22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் ‘பபதா’ வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மட்டக்களப்பு
கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
செல்வராசா தவராசா
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
நடராசா கிருபாகரன்
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை (நைற்றிங்கேல்)
துரைராசா சத்தியவாணி
கிளிநொச்சி
கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா)
குமாரசிங்கம் விஜஜேந்திரன்
திருகோணமலை
கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
துரைராசா செல்வகுமார்
வவுனியா
கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
முல்லைத்தீவு
கடற்கரும்புலி கப்டன் வனிதா
கந்தையா புஸ்பராணி
முல்லைத்தீவு
கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி கப்டன் மேகலா
தங்கராசா தமயந்தி
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
யாழ்ப்பாணம்
ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
ஏழு மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கடற்சமரின்போது தமிழர்களின் வீரம் மீண்டும் சிங்களத்திற்கு கடற்கரும்புலிகளால் புகட்டப்பட்டது. பல சாதனைகள் தடம் பதியப்பட்டும் சென்றது. இத் தாக்குதலில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டும் 62 கடற்படையினர் படுகாயமடைந்தும் கப்டன் தர அதிகாரி உட்பட சில கடற்படையினர் தமிழ்நாட்டுக்கு தப்பிசென்று பின்னர் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
https://www.facebook.com/karumpulimaveerarkal