உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்… Read More உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

கார்த்திகை 27 தமிழினத்தின் தீபத்திருநாள்

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த அனைத்து போராளிகளையும் அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், நினைவுகூர்ந்து அவர்கள் கல்லறைகளை வணங்கி தீபமேற்றி அந்த ஒப்பற்ற தியாகிகளின் நினைவுகளை நினைந்து நினைந்து அந்த வீரப்புதல்வர்களின் வீரத்தை கண்டு வியந்து ஆறடி ஆழத்தில் துயிலும் அவர்களின் கல்லறைகளை கண்ணீரால் நீராட்டி வழிபடும் ஒரு உன்னதமான நாள. எமக்காகா போராடி வீழ்ந்தவர்களை மறந்துவிட்டால் நாங்கள் மனிதர்கள்… Read More கார்த்திகை 27 தமிழினத்தின் தீபத்திருநாள்

வைரவிழா காணும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

** தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள் தேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள் *** காரிருள் நீக்க வந்த பேரொளி! அறுபது அகவை – ச.ச.முத்து கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ‘ அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்’ என்று.., வீடிழந்த, ஊரிழந்த, மண்… Read More வைரவிழா காணும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

அகவை 60 காணும் தலைவா! நீ பிறந்தமண்ணில் பிறந்ததே பெருமை எமக்கு

உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளுள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனிதமந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது. ஆனால் அப்படி வாழ்ந்த மக்களின் இன்றய வாழ்க்கை எப்படி இருக்கின்றது அவர்கள் இப்போது எப்படி வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் உலகத்தில் நாகரிகம் மிக்கவர்களாகவும் அறிவாளிகளாகவும் எத்தனையோ சட்டதிட்டங்களை உருவாக்கியவர்களாகவும் எங்கும் சுதந்திரமாக நடமாடக்கூடிய வல்லமை மிக்கவர்களாகவும் மாறியுள்ளமை தெளிவாகும் .எப்படி இந்த மாற்றம் ? மந்தைக்கூட்டங்களாக… Read More அகவை 60 காணும் தலைவா! நீ பிறந்தமண்ணில் பிறந்ததே பெருமை எமக்கு

60ம் அகவையில் அகிலம் வியந்த அண்ணனுக்கோர் வாழ்த்து

கார்த்தகை இருபத்தியாறு..-எம் ஊரெல்லாம் ஒன்றாகி கூத்தாடும் பார்த்தீபன் பிறந்த நன்நாள். ஆண்ட பரம்பரை காலமெல்லாம் கைகட்டி ஆள வழியின்றி வாய் பொத்தி, தலைகுனிந்து அடிபணிந்து-எம் ஈழ மண்ணையும் விலைபேசி -சேற்றில் உழும் எருமை மாடுகளாய் -எதிரிமுன் மண்டியிட்ட தமிழருக்கு வாழ நெறிகாட்டி-அவன் மாண்புதனை நிலைநாட்ட வந்துதித்த ஆண்டவனின் அவதார நாள் இன்நாள்.. வல்வை மண் அன்று -எம் தொல்லை அழித்திடவென்று நல்லான் எங்கள் நாயகனைத் தந்திட்ட பொன்நாள் இன்று…. எங்கள், வலிபோக்க வந்த அருமருந்தாய்-எங்கள் கலி நீக்க… Read More 60ம் அகவையில் அகிலம் வியந்த அண்ணனுக்கோர் வாழ்த்து

60-வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு வாழ்த்துக்கூறும் -காணொளிகள்

தேசியத் தலைவரின் பிறந்த நாளில் அவரின் கனவை நனவாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – தேனிசைச் செல்லப்பா தமிழர்களையே உலகறியச் செய்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் – கோவை.ராமகிருஷ்ணன் கவிஞர் சிநேகன்: தலைவரின் பிறந்தநாளில் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் உரக்கப்பேசுவோம்! புதிய இலக்கினை அடைய உறுதி எடுப்போம்! முனைவர் ம.நடராசன்: வீரமிக்க தலைவனின் பிறந்தாளில் அனைவரும் புதிய நம்பிக்கையுடனும், கொள்கையுடனும் செயற்படவேண்டும். ஐயா பழ.நெடுமாறன்: மே கலங்காத தேசியத் தலைவரின் கண்கள் முதல் மாவீரன் சங்கர் மடியில்… Read More 60-வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு வாழ்த்துக்கூறும் -காணொளிகள்

தேசியத் தலைவர் :வரலாறு பிரசவித்த புதுமை

உலகில் உள்ள ஒவ்வொரு இனங்களும் வரலாற்றின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொற்காலத்தைத் தரிசித்தவைதான். தமக்கான அரசு இன்றி உலகெங்கும் இன்று அலைந்து உழலும் இனங்களாக இருந்தாலும்சரி, தமக்கான அரசைக் கொண்டுள்ள இனங்களாக இருந்தாலும்சரி இவையெல்லாம் ஏதோவொரு காலகட்டத்தில் தமது பிராந்தியத்திலோ அல்லது உலக அளவிலோ பேரரசுகளாகத் திகழ்ந்தவையே. இவ்வாறான நிலையை இவ் இனங்கள் எய்தியமை என்பது தற்செயலாக நிகழ்ந்தவையன்று. இந்நிகழ்வுகளிற்கு ஆதர்சமாக இவ் இனங்களிலிருந்து தோற்றம் பெற்ற புகழ்பூத்த தலைவர்களே காரணமாக இருந்துள்ளார்கள். தமிழர்களின் வரலாறும் இவ்வாறான ஒன்றுதான்.… Read More தேசியத் தலைவர் :வரலாறு பிரசவித்த புதுமை

வீர முகங்களை அக்கினி ஒளியில் வணங்கித் துதிக்கும் புனித நாள்

“புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்குமிடையிலான உறவுப் பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் முயற்சித்து வருகின்றது” – தேசியத் தலைவரின் 2007ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒருபகுதி இது. விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27. தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. இந்தியப் படைகளின்… Read More வீர முகங்களை அக்கினி ஒளியில் வணங்கித் துதிக்கும் புனித நாள்

மாவீரர்களே! தாயகம் நோக்கி நடக்கின்றோம்

தாயகத் தமிழர்கள் மிகுந்த துன்பத்துடன் வாழ்கின்றார்கள். மிகப் பெரிய மனித அவலத்திற்கு முகம் கொடுத்த தமிழர்கள் தொடர்ந்தும் அல்லற்படுகின்றார்கள். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் எமது தேசியத் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்;களல்லவா? அவர்கள் தாயகத் தமிழர்களைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் சிந்தனை தாயகம் தழுவியதாகவே இருக்கின்றது. அவர்கள் தாயகம் நோக்கி நடக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ஏராளமான நண்பர்களை சந்திக்கின்றார்கள். அதேநேரத்தில் எதிரிகளையும் சந்திக்கின்றார்கள். ஆனால் காக்கை வன்னயர்களின் காட்டிக்கொடுப்பும் இடம்பெறுகின்றது. அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதும்… Read More மாவீரர்களே! தாயகம் நோக்கி நடக்கின்றோம்