தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அக்காவின் அறியாத போராட்ட குணம்

அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலில் குறிப்பிடும் போது, ”மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலைவர் பிரபாகரனுக்குக் கிட்டிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில், மிகவும் சோதனையான இடர் படிந்த காலங்களில்கூட நிலையான மற்றும் ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்வையும் பிரபாகரனுக்கு மதி வழங்கியிருந்தார். எனினும், திருமண வாழ்வு என்பது மதிவதனிக்கு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும்… Read More தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அக்காவின் அறியாத போராட்ட குணம்

போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம்

எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு… Read More போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம்

லெப். கேணல் லக்ஸ்மன்

‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே அல்லாமல், இருவேறு துண்டுகளின் கூட்டல்ல. வல்லிபுரக்கோயில் மணற்காட்டில் – அலைகளாய் விழுந்து உவகையோடு எழுகின்ற இந்துமா ஆழி, ‘எங்கள் கடல்!’ என்றால் ‘குமணக்’ கரையின் மணலில் உருண்டு, கண்களை எரித்துச் சுகம் விசாரிப்பதும் ‘எங்களோடது!’ தான்; ‘கருவேலன் காட்டு’ ஓரத்தில் மோதி பாரையோடு சுறாவும் திருக்கையும் தருவதும்… Read More லெப். கேணல் லக்ஸ்மன்

மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும்… Read More மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

கரும்புலி கப்டன் நாகராணி

பாதுகாப்பு…. அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை… Read More கரும்புலி கப்டன் நாகராணி

ஓய்வறியாத ஒரு போராளி அப்பையா அண்ணை

மீண்டும் ஒருமுறை அப்பையா அண்ணையின் நினைவுநாள் வந்துள்ளது. அப்பையா அண்ணை என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத போராளித்தனமே. அதிலும் அப்பையா அண்ணையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீலன், சங்கர் போன்றோர் திணறி ஓடி ஒழியும் காட்சிகள் இன்னமும் நினைவுக்குள் நிற்கிறது. சீலன், சங்கர், கிட்டு போன்றோர் அதிகூடிய வேகத்துடனும் பயமில்லாத வீரத்துடனும் தினமும் ஏதாவது செயற்பாட்டில் செறிவாக ஈடுபடுபவர்கள். அவர்களின் வேகமே மிக அதிகம் என்று அண்ணை அடிக்கடி சொல்வார். அப்படியான சீலன்,சங்கர்… Read More ஓய்வறியாத ஒரு போராளி அப்பையா அண்ணை

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் வீரவரலாறு -காணொளிகள்

“தேசத்தின் குரல்” கலாநிதி.அன்ரன் பாலசிங்கம் 27.11.2005 உரை இறுதி நிகழ்வில் வன்னியிலிருந்து தளபதிகளின் உரைகள் பாடல்கள்  

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில்

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு –  தேசியத் தலைவரின் அறிக்கை தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது.… Read More தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில்

கடற்புலிகள் :சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை

சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! (16.01.2006) அன்று பதிவு இணையத்தில் பதிவு செய்யப்பட்டது  சுமார் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் தமிழக மீனவர்களுக்கு எந்த அச்சுறுத்தலோ அல்லது பிரச்சனையோ இருந்தது இல்லை. எனவே காலத்தின் தேவை கருதி தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கேள்வி : உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று… Read More கடற்புலிகள் :சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை