தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.

கரும்புலி லெப் -கேணல் பிருதுவி / நற்புகழ்

கரும்புலியின் தடங்கள் தொட்டு ………..! தமிழீழ விடுதலைப்போரட்டத்தின் இக்கட்டான சூழல்கள் பலவற்றை மாற்றியமைத்து விடுதலைப்பயணத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகளுக்கு வழிசமைத்துக் கொடுத்த தற்காப்புக்கவசங்கள் தற்கொடைப் போரளிகள். கரும்புலிகள் எங்கள் காவலர்கள். கரும்புலிப் படையணிகள் காலத்தை வென்று நிற்கும் பெரும்பலத்தின் தோன்றல்கள் ஈகத்தின் விளக்கமே இவர்கள் தானென்றால் அது மிகையாகாது – கரும்புலிகள் ஒவ்வொருவரினதும் உள்ளக்கிடக்கைகளை ஒட்டுமொத்தமாய் உள்ளாய்ந்து உணர்ந்து அறிந்தவர் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள்தான்.உறுதியையும் தெளிவையும் தலைவரிடம் கற்றுக்கொண்டு உரிமையையும் உறவையும் அவரிடமே பெற்றுக்கொண்டு ஊருலகமறியாது உயரிய… Read More கரும்புலி லெப் -கேணல் பிருதுவி / நற்புகழ்

ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்

  ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர் முல்லைத்தீவு படைத்தள அழிப்பில் முதலாம் நாள் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் முல்லைத்தீவு படைத்தள தாக்குதலில் 2ம் நாள் காவியமான 112 மாவீரர்களின் வீரவணக்க நாள் வெற்றிகளின் ஆணிவேர்… ஓயாத அலைகள் வெற்றிநாள்.    

லெப். கேணல் செல்வகுமார் எழிமையான போராளி..!

செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம்… Read More லெப். கேணல் செல்வகுமார் எழிமையான போராளி..!

தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள் – தேசியத் தலைவர் பிரபாகரன்

பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். ஒரு கரும்புலிவிரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே… Read More தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள் – தேசியத் தலைவர் பிரபாகரன்

கரும்புலிகள் நாள் 2015

கரும்புலிகள் நாள் கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்கம் கரும்புலிகள் பற்றிய விபரணக் காணொளிகள் கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி கரும்புலிகள் தினத்தில் தலைவர் நினைவுப் பகிர்வு–காணொளி ஜூலை 5. கரும்புலிகள் நினைவாக-ச.பொட்டு அம்மான் தியாகத்தின் இமயங்கள் உயிராயுதம்,சூரியப்புதல்வர்கள் 2003 :கரும்புலிகளின் ஒளிப்படங்கள், கவிதைகள் ,வீரவரலாறு தம்மையே தந்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள் உயிராயுதம் கரும்புலிகள் வீரவரலாறு காணொளியில் கரும்புலிகளின் வீரவரலாறு கரும்புலிகள்: வீசும் காற்றுடன் கலந்தவர்கள் கரும்புலி மில்லர்கள் மட்டுமே அடையாளம் நமக்கு உயிரம்புகள் கரும்புலிகள் பற்றிய திரைப்படம் முழு… Read More கரும்புலிகள் நாள் 2015