இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்!

உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில்… Read More இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்!

முத்துக்குமரா! -புதுவை இரத்தினதுரை.

முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன். சின்ன அக்கினிக்குஞ்சே! உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய் அந்தச்சோதிப்பெருவெளிச்சம் எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும். உன் இறுதி மூச்சு புயலாகித்… Read More முத்துக்குமரா! -புதுவை இரத்தினதுரை.

ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்

எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம் ** தம்பிக்கும் தங்கைக்கும் தாயுமானவன் முத்துகுமார்! திருச்செந்தூர் ஆத்தூர் அருகில் உள்ள கொளுவை நல்லூரில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் குமரசேன் சண்முகத்தாய் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் முத்துக்குமார். இவருக்கு தமிழரசி என்ற தங்கையும், வசந்தகுமார் என்ற தம்பியும் உண்டு. தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். குடும்ப வருமானம் போதுமானதாக இல்லை. வறுமைக்கு முகம் கொடுத்துப்… Read More ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்

லெப் கேணல் காந்தன வீரவணக்க நாள்

முல்லை உடையார்கட்டு பகுதியில் 28.01.2009 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் காந்தன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய் மண் விடிவிற்காக தன்னுயிரை ஈகம் செய்த இம்மாவீரருக்கு வீரவணக்கங்கள்.

கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்

கடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சுகந்தன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி லெப். எழுகடல், கடற்கரும்புலி லெப். மணிக்கொடி ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விசுவமடு பகுதியில் தவறுதலாக ஏற்பட்ட… Read More கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்

சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்- தேசியத் தலைவர்

எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன். நீண்ட வரலாற்று அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது. ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கிறது. பல நெருக்கடிகளை எதிர் கொள்கிறது. கொந்தளிப்பான பல சூழ் நிலைகளுக்கு முகம் கொடுக்கிறது. விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம். சாவையும், அழுவையும், துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான்… Read More சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்- தேசியத் தலைவர்

கப்டன் சுடர்மதி வீரவணக்க நாள்

கேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 06ம் ஆண்டு நினைவில்………. சுடரும் ஒளியானவள் கப்டன் சுடர்மதி சிந்து நீ பளிச்சென்று சிரிப்பைச் சிந்தும் பௌர்ணமிவட்ட முகத்தவள் பரபரவென்று சுழலும் பார்வையால் பார்ப்போரை வளைப்பவள் – உன் பால் வெள்ளை மனமே – இறப்பர்ப் பாலாய் இழுத்து ஒட்ட வைக்கும். – நண்பர் பட்டாளம் சுற்றிச்சுற்றிவர எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கும் நீ ஓர் துருதுருப்பான்.… Read More கப்டன் சுடர்மதி வீரவணக்க நாள்

கிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்-தேசியத்தலைவர்

மனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க முடியாது. எனது அன்புத் தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த ஒரு சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரு இலட்சியப்… Read More கிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்-தேசியத்தலைவர்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஈழ விடுதலைப் பொங்கல் தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும் ஈழ விடுதலைப் பொங்கல் -காணொளி தமிழனின் பண்பாட்டு பொங்கல் விழாவிலும் பார்ப்பனீயம் தைப் பொங்கல் வருகுது மகனே! வீட்டில் கட்டாயம் பொங்கல் செய் தமிழ்ப் புத்தாண்டு தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள் சுதந்திரப் பொங்கல் இரண்டாயிரம் ஆண்டுப் பொங்க்கலடி தோன்றட்டும் ஆயிரம் மங்கலங்கள் மண்ணாற்றல் யாவுமே மேல்வரட்டும் மாற்றலர் கெய்யிடர் போய்விடட்டும் ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி வாடிய… Read More இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்