தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன் தான்

கருணாவின் பிரதேச வாதத்திற்கு அங்கீகாரம் வளங்கியவர்கள்,கருணாபோன்ற ஓராயிரம் கருணாக்களே!!

எமது தமிழீழ தேசியத் தலைர் பிரபாகரன் அவர்கள் வெறுமனே இனவிடுதலைக்காக மட்டும் போராடிய ஒரு தலைவன் அல்ல என்பதனையும்,அவர் எம் இனத்தில் தோன்றியிருந்த பல அழுக்கான வேற்றுமைகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு அதி உன்னத மனிதன் என்பதையும் மனிதப் பண்புள்ள எவரும் இதை மறுக்கமாட்டார்கள்.v.prabaharan

மேலும் இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்’ஆனால் அவருடைய தன்னலமற்ற கொள்கையை யார் யார் உறுதியாக பின்பற்றி அவர் வழி நடக்கின்றார்களோ அவர்களால் எதிர்காலத்தில் ஒரு உன்னத தலைவராக எம் இனத்தில் தோன்றமுடியும் என்பதையும் என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்.

இந்த ஜென்ம வரலாற்றில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு சக்திவாய்ந்த தலைவரை இதே ஜென்மத்தில் பிறப்பெடுத்த எவரும் விஞ்சிவிடமுடியாதென்றால் அது மிகையாகாது.பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனேதான்’

தமிழர்களில் எத்தனை துறைசார் மேதைகள் இருந்தாலும் அவர்களால் எமது தலைவனுக்கு நிகரான தலைமைத்துவத்தை இந்த ஜென்மத்தில் வகிக்க முடியாதென்பதே அப்பட்டமான உண்மை.இன்று எமது தலைவரின் தலைமறைவுக்குப் பின்னால் எந்தவொரு மேதையாலும் தற்காலிகமாகவேனும் அவருடைய ஸ்தானத்தை நெருங்கமுடியாமல் அல்லல்படுவதை வைத்தே அவரின் தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாட்டை நீங்கள் இலகுவாக உணர்ந்துகொள்ளமுடியும்.

கல்வியை மட்டும் அடிப்படையாகக்கொண்ட நிறைய தலைவர்கள் எமது இனத்தில் தொன்றுதொட்டு இருந்துவருகின்றார்கள். ஆனால் தலைவர் பிரபாகரன் போன்ற சகலகலா வல்லவர்கள் எமது இனத்தில் இல்லையென்பதை விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஒரு மனிதனின் குறிக்கோளுக்குப் பின்னால் இலட்சக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்கள் என்றால் அதற்கு அவரின் புனிதத்துவமே உண்மையான காரணம்.

இனி மேற்கூறிய கருப்பொருளுக்கு வருகின்றேன்.

உண்மையில் கருணா என்கிற முரளிதரன் போன்ற எமது இனத்தில் பிறந்து அதே கருத்துடன் நிறைய பிதேசவாதிகள் தற்பொளுது களைகட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இது தமிழினத்தில் தோன்றிய அனேகமானவர்களிடம் தற்பொளுது தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

உதாரணமாக எமது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் எமது இன விடுதலைக்கான தனது போராட்டத்தை ஆரம்பித்தபொளுது சிங்கள அரக்கர்படைளின்
இன அடக்குமுறைக்கு எதிராக போராடியது மட்டுமல்லாமல் சம நேரத்தில் எமது இனத்துக்குள் தோன்றியிருந்த அனைத்துவிதமான பாகுபாடுகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு உறுதியான மாசற்ற தலைவன் என்பதையும் நாம் கூறியாகவேண்டும்.

மேலும் அவருடைய வருகைக்குப் பின்புதான் தமிழர்களுக்குள் இருந்த சாதி,சமயம்,மற்றும் பிரதேசவாதம் போன்ற கொடிய பிரிவினைகள் அடக்கப்பட்டு அனைத்து தரப்பினரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பொதுவான ஒற்றுமையை வழர்த்து அனைத்து பிரிவினைகளையும் ஓரங்கட்டியிருந்தார். ஆனால் இந்த பிரிவினை நோய்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேதான் 100வீதம் ஒளிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் சமநேரத்தில் இந்த பிரிவினைகள் அனைத்தும் நூறுவீதம் மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்ததென்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. மேலும் கருணா என்கிற பிரதேசவாதியாலும் இந்த கொள்கை அன்று கடைப்பிடிக்கப் பட்டதால்தான் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் என்கிற பிரிவினை தலைதூக்க ஆரம்பித்ததென்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இன்னும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் இந்த தீய பிரிவினைகள் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டதன் விழைவே அவர்களின் படைபலம் பெருகுவதற்கும்,மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதற்கும் இன்னும் போராளிகளிடத்தில் ஒற்றுமையையும், மக்களிடத்தில் சந்தோசத்தையும் ஏற்படுத்தியதுடன் ஒட்டுமொத்த பிரிவினையாளர்களும் ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இதில் ஒரு முக்கியமான விடையம் என்னவெனில்,தமிழீழத்தின் தென் துருவமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் மட்டும் பிதேசவாதம் ஒன்று மட்டுமே மிகப்பெரிய அளவில் இன்றுவரை பேணப்பட்டு வருகின்னதென்பதும் ஏனைய சாதி,சமயம், அந்தஸ்த்து போன்ற பிரிவினைகள் அங்கு முக்கியத்துவம் அற்றுள்ளதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்’ஆனால் தமிழீழத்தின் வடதுருவமான அதன் எல்லைக்குள் உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சாதி,மற்றும் அந்தஸ்து போன்ற பிரிவினைகளே அங்கு பலமாக இன்றுவரை உள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது’

ஆனால் பிரதேசவாதம்,மற்றும் சமய வாதம் போன்றவை அங்கு மிகவும் பலவீனப்பட்டே காணப்படுகின்றன’உண்மையில் பிரதேசவாதம் தவிர்ந்த எத்த வாதத்தையும் ஒழிப்பதென்பது ஓரளவு இலகுவான காரியமே.ஆனால் பிரதேச வாதம் என்பது அது ஒட்டுமொத்த வாதங்களையும் உள்ளடக்கிய ஒரு படு பயங்கரவாதம் என்றால் அது மிகையாகாது. உதாரணத்திற்கு அன்று கருணாவால் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் இருந்து எந்த வாதத்தையும் அவனால் முன்வைக்க முடியவில்லை என்பதும்,ஆனால் பிரதேசவாதம் ஒன்றை இலகுவாக ஏற்படுத்துவதற்கு அவனால் முடிந்ததென்றால் அங்கே பிரதேசவாதத்தின் பக்க பலத்தை இதிலிருந்தே நாம் நன்கு உணர்ந்துகொள்ள முடியும்’

பிரதேச வாதம் என்பது சாதி,சமயம்,அந்தஸ்து போன்ற அனைத்து வாதங்களையும் உள்ளடக்கியதொன்றே.அதனால்தான் அன்று கருணாவின் தூண்டுதலுக்கு உள்ளாகிய “ஜெயந்தன் படையணியில்”இருந்த பல்வேறுபட்ட வாதங்களையும் உள்ளடக்கியிருந்த அனைத்து போராளிகளும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட எமது தேசியத் தலைவர் அவர்களின் கட்டளையை விட தமது மாவட்ட தளபதியின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுத்ததை வைத்தே நீங்கள் நன்கு அறிந்துகொள்வீர்கள்’இதைவிட சிறந்த எந்தவொரு உதாரணத்தையும் நான் கூறவேண்டிய தேவை இல்லை.

