குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள்… Read More குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்

சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்… என்பதுதான் உண்மை!தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான். களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டா அந்த தாக்குதல் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அந்தக் களத்தில் அவருக்கு கீழ் போராடிய… Read More வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்

படைத்துறைப்பள்ளி ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்

அண்ணாவின் 6ம் ஆண்டு நினைவு நாள். தாயக மண்ணின் மைந்தனாய் தானைத் தலைவனின் பிள்ளையாய் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சி ஆசானாய் விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் கமலாதேவி தம்பதிகளுக்கு 09.04.1971 அன்று பிறந்தவர் தான்அன்பழகன் . அன்புக்கு ஆசானாய் விளங்கிய அன்பழகன் தான் பிறந்த மண்ணின் கொடுமை கண்டு துடித்தெழுந்தார். தமிழ் மக்கள் படும் இன்னல்கண்டு துவண்டெழுந்த அன்பழகன் தாயகம் மீட்க தானைத் தலைவன் வழியை… Read More படைத்துறைப்பள்ளி ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்

கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழு நீள காணொளித் தொகுப்புகள்

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை. கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிறப்பு

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.… Read More தமிழீழ விடுதலைப் புலிகளின் பிறப்பு

தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர்

ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்… “அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று. அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர… Read More தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர்

கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் அன்று….

கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று கடற்கரும்புலி சிதம்பரம நிறையபப் டிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் கஸ்ரநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்த்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன்… Read More கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் அன்று….

கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்

கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட ஈழத்தின் விடியலுக்காக திரவியங்கள் சேர்த்திட சுற்றும்… Read More கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன் தான்

கருணாவின் பிரதேச வாதத்திற்கு அங்கீகாரம் வளங்கியவர்கள்,கருணாபோன்ற ஓராயிரம் கருணாக்களே!! எமது தமிழீழ தேசியத் தலைர் பிரபாகரன் அவர்கள் வெறுமனே இனவிடுதலைக்காக மட்டும் போராடிய ஒரு தலைவன் அல்ல என்பதனையும்,அவர் எம் இனத்தில் தோன்றியிருந்த பல அழுக்கான வேற்றுமைகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு அதி உன்னத மனிதன் என்பதையும் மனிதப் பண்புள்ள எவரும் இதை மறுக்கமாட்டார்கள். மேலும் இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல்… Read More தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன் தான்