேச கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள்

கடற்கரும்புலி – மேஜர் இளங்கோ / ஜீவரக்ஞ்சனின் வீரவணக்க நாள்

மூசும் அலை ஏறி போய் வெடித்தவன்… யாழ் – காரைநகர் சிறிலங்கா கடற்படைத் தளத்தினூள் ஊடுருவி தரித்து நின்ற இரு ” சவட்டன் ” ரோந்துப்படகினையும் ஒரு ” பேபி டோறா ” படகினையும் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீசச்சாவைத் தழுவிய ” கடற்கரும்புலி – மேஜர் இளங்கோ / ஜீவரக்ஞ்சனின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

கடற்புலிகளின் துணைத் தளபதி : லெப் கேணல் சாள்ஸ் வீரவணக்கம்

அன்றொரு காலம் … சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது. சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க எங்களது சாதாரண படகுகளால் முடியாது என்பதால் துரத்தில் கண்டவுடனேயே ஓடி மறைந்துவிட வேண்டும், வேறு வழியில்லை. எங்களது படகுகளை அழிப்பது அவர்களின் இலக்கு என்பதுடன், கலைப்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருந்தது. ஆனால் இன்று அந்நிலை நேர்மாறாக மெல்ல மெல்ல மாறி வந்துவிட்டது.… Read More கடற்புலிகளின் துணைத் தளபதி : லெப் கேணல் சாள்ஸ் வீரவணக்கம்

லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக்க நாள்

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் 10/06/2006 அன்று மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைந்த மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப்ரினன்ட் கேணல் மகேந்தி உள்ளிட்ட 4 மாவீரர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. ஒருமணி ஒலிக்கையில்…. மன்னார் மாவட்ட படைத்துறைத் தளபதி லெப்.கேணல் மகேந்தி இராசு மகேந்திரன் கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் கலைமாறன் சுப்பிரமணியம் நந்தகுமார் வெள்ளாங்குளம், மன்னார் லெப்டினன்ட் இளங்கோ இராசரத்தினம் விவேகானந்தன் கைதடி, நாவற்குழி,… Read More லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக்க நாள்

முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்

06-10-1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் சாதுரியன் நடராசா அரசரட்ணம் மட்டக்களப்பு கரும்புலி மேஜர் யாழினி சிவசுப்ரமணியம் ராகினி யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்) மாணிக்கம் அருள்ராசா மட்டக்களப்பு ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே… Read More முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்

பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்

1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள். பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள் புதிய சரிதம் எழுதி… இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக்கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..! ”… Read More பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்