கரும்புலி கப்டன் சத்தியா

சத்தியா வீரச்சாவு என்று அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்ளும் திடம் யாருக்கும் இருக்கவில்லை. சத்தியா… அவளை எப்படித்தான் பிரிந்திருப்பது. அன்பாய் சண்டைபோடும் அவளின் குழந்தைத் தனமான பேச்சு, சின்ன விடயங்களையே தாங்கமாட்டாமல் கசிகின்ற கண்களும் மீண்டும் மீண்டும் அவளை நினைவூட்டுவனவாகவே இருந்தன. சின்னப்பிள்ளை அல்ல கட்டையென்றுதான் அவளைச் சொல்வார்கள். அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் அவள் சின்னப்பிள்ளையில்லை. 06.02.1978ல் பிறந்தவள். 11ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது போராட்டத்தில் இணைந்துகொண்டவள். நடக்கின்றபோது அவளின் துடியாட்டமான நடை ஒரு உற்சாகமான கறுப்புத்… Read More கரும்புலி கப்டன் சத்தியா

கரும்புலி மேஜர் மலர்விழி

தாய்மை அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள். அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள். தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து,… Read More கரும்புலி மேஜர் மலர்விழி

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில் தோழமை………………. நட்பு……………… அந்தக் கடல்மடியில் விட்டுச்சென்ற நீங்காத நினைவுகள்…………. அவை ஓயப்போவதில்லை, ஆர்ப்பரித்துச் செல்லும் கடலைகளைப்போல. அப்போது அவள் ஓரளவுதான் நீந்துவாள். ஆழமான கடற்சுழிகள், கொந்தளிப்பு எதற்கும் எதிர்நீச்சல்போடும் திறணற்ற கற்றுக்குட்டி. நீச்சல்காரி, அன்றைய கடற்பயணம் கலகலப்பானதாக இருந்தது. ஆனாலும் கடல்நிலமை… Read More கடற்கரும்புலி கப்டன் இளையவள்

லெப். கேணல் தேவன்

இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள்.… Read More லெப். கேணல் தேவன்

மேஜர் யாழிசை

தமிழீழத்தில் முல்லைத்தீவு மாங்குளத்தில் பிறந்த துவாரகா இவள் விளையாடித் திரிந்த வீதிகள் எங்கும் பகைவனின் காலடிகளும், நகரில் பகைவனின் இனவெறி தாண்டவங்களும் நிறைந்திருந்த காலம். சில வேளைகளில் எதிரியானவன் தமிழர்களை வீதிகளில் அடிப்பதும் சித்திரவதை செய்வது அவ்வப்போது அந்த நகரில் நடக்கும் வழமை ஆகியது. தமிழீழ நிலமெங்கும் சிறிலங்கா அரசின் போர் இனவெறிகளும், அடக்குமுறைகளும் சூழ்ந்திருந்த காலங்களில் விடியலின் சுவாசக்கற்றை எதிர்கால சந்ததியினரும், தமிழீழ மக்களும் சுவாசிக்க தமிழீழத் திசையெங்கும் இருந்து ஆயிரம் ஆயிரம் இளைஞர் –… Read More மேஜர் யாழிசை

கடற்கரும்புலி கப்டன் வானதி

தாயக மண்ணின் காற்றே வானதி குடும்பக்கூட்டுக்குள் வாழ்ந்த நாட்கள் மிகக்குறைவு. வீட்டின் பொருளாதார நெருக்கடி மிகுந்த நிலைமையில் அவள் பெற்றோரிடமிருந்து பிரிய நேர்ந்தது. பாடசாலையில் வெண்சிட்டாகக் கழியவேண்டிய பள்ளிப் பருவம் ஒரு வீட்டின் வேல்லையாளாக நின்ற நாட்களில் தொலைந்து போனதும், தான் நீண்ட படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற கனவு கலைந்து போனதும் அவளுக்கு மிகுந்த கவலைதான். சிறுவயதிலேயே சுமக்கமுடியாத சுமைகளைத் தாங்கியதால் ஏற்பட்ட மனமுதிர்ச்சியும் இளமை வாழ்க்கையில் இழையோடிப்போன துன்பமும் அவளைப் பின்வந்த காலங்களில் நிமிர வைத்தன… Read More கடற்கரும்புலி கப்டன் வானதி

கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி

சின்னச் சிட்டுக் குருவி கலைவள்ளி சின்ன உருவம். அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசையாக நின்றால், எந்த அணிக்குள் நின்றாலும் அவள் முதலாவதாகத்தான் நிற்கவேண்டியிருக்கும். அதுவே அவளுக்குக் கவலை. தான் கட்டையாக இருக்கின்றேனே என்பதில் தன்னிரக்கம். இவர்களது அணிகளுக்குக் கனரக ஆயுதங்கள் கொடுக்கப்படும் நேரங்களில் அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். “பிப்ரியோ? அதெல்லாம் ஏன் எனக்குத் தரப்போயினம்?” என்று ஏக்கத்தோடு பார்த்தபடியே ஒதுங்கிக்கொள்வாள். வீட்டில் ஒன்பது குழந்தைகளுக்கு கலகலப்பை ஊட்ட, வீட்டுக்குள் குருவிக்கூட்டம் போலப் பாடித்திரிந்த அவளது வாழ்க்கையின் இறுதி… Read More கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி

கடற்கரும்புலி மேஜர் கனிநிலா

விரதம்… அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள். எப்போதும் மற்றவர்களைச் சீண்டிப் பார்ப்பதிலும் சிரிக்க வைப்பதிலும்தான் பெரும்பாலான அவளது பொழுதுகள் கழியும். அந்தப் பாசறையில் எல்லோருக்கும் இளைய வளாக அவள் இருப்பதால் அவள்தான் கதாநாயகி. தன்னுடைய கடமைகளில் அவள் ஒருநாளும் பின்னிற்பதில்லை. சமையற்கூட முறை என்றால் இரவு படுக்கும் போதே அவள் சொல்லுவாள் என்ன விடியவே எழுப்பி விடுங்கோ, எனக்கு நாளைக்கு… Read More கடற்கரும்புலி மேஜர் கனிநிலா

நினைவில் என்றும் ஜொனி……!

லெப்.கேணல் ஜொனியின் இருபத்திஆறாவது நினைவுதினம் வந்துள்ளது. லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம் உலகின் மிகப்பெரும் ஜனநாயக(?) நாடு, அகிம்சை காந்தியின் தேசம், கருணை சொன்ன புத்தர் பிறந்தபூமி என்ற வரலாற்று அடைமொழிகளுடன் வலம் வரும் இந்திய தேசம் எமது போராட்டத்தின்மீது நிகழ்த்திய மோசமான துரோகங்களில் மிகவும் மோசமான ஒன்று ஜொனியின் கொலை உலகின்பெரும் இராணுவங்களில் ஒன்று, பிராந்தியத்தில் வைத்தது எல்லாமே சட்டம் என்ற வல்லாதிக்க பலத்தின் முன் ஒரு இளைஞன் எதற்கும் பணியாமல் நிற்கின்றானே எந்த பதட்டத்தில்,கோபத்தில், கோழைத்தனத்துடன்… Read More நினைவில் என்றும் ஜொனி……!

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில் 12.03.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மேதலில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் உயிரோட்டம்…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!