கப்டன் றோய்

“ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே….இசைநெஞ்சே” …… இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும்.  அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- “வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல்… Read More கப்டன் றோய்

கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்

தக்க நேரத்தில்… அறிவரசன் ! ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப,; 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன. இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து… Read More கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்

கப்டன் லோலா

கப்டன் லோலா ஈரநினைவாய்…..! நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும். கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான். தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளிகளுக்கு அம்மாவிடம் பாணும் சம்பலும் வாங்கிக் கொண்டு போவான். சிலசமயம் ஏதாவது கிறுக்கு வேலை செய்து அம்மாவிடம் பேச்சும் வாங்குவான். என்னுடன் ஏதாவது கொழுவுவான். வைரமுத்து வளவுப்பனங்கள்ளை அடித்தபடி… Read More கப்டன் லோலா

சுனாமி அனர்த்தத்தில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், எழிலரசன்

தமிழீழ மண் மீட்ப்புப் போரில் விழுப்புண்னடைந்து பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்த தாயகப் பனியின் போது 26.12.2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்ககை கடல் அனர்த்தத்தின் வேளை வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

மட்டக்களப்பில் கூட்டமைப்பினர் அனுஷ்டிப்பு மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் இன்று மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சேயோன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தலைவர்கள், உறுப்பினர்கள்,… Read More மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

எம்.ஜி.ஆர் அவர்களின் இருபத்து ஆறாவது நினைவு நாள்

எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய… Read More எம்.ஜி.ஆர் அவர்களின் இருபத்து ஆறாவது நினைவு நாள்

மேஜர் அல்பேட்

நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும். 6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப்… Read More மேஜர் அல்பேட்

லெப். கேணல் டேவிட்,அருச்சுனா உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்

தமிழீழ விடியலுக்காக இதே நாள் இதே மாதத்தில் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள். திருகோணமலை குமபுறுப்பிட்டி பகுதியில் 16.12.2001 அன்று படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேஜர் சுஜி (மாட்டீன்சாமுவேல் அன்ரனிராஜ் – 5ம் வட்டாரம், கும்புறுபிட்டி, திருகோணமலை) யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 16.12.2000 அன்று படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள்… Read More லெப். கேணல் டேவிட்,அருச்சுனா உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்

தலைவனின் கவசமாக நின்று விண்தொட்ட விசுவரூபம்

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு மாவீரர்களுக்கும் தனித்துவமான இடமுண்டு. தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியத்திற்காக ஒவ்வொரு மாவீரர்களும் புரிந்த ஈகங்களும், சாதனைகளும் வார்த்தைகளால் அளவிட முடியாதவை. ஈழ மண் கண்ட பெருந்தமிழ் வீரர்களான எல்லாளன், கரிகாற் பெருவளவன், குளக்கோட்டன், இராசராச சோழன், இராசேந்திர சோழன், சங்கிலி குமாரன், பண்டாரவன்னியன், கண்ணுச்சாமி ஆகியோர் வரிசையில் உதித்த பெருந்தலைவன் பிரபாகரனை மையப்படுத்தி எழுதப்படும் தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒவ்வொரு அத்தியாயமும் மாவீரர்களுக்கு உரித்தானது. தனித்துவம் மிக்க… Read More தலைவனின் கவசமாக நின்று விண்தொட்ட விசுவரூபம்

கருத்தியக்கமும் வாழ்வியக்கமும் – பிரம்மஞானி

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பிரம்மஞானி என்ற பெயரில் 1990களில் எழுதிய இந்தக் கட்டுரை இன்றைய காலத்திற்கும் பொருத்தமாகவே அமைந்திருக்கின்றது. ‘எரிமலை’ (மார்ச் 1994) இதழில் வெளியாக அக்கட்டுரையை அவரது 6வது ஆண்டு நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். கருத்தியக்கம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? அது எப்படி இயங்குகிறது? கருத்துலகம் என்றால் கருத்துக்களால் அமையப்பெற்ற உலகம். எண்ண உலகம், மனித சிந்தனைகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், வேதாந்தங்கள், தத்துவங்கள், இலக்கியங்கள் என்ற ரீதியில்… Read More கருத்தியக்கமும் வாழ்வியக்கமும் – பிரம்மஞானி