லெப்.கேணல் அம்மா (அன்பு)

முல்லைத்திவு சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களின் மீது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவடைந்த வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா (அன்பு) அவர்களின் வீரத்தின் தாகத்துடன் தளபதிகள், போராளிகள், பொதுமக்கள் மனங்களில் இருந்து விரியும் வீரத்தின் நினைவுகளாய் விரியும் நூலினை சமர்பிக்கின்றோம். PDF-லெப்.கேணல் அம்மா (அன்பு)  

முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி

நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற ஒரு சில போராளிகளுக்கும் மட்டுமே தன்னைப்பற்றி வெளிப்படுத்திய சில தருணங்கள். அவற்றுக்குள்ளே அவளது உறுதியையும் வேகத்தையும் மிகுந்த துணிச்சலையும் மட்டும் அறிந்துகொண்டோம்.… Read More முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி