கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நாயகன் / நரேஸ்

பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ”புலிகளுக்கே உரித்தான சண்டை” என்று, புலிகளின் போர்த்திறனைப் பறைசாற்றிய சண்டையென்று புலோப்பளைச் சமரைத்தான் சொல்ல வேண்டும். பட்டப் பகற்பொழுதில், கவசங்களற்ற வெட்ட வெளிப் பிரதேசத்தில், மணலோடு மணலாகி மறைந்திருந்த புலிகள், கவசங்களுடனும், கனரக ஆயுதங்களுடனும் நகர்ந்த எதிரிகளுக்கு முன்னால், ஆக்ரோசமாக எழுந்தபோது உலகையே வியப்பிலாழ்த்திய அந்தச் சண்டை வெடித்தது. டாங்கிகளும், பீரங்கிகளும், நவீன போர்க் கலங்களும், மனஉறுதிக்கு முன்னால் மண்டியிட்டன. சாவுக்கு அஞ்சாத… Read More கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நாயகன் / நரேஸ்

லெப். கேணல் செல்வியின் நினைவாக……

“ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம் நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ !! எங்களைப் பார்க்க வேண்டம் எனக் கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் !!!! அம்மா செல்வி! அன்னைத் தமிழீன்ற ஆரணங்கே! அன்புநிறை எழில் மகளே!… Read More லெப். கேணல் செல்வியின் நினைவாக……

புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு (அருமை)

வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன் 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு . இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல் .சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்கவேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும். ‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியிருப்புக்களை மறு… Read More புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு (அருமை)

தவளைப் பாய்ச்சல்

இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத் தளத்தின்மீது நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையாகும் தவளைப் பாய்ச்சல். பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு. ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூநகரிப்படைத்தளம். அப்போது யாழ்.குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி – நல்லூர் பாதையே… Read More தவளைப் பாய்ச்சல்

லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன்

அவன் நிறையவே சாதிக்கவேண்டியவன்…… லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன் (மேல்நிலைப் புலனாய்வுப் பொறுப்பாளர்) யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினுள் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும்தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்குமல்லவா? இல்லையே? விதையை உடைத்து மண்ணைப் பிளந்து யாழ்மண்ணில் பலத்தையெல்லாம் திரட்டி காற்றைக் கிழித்து சூரியனைத் தொட்டுவிடத் துடிக்கும் பனைமரத்துடம் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வனையும் பார்க்கிறேன். 1990 யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து மீண்டும் தமிழர்படையாம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த… Read More லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன்

சர்வதேசக் கடற்பரப்பில் வீரகாவியமான ஆழக்கடலோடிகள்

அலையில் கரைந்த வீரங்கள்…… எமது விடுதலைப் போராட்டத்திற்கு அடி நாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களை கொண்டுவந்து சேர்க்கவும். அடக்கு முறையாளர்களின் தடைகளால் அல்லலுறும் எம் மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவந்து கரை சேர்க்கவும் என கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பிலுள்ள கடலெல்லாம் சென்று வருகின்றன “வெளியே தெரிந்ததுமாய் உள்ளே மட்டும் அறிந்ததுமாய்” அளப்பெரிய பணிகளை இந்தக் கடலோடிகள் செய்து முடிக்கின்றனர். உயிரைக் கூட துச்சமாக மதித்து சர்வதேசக் கடற்பரப்பின் விரிப்பில் ஒர்மமுள்ள எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள்… Read More சர்வதேசக் கடற்பரப்பில் வீரகாவியமான ஆழக்கடலோடிகள்

மேஜர் செந்தூரன்

பல ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தால் உரமேறிய ஆனையிறவு மண்ணில் யோகராசா தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தான் இராஜ்கண்ணன். சிறுவயதில் மிகவும் சுட்டிப் பையனாக மிகவும் திறமையானவனாக உப்பள மண்ணில் வலம் வந்தான் கண்ணன். தனது ஆரம்பக் கல்வியை ஆனையிறவு தமிழ் கலவன் பாடசாலையில் கற்றான். சந்தோசமான அவர்களின் வாழ்க்கையில் இடிவிழுந்தது போல 1990ஆண்டு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு காரணத்தால் இடம்பெயர்ந்து வட்டக்கச்சியில் வாசித்தார்கள். இவனின் அப்பா உப்பளத்தில் வேலை செய்த காரணத்தால் ஆனையிறவில் வசித்தார்கள். சிங்கள இராணுவ… Read More மேஜர் செந்தூரன்