நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் ….

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்… எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட இயங்கியதில்லை. அந்தக் குடும்பம் அத்தனை அழகானது, இனிமையானது,… Read More நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் ….

வீரத்தின் சிகரங்கள்

இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை. தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு… Read More வீரத்தின் சிகரங்கள்

லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும். வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்….. யாழ். நாகர்கோவில் பகுதியில் 18.10.2000 அன்று “ஓயாத அலைகள் – 04″ நடவடிக்கை சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவுக்குள் உழைத்த… Read More லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்

தாயகம் முழுதும் பாதம் பதித்த சந்தோசம் மாஸ்ரர்

ஒருரிரு தினங்களுக்கு முன்னர் லெப்.கேணல் சந்தோசத்தின் 27வது நினைவுநாள் எம்மை கடந்து போயிருக்கிறது. இருந்தாலென்ன..சந்தோசம் போன்றவர்கள் வருடம் முழுநாளும் நினைவில் வைத்திருக்க வேண்டியவர்கள். எப்போதும் ஒரு புன்முறுவல் சந்தோசத்தின் இதழ் ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும். எந்த கடினமான சூழலிலும் நிதானம் இழக்காமல் அதே நேரம் முழுவேகத்துடன் செயற்படும் திறன் ஒருசிலருக்கே உரித்தான ஒன்று. அவர்களில் ஒருவர் சந்தோசம். ஒரு விடுதலை அமைப்பு தனது பிறப்பில் இருந்து அது வளர்ந்து வேகமெடுக்கும் வரைக்கும் அது சந்திக்கும் சோதனைகளும் கடக்க… Read More தாயகம் முழுதும் பாதம் பதித்த சந்தோசம் மாஸ்ரர்

எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கை நினைவுகள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி 7 ஆண்டு நினைவுநாள் 22- ஒக்டோபர் -2014 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது. தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும்… Read More எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

நடவடிக்கை எல்லாளன்….

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன்… Read More நடவடிக்கை எல்லாளன்….

தமிழீழ எழுச்சிப் பாடல்கள்-இறுவெட்டுகள்

தமிழீழத்தின் விடியலுக்காக தம்முயிர் தந்த மாவீரர்களின் ஈகங்களை, போராளிகளின் அற்ப்பணிப்புக்கள் – தியாகங்களை, மக்களின் போராட்ட பங்களிப்புகளை, விடியலின் உழைப்புகளை இசையூற்றில் செதுக்கி உங்கள் காதோரம் தவழ்ந்த 300 வகையான இசைத்தொகுப்பின் 3000க்கு மேற்பட்ட போராளிகளின் தமிழீழக் கலைஞர்களின் உழைப்பினார் வார்த்தெடுக்கப்பட்ட தமிழீழ எழுட்சிப் பாடல்களை வரலாற்று தேவை உணர்ந்து உலகம் முழுவதும் சிதறுண்டு வாழும் எம் உறவுகளின் வாசல் நோக்கி தமிழீழ மண்ணின் வீரத்துடன் தேசக்காற்று வீசச்செய்கின்றது. மிக விரைவில் அனைத்து வகையான கையடக்க மென்பொருள்… Read More தமிழீழ எழுச்சிப் பாடல்கள்-இறுவெட்டுகள்

நடனத்துக்குரிய தமிழீழ பாடல்கள்

இவற்றில் நடனம் அமைப்பதற்குரிய சில பாடல்கள் நிறுவப்பட்டுள்ளது…… இரு விழிகளில்…..  நான் பெரிது நீ…… அறம் கொண்ட…… (இந்தப் பாடல் முதல் பல்லவி பின்பு…..) மலையை நிகர்த்த….. தமிழே வாழ்க…. அடிபணிந்து வாழ்வதா…… புலி ஒரு காலமும்….. பூ விழி சுமந்த…… இறுதிக்கால மனஉறுதி….. சங்கே முழங்கு….. இருளுக்குள் எரிகின்ற…. தேசம் அது…. மாரி மழை ஆயிரம் ஆயிரம்….. மண்ணில் கொண்ட வெற்றி முரசு….. குழிகளில் இருந்து….. விடுதலை காண….. பொங்கு தமிழராய்….. வீரவேங்கை என்றும்….. விடுதலை… Read More நடனத்துக்குரிய தமிழீழ பாடல்கள்

ஓயாத அலைகள்-02 :நெஞ்சை நிமிர்த்திய வெற்றி

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மாபெரும் வெற்றிகளால் கட்டமைக்கப்பட்டது. இதற்கான முழு உரித்தும் தாயகக் கனவோடு தமது இன்னுயிர்களைக் களமுனைகளில் தியாகம் செய்த வீரர்களுக்கேயுரியது. “ஒரு போரின் முடிவென்பது ஒரு போராட்டத்தின் முடிவல்ல” என்பது சேகுவாராவின் வார்த்தை. ஒரு வீரன் சாவடைந்தாலோ அல்லது வீரர்கள் சாவடைந்தாலோ அந்தப் போராட்டமே முற்றுப் பெற்று விட்டதாக அர்த்தமில்லை. அந்தக் கனவைச் சுமந்து இன்னொரு போராளி பயணிக்க தயாராக இருக்கும் வரை அந்த இனம் தோற்றுப் போன இனமாக அடையாளப்படுத்த முடியாது .… Read More ஓயாத அலைகள்-02 :நெஞ்சை நிமிர்த்திய வெற்றி

லெப்.கேணல் சாந்தகுமாரி

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக… Read More லெப்.கேணல் சாந்தகுமாரி