எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள் வீரவணக்கம்

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின்  ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

kks habour attack lttes

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது.

இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995

அதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இருக்கிக்கொண்டிருந்தன.

துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன.

” டோறா “ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு , ” சங்காய் “ பீரங்கிப் படகுகள் மூன்று.

இரும்புக் காவல்.

அலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள்.

” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “ கரும்புலி வீரர்களான நியூட்டனும் – தங்கனும் வெடிகுன்டுகளோடு ” எடித்தாராவை ” அண்மித்தார்கள்.

ஆரம்பித்தது உக்கிரமான சண்டை.

காங்கேசன் கடற்பரப்பு போர்க்களமாய் மாறியது.

எம் போராட்ட வரலாறு தன்னில் பதித்துக் கொண்ட மிகப் பெரும் கடற்சமர்.

” எடித்தாராவின் “ அடித்தளத்தை , வெடிகுன்டுகளோடு அணைத்து கரும்புலிகள் சிதறடித்தார்கள்.

அது நான்கு வரிகளில் எழுதிவிடும் சம்பவம் அல்ல. நாற்பதாண்டு காலச் சரித்திரத்தை மாற்ற அவர்கள் புரிந்த அரும்பெரும் செயல்….!

இராப்பகலாய் பட்ட கஷ்டங்களின் பெறுபேறு. வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளப்பரிய உயிர்த்தியாகம்.

” பெண் கரும்புலிகளின் ” ஒரு வெடிகுண்டு படகு , தரையிறங்கு களம் ஒன்றை நெருங்கியது.

அசுரவேகம். மிக அண்மைய…..!

போர்களங்கள் அபூர்வமானவை. அவற்றின் பொதுவான இயல்பு என்னவெனில் – நினைத்துப்போவது நிகழாமல் போகும் , நிகழ்ந்துவிடுவது நினையாதாய் இருக்கும்.

வெடிகுண்டுப்படகு சன்னங்கள் பாய்ந்து சேதப்பட்டுவிட தரையிறங்குகலம் தாக்கப்படவில்லை.

ஐந்து மணிநேரச் சரித்திரச் சமர் முடிந்து விடியும்பொழுதில் எங்கள் தாக்குதலணிகள் களத்தை விட்டு வெளியேறினர்.

கடலில் தவழும் அலையே நான்

கடற்கரும்புலி மேஜர் தங்கன்

கடற்கரும்புலி மேஜர் நியூட்டன்

கடற்கரும்புலி கப்டன் தமிழினி

நியூட்டன் – தங்கன் – தமிழினி ஆகிய கடற்கரும்புலிகள் வரவில்லை.

Kaangkesan-Thurai-Attack

பூநகரிச் சமரின் போது நாகதேவன் துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் முழ்கிப்போனதால் திரும்பி வரவில்லை…..!

அவர்களின் விபரம் வருமாறு

கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் – பதுளை – சிறிலங்கா)
கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் – குருநகர், யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் – திருகோணமலை)
கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி – இன்பருட்டி, யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு)
கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)***

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகனின் 23 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும்.

Lt Col Reegan

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகன்

16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.

இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.

தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

16.07.1990 அன்று பாலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

One thought on “எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள் வீரவணக்கம்

Comments are closed.