26.09.1999 முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்கம்

முல்லைக் கடற்பரப்பில் 26.09.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் செழியன், மேஜர் விடுதலை, மேஜர் நாதவேணி ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். https://www.facebook.com/karumpulimaveerarkal https://www.facebook.com/SymbolOfSupremeSacrifice

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் வீரவணக்கம் வான்படை தளபதி கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் Remembering Lt Col.Thileepan, Colonel Sankar Remembering Lt Col.Thileepan Air wing of ltte commander Colonel Shankar மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில்… Read More தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்

ஆவணம் : விழ விழ எழுவோம்-காணொளி

ஆவணம் : விழ விழ எழுவோம். வெளியீடு : மறுமலர்ச்சி பாசறை உலகமெங்கும் வாழும் மானமுள்ள தமிழ் சொந்தங்களே… உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்குறும்தகட்டினை முடிந்தவரை பதிவெடுத்து – இனம், மொழி பேதமற்று எல்லோரிடமும் தந்து நம் தமிழீழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு.  

தமிழீழ விடுதலைக் கானங்கள் Mp3 இறுவட்டுக்கள்

A Aaliperalai – Tamil Eelam Songs Aanaiyiravu – Tamil Eelam Songs Aathikka Alai – Tamil Eelam Songs Adikkatkal – Tamil Eelam Songs Agni Sudarkal – Tamil Eelam Songs Aiya Kumar Aiya – Tamil Eelam Songs Alai Paadum Parani – Tamil Eelam Songs Alaiyin Karangal – Tamil Eelam Songs Alaskavil Oddakangal – Tamil Eelam Songs Alayin… Read More தமிழீழ விடுதலைக் கானங்கள் Mp3 இறுவட்டுக்கள்

நாகர்கோவில் பள்ளி மாணவர் படுகொலையின் 18 ஆவது ஆண்டு நினைவு

நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில் மகா வித்தியாலயம் மீதான இலங்கை விமானப் படையினரின் விமானக் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள்… Read More நாகர்கோவில் பள்ளி மாணவர் படுகொலையின் 18 ஆவது ஆண்டு நினைவு

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி

நளாயினி படையணியின் நாயகி  கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி தமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திர்க்கான , ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறுதான். இந்தப் புதிய சரித்திரத்தின் கதாநாயகனாய் முன்னின்று , தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ,விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்தி நகர்த்திச் செல்கின்றார். தமிழீழ தனியரசை நோக்கிய இந்த நெடுவழிப்பதையில் , பெரிய பெரிய கனவுகளோடு அவர் பிரசவித்த குழந்தைகளில் ஒன்றுதான் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள். விடுதலைப் போராட்டம்… Read More கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி

கடற்கரும்புலி மேஜர் மங்கை

நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் காவலரண்களின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி பொறுப்பேற்றிருந்தது. இந்தியப் படையினரிடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களுடன் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன. கனரக ஆயுதங்களின்… Read More கடற்கரும்புலி மேஜர் மங்கை

லெப். கேணல் தர்சன் வீரவணக்கம்

கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன்  களத்திலெங்கும் ஒலித்த குரல்…Pdf.Lt Col Tharsan கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன் இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர்விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்தவண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் –… Read More லெப். கேணல் தர்சன் வீரவணக்கம்

ஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்…

அறிஞர் ஈழத்துப்பூராடனார்( க.தா.செல்வராசகோபால்) அவர்களால் எழுதப்பெற்று திரு. அருள்சுந்தரம் விஷ்ணுசுந்தரம், திரு. பொன்னம்பலம் சிவகுமாரன் ஆகியோரால் பதிப்பு கண்டுள்ள வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல் 2011 ஆவணியில் விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியத்தின் ஆதரவில் வெளிவந்துள்ளது. 292 பக்கத்தில் அழகிய வண்ணப் படங்களையும், பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் நிலப்படங்களையும் கொண்டு நேர்த்தியான அச்சில் குறிக்கோள் நோக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டாளர்களுக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும். நீராவிக் கப்பல்கள் அறிமுகத்தில் இருந்த காலச் சூழலில் பாய்மரக்கப்பல் கட்டுவதில்… Read More ஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்…

இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம் பத்திரிகை

ஈழத்திலே தினம் தினம் நடைபெறும் நாட்டு நடப்புகளையும் அனைத்துலக ரீதியாக இடம்பெறும் நிகழ்வுகளையும் தாங்கியவாறு மக்களது கரங்களில் தவழ்ந்து வந்த ஈழநாதம் மக்கள் நாளிதழ் 23வது ஆண்டில் எம் தேதத்தின் நினைவாக …. வன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்! 1990.02.19 அன்றுஆரம்பித்து பல இடர்பாடுகளுக்கு மத்தியில் 2009.05.10வரை ஓயாது மகத்தான மக்கள் பணியாற்றிய ஈழநாதம் மக்கள் நாளிதழ் 2013ம் வருடம் 22 ஆவது அகவை நிறைவு செய்து 23வது அகவையில்…. தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த… Read More இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம் பத்திரிகை