ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல்… Read More ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

விடுதலை புலிகளின் சிறப்பு படையணி கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு

உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம். இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர.… Read More விடுதலை புலிகளின் சிறப்பு படையணி கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு

லெப். மாமா (பாலையா)

லெப்டினன்ட் மாமா (பாலையா) வின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும். 21.07.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகர்ப் பகுதியில் இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பில் எதிரியிடம் பிடிபடாமல் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டுக்கு அமைவாக சயனைற் விலையை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் மாமா (பாலையா) அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள். தமிழீழத்தின் தங்கமண் அன்னியநெருபில் அழிந்துகொண்டிருக்கிறது. பேரினவாதிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய தர்மயுத்தம் வெற்றியின் எல்லைகளை தொட்ட போதுதான் புதிதொரு அன்னியப்புயல் நம்மை ஆக்கிரமித்து… Read More லெப். மாமா (பாலையா)

லெப். சைமன்

எமது மாவீரரின் வீரம்செறிந்த விடுதலைப் போர்பற்றியும் இலட்சியப்பற்றுடன் இணைந்த இனப்பற்று, நாட்டுப்பற்று என்பவைபற்றியும் எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் செயல்பட வேண்டும். தம்மை இழந்து தமது இனத்தின் பெருமையையும் தாய்நாட்டின் விடுதலையையும் நேசித்த ஒவ்வொருவருக்கும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அழியாத வரலாறு உண்டு என்பதையும் ஆணித்தரமாக இங்கு பதிவாக வைக்கின்றோம். பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்). தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில்… Read More லெப். சைமன்

மேஜர் வேணுதாஸ்

உலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணிஅணியாகத்திரண்டு தமிழ்மானம் காத்த மாவீரர்களின் வரலாறு எமக்கு என்றும் வழிகாட்டியாகும். தமிழீழம் உயரிய இலட்சியக்கனவோடு சாவினை அணைத்திட்ட சரித்திரநாயகர்களின் வரலாறுகளை எமதுசந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அவர்களின் இலட்சியக்கனவுகள் அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பட்டு எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குநொக்கிய இலட்சியப்பயணத்தில் பல்வேறுதளங்களில் தங்களின் வரலாறுகளை பதிவுசெய்தநாயகர்களின் வரலாறுகளைப்பதிவுசெய்யும் முயற்சியே புனிதச்சுவடுகள் தொடர்…. இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர்… Read More மேஜர் வேணுதாஸ்

உலக தமிழினத்தையே நேசித்த தலைவன்.

மேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் !!!   இன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை, நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே. இனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற வீரமிக்க இனமொன்று இந்த… Read More உலக தமிழினத்தையே நேசித்த தலைவன்.

கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி

03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின்  ஆண்டு நினைவு நாள்

எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள் வீரவணக்கம்

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின்  ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது. இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின்… Read More எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள் வீரவணக்கம்

தளபதி சீலன்:அதோ அந்தப் பறவை போல…

(தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக இருந்த லெப்.சாள்ஸ்அன்ரனி(சீலன்) முப்பதாவது நினைவுதினம் 15.07.83அன்று வருகின்றது.அவனின் நினைவு சுமந்த ஆக்கம் இது) சிலவேளைகளில் மௌனத்தைப்போல ஆழமான மொழி வேறெதுவும் இல்லாமல் இருக்கும். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வை ஒருசில நிமிட மௌனம் உயிர்ப்பாக வெளிப்படுத்திவிடும். இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் 1983ம்ஆண்டின் இதே யூலை மாதத்து 15ம் நாளில் நீர்வேலியில் ஒருஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்த தங்குமிடம் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்த தேசிய தலைவருக்கும் சில போராளிகளுக்கும் முன்னால் இரத்தம்… Read More தளபதி சீலன்:அதோ அந்தப் பறவை போல…

கடற்புலிகள் துணைத் தளபதி லெப் கேணல் நிறோஜன்

கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்களது நெஞ்சில் அழியாத தடங்களாக பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி, இவன் சாதனைகளைப் பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் எனபது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும்.… Read More கடற்புலிகள் துணைத் தளபதி லெப் கேணல் நிறோஜன்