மாவீரன் பண்டாரவன்னியனின் 212வது வீரவணக்க நாள் இன்று!

மாவீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது நினைவு நாள் இன்றாகும். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான்.முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாள்வீச்சில் 60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். பண்டாரