சிறைச்சாலையில் வீரமரணம் அடைந்தார் சுந்தரம் சதீஸ்

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் கடந்த 14ம் திகதி ‘வீரமரணம்’ அடைந்தார் சுந்தரம் சதீசு .

satheesh_death_prisonசுந்தரம் சதீஸ் இளவயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல ஆண்டுகள் போராடி விடுதலைக்காக உழைத்தவர். பின் பல வருடங்களாக பயங்கரவாத தடுப்புப்பிரிவால் சிறைவைக்கப்பட்டு விடுதலை செய்யப்படாமல் கைதியாகவே மரணித்துப்போனார்.

விடுதலைக்காக சிறையிலிருந்து அர்ப்பணித்த சுந்தரம் சதீசுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து வணக்கம் செலுத்தியுள்ளனர். 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் எனும் முன்னாள் போராளி கடந்த 13ம் திகதி குளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி விழுந்துள்ளார்.

இதன் போது இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 14ம் திகதி கொழும்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.