எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன்

குட்டிக்கண்ணா போய் வா…! குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை. 1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது. தாயின் அன்பும் அரவணைப்பும் இவனுக்கு கலைகளை ஊக்கப்படுத்தி இவன் கிராமத்தில் ஓர் அரங்கத் திறப்பில் முதல் பாடலை பாடுகிறான். இவனது தாய் அன்று ஓர் பாடலை தேர்வாக்கி கொடுக்கிறாள். இவனது குரலில் தமிழீழத்தில் ஒலித்த முதல் பாடல்…………… ஐந்தடி கூட்டுக்குள்ளே ஐம்பது பேரை போட்டடைத்தான் அம்மா என்று சத்தமிட்டால் அடியும் உதையும்… Read More எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன்

காணொளி: நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது…பாடல் மேஜர் சிட்டு

பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு சிட்டுவை சந்திக்கின்ற போதெல்லாம் பலமுறை இப்பாடலை பாடும்படி கேட்டு அதனுள் உருகிப்போனதுமுண்டு. இறுதியாக அவன் வீரச்சாவடைவதற்கு சில வாரங்கள் முன்பு உடையார்கட்டு குளக்கட்டு வீதியில் ஈருளியை நான் ஓட்ட அவன் பாடிக்கொண்டு வந்தது அழியா ஞாபகம். 1996 இல் ஓயாத அலைகளுக்காக இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தாலும் இப்போதெல்லாம் 2009 க்காக அப்போதே இந்தப் பாடல் பாடப்பட்டு விட்டதோ என்ற எண்ணமே என்னுள் மேலோங்கி நிற்கிறது… நீங்களும் மீண்டும் ஒரு… Read More காணொளி: நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது…பாடல் மேஜர் சிட்டு

பிரபாகரன் நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை…!

தலைவர் பிரபாகரன் அவர்கள் தாயகத்தை உண்மையுடன் நேசித்த, துணிச்சல் மிக்கதொரு வீரனாகவே எப்பவும் என் மனதில் தோன்றினார்….! பிரபாகரன் அவர்களது ஆளுமை பற்றி, நான் அவரை நேரில் சந்திப்பதற்கு முன்னராகவே அவர் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்க விரும்புகிறேன். எண்பதுகளில் இயக்கங்கள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலங்களில் பிரபாகரனை பலரும் ‘தம்பி’ என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். என் தம்பியர்கள் (மாவீரர்கள்- மொறிஸ், மயூரன்) இருவரும் அவரை ‘அண்ணர்’ என்று விழித்துப்… Read More பிரபாகரன் நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை…!

வைரவரிகள்

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் குறிப்பேட்டு வரிகளிவை. பல கரும்புலி நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவற்றைக் கருவேங்கை என்ற பெயரில் வைரவரிகளாக்கிய மேஜர் அறிவுக்குமரன் 11.04.2000 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவடைந்தார். எவ்வளவு கஸ்ரப்பட்டு பயிற்சி எடுத்தும் கூட இதுவரை நடவடிக்கைக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்காதபடியால் செங்கதிர் அழுதுகொண்டே இருந்தாள். அவள் மட்டுமல்ல எல்லோருமே. MI.17 உலங்கு வானூர்தி மீதான தாக்குதலுக்குச் சென்றபடியால் எமக்கும் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 25.01.1998 காலை மலர்வதற்கு முன்… Read More வைரவரிகள்