இது போதாதென்றால் இன்னும் ஒரு கசப்பான உதாரணம் ஒன்றைத் தருகின்றேன். அது என்னவெனில் விடுதலைப் புலிகளால் அன்று யாழ் நகரை சிங்களப் படைகளிடமிருந்து கைப்பற்ற முடியாமல்போனதற்கு அன்று கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட ஜெயந்தன் படையணியும்,மகளீர் படையணியான அன்பரசி படையணியும் யாழ் நகர் நோக்கிய தாக்குதலில் இருந்து கருணாவின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து களமாட முடியாது என்றும்,கருணா தவிர்ந்த எந்த தளபதியின் கட்டளைகளையும் தாம் ஏற்கமுடியாதென்றும்,மேலும் தாம் தமது மாவட்டதில்போய் சண்டை பிடிக்கப்போவதாகவும் யாழ்மாவட்டத்தை நோக்கிய சண்டையில் தாங்கள் சாக விரும்பவில்லை என்ற அப்பட்டமான பிரதேசவாத கருத்துக்களை களம் நடந்துகொண்டிருந்த வேளையில் தெருவித்து தளபதிகளின் கட்டளைகளை புறம் தள்ளிய பின்பே யாழ் நகர்நோக்கிய நடவடிக்கையை தலைவர் இடைநிறுத்தியதற்கான உண்மைக் காரணம்’.

மேலும் அன்றைய சூழ்நிலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவை புலிகள் கைப்பற்றியது மட்டுமல்லாது ஏனைய சிறிய தளங்களை நோக்கிய அவர்வளின் தாக்குதல் நகர்வு என்பது மிகவும் இலகுவானதொன்றாகவே அமைந்திருந்தது’ ஆனால் புலிகளிடம் போதிய அளவு படைபலம் அன்று இருக்கவில்லை.அதனால்தான் கிழக்குப் படையணிகள் எடுத்த திடீர் முடிவினால் அவர்கள் அனைவரும் அன்று களமுனைகளில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டதால்தான் புலிகளுக்கு பாரிய ஆள்பற்றாக்குறை அன்று நிலவியிருந்தது.

இதன் காரணமாகவே அன்றைய யாழ் நகர் நோக்கிய விடுதலைப் புலிகளின் நடவடிக்கை கைவிடப்பட்டு பின்பு புதிதாக இணைக்கப்பட்ட இரண்டாயிரம் வரையான போராளிகளின் பலத்துடன் யாழ் நகரை நோக்கி புலிகள் மீண்டும் தாக்குவதற்கு தயாரான வேளையில்தான் புலிகளால் ஒரு புயலுக்கு முந்தியதான அமைதிக்காக அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தை சாதகமாக பயன்படுத்தி சிங்கள அரசு தனது சூழ்ச்சிகளை மேற்கொண்டு ஒரு அரைகுறைத் தமிழனான “அலிசாகிர் மௌலானா”என்பவனின் உதவியுடன் கருணாவுக்கு பிரதேசவாத பேயை ஏவி அவனூடாக அனைத்தையும் அறிந்து எமது இனத்தை சிங்களவன் இன்று அழித்துவிட்டான்.

உண்மையில் ஒரு கருணாவுக்காக ஓராயிரம் கருணாக்கள் அன்று ஒன்றுசேர்ந்ததால்தான் இன்று எமது இனம் மீண்டும் உள்ளக சுயநலம் கொண்ட பிரதேசவாதம்,சமய வாதம்,மற்றும் சாதிவாதம் போன்றவற்றை இன்று மீண்டும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன.

மேலும் 17-05-2009ற்கு பின்னரான இன்றைய சூழ்நிலையில் எமது இனத்துக்குள் மீண்டும் சகலவிதமான பாகுபாடுகளும் தழைத்தோங்க ஆரம்பித்துள்ளதை நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்கள்.இது அரசியல்வாதிகள் தொட்டு ஆன்மீகவாதி வரைக்கும் பீடித்துவருவதையும் நீங்கள் அறிவீர்கள்.இது தொடருமானால் இன்னுமொரு பிரபாகரன் போன்ற ஒரு தன்னலமற்ற பெருவீரனின் துணிச்சல்மிக்க வழிநடத்தல் வரும்வரைக்கும் எமது இனத்திற்கு விடிவு என்பது கானல் நீராகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை!

-தமிழர்குரல்