ஆழிப்பேரலை இயற்கையின் அழிவு இரங்கல் செய்தி -வே. பிரபாகரன்

ஆழிப்பேரலை இயற்கையின் அழிவில் இரத்த உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களுக்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். —-வே. பிரபாகரன் Advertisements

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன்

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் 26.08.1993 அன்று…. ‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ ?’ அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது, “புலிக்கு…..” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை. இடையில் ஒரு நாள்….. சண்டை ஒன்றில் கண்ணிவெடி (மைன்ஸ்) வெடித்து பிள்ளைக்குக் கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவுக்கு எட்டியது. அம்மாவின் கண்களில் அருவி, வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ…?… Read More கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன்

இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு….

மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு… Read More இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு….

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்-காணொளி

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 27 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர். மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின்… Read More விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்-காணொளி

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை. மக்கள் கண்ணீரை தன் இதயத்தில் இடியாக இறக்கி ஆறுதல் கொடுத்து அன்புகாட்டி அவர்கள் விடிவுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் கொடுத்து போராடிய உண்மை தலைவன் எங்கே… காலில் விழும் மக்களை கூட ஏளனமாக பார்த்து மக்கள் கண்ணீரை துடைக்க முயற்சிகள் எடுக்காமல் மக்கள் போராட்டங்களிற்கு செவி கொடுக்காமல் மக்கள் அவலங்களை பாராமுகமாக உதாசீனம்… Read More தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

செஞ்சோலை படுகொலையின் 9ம் ஆண்டு நீங்காத நினைவில்…

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். தொடர்ந்து வாசிக்க..

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல். ** பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.