தாயக விடுதலைக்காக வித்தாகி காவியமானவர்களின் கதையில் உருவான குறும்படம் “காலம்”

தாயாக விடுதலைக்காக விதையாகிப்போன விடுதலை வித்துகளின் வீரம் செறிந்த வரலாற்றின் சிறு பதிவாக, ஒரு உண்மைக்கதையை மையமாக கொண்டு உருவாக்கபட்ட குறும்படம் காலம். விடுதலைக்காக தம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மண்ணுக்காக தியாகம் செய்த எத்தனையோ குடும்பங்களை திரும்பவும் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதமான ஒரு படைப்பாகும். இந்த குறும் படம் போராட்ட களத்தை நினைவு படுத்தினாலும் பிரான்ஸ் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இக்குறும்படத்தின் படத்தின் இயக்குனர் ரமணன், படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒப்பனை போன்றவற்றை விஜிதன் சொக்கா… Read More தாயக விடுதலைக்காக வித்தாகி காவியமானவர்களின் கதையில் உருவான குறும்படம் “காலம்”

தமிழீழத்தின் அடிக்கற்கள்

லெப்டினன்ட் சங்கர் செல்வச்சந்திரன் சத்தியநாதன் கம்பர்மலை – யாழ்ப்பாணம் லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞா. லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி திருகோணமலை வீரவேங்கை ஆனந்த் இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி – யாழ்ப்பாணம் லெப்டினன்ட் செல்லக்கிளி சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு – யாழ்ப்பாணம் கப்டன் ரஞ்சன் (லாலா) கனகநாயகம் ஞானேந்திரமோகன் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் கப்டன் பண்டிதர் (இளங்கோ) சின்னத்துரை ரவீந்திரன் கம்பர்மலை – யாழ்ப்பாணம் கப்டன் றெஜி சுப்பிரமணியம் மகேஸ்வரன் காரைநகர் – யாழ்ப்பாணம் மேஜர் அல்பேட் கந்தையா… Read More தமிழீழத்தின் அடிக்கற்கள்

உங்கள் கல்லறை மீதினில் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் .!

தமிழீழத்திற்கான விடுதலைப் போரில் களமாடி தமது உயிர்களை ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தியாகம் செய்த போராளிகளின் நினைவுதினம் இன்று. தமிழகம் உட்பட உலகின் எல்லா பகுதிகளிலும் வசிக்கும் தமிழ் மக்கள் இந்த நாளை நினைவுகூர்ந்து வருகின்றனர். சிறீலங்காவின் ஆக்கிரப்பின் கீழ் உள்ள தமிழீழத்திலும் தமிழ் மக்கள் தமது புதல்வர்களை மௌனமாக கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்றனது. உயிர்களைத் துறந்த மறவர்களுக்கு  தனது அகவணக்கத்தை வாசகர்களுடன் இணைந்து செலுத்துவதுடன், வாசகர்களின் ஆக்கங்களையும் இங்கு பதிவு செய்கின்றது. 0000000 மாணவர்கள் மீதான… Read More உங்கள் கல்லறை மீதினில் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் .!

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலைவர் பிரபாகரன் மயம்!!

“பிரபாகரன்” என்ற ஒற்றைச் சொல்லே தமிழகத்தில் புதிய சரித்திரத்தினைப் படைக்கப் போகின்றது!! தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் உலகம் எங்கும் உள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகள் மற்றும் மக்களின் உணர்வுகள் தொடர்பில் ஈழம்ஈநியூஸ் தனது முகநூலில் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட மற்றும் வாசகர்களிடம் இருந்து உள்வாங்கிய கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றது. தமிழகத்தின் ஏற்பட்டுள்ள மாற்றம் எமது விடுதலைப்போருக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக மாற்றம் பெற்று… Read More தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலைவர் பிரபாகரன் மயம்!!

மக்களுக்காக மடிந்த வீரமறவர்கள் தினம் ஒரு நோக்கு

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர்… Read More மக்களுக்காக மடிந்த வீரமறவர்கள் தினம் ஒரு நோக்கு

ஒற்றுமையை வலுப்படுத்தும் மாவீரர் நாள்

அன்பான எம்தமிழ் உறவுகளே! எமது தேசியவிடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள். தமிழரை இப்பூமிப்பந்தில் மீண்டும் தலைநிமிரச் செய்த எம் மாவீரச் செல்வங்களை ஒரு கண நேரம் எம் நெஞ்சிருத்தி அவர் நினைவுகளில் தடம்பதித்து தாயகவிடுதலைப்பயணத்தில் அனைவரும் அணிதிரள உறுதியெடுக்கும் எழுச்சி நாள். உலகத்தமிழினமே எம்வீரர் பாதம் பணிந்து கண்ணீர்ப் பூச்சொரியும் புனிதநாள். இது எமது தேசிய நாள். இந்நாளை 1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பரிமாண வளர்ச்சியுடன் விடுதலை வீரரின் தியாகத்தினை… Read More ஒற்றுமையை வலுப்படுத்தும் மாவீரர் நாள்

விளக்கத்தான் முடியுமா இந்த விளக்குகளை..

காவிய நாயகர்களுக்கு கல்லறை எதற்கு..? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவிதமாக ஒளிகாட்டும் மாவீரர் நாள் இந்த ஆண்டு மிகவும் புதிதாக தீபங்களுக்குள்ளால் தன் திருமுகம் காட்டுகிறது. “ஏதோ நன்மைகள் நடக்கப்போகின்றன..” என்ற இனம்புரியாத உணர்வுகள் அரும்ப.. மலர்கிறது மாவீரர்நாள். சங்கரில் ஏற்றப்பட்ட மாவீரர் நாளின் முதல் விளக்கு நூறாகி, ஆயிரங்களாகி, இலட்சோப இலட்சங்களாகி பெருகிச்செல்கின்றது. இது சாதாரண ஒளியல்ல, ஈழத் தமிழினத்தைச் சூழ்ந்துள்ள கொடிய சிங்கள இனவாத இருளை விலக்கும் ஒளிப்போர்.. அந்த ஒளிப்போர்… Read More விளக்கத்தான் முடியுமா இந்த விளக்குகளை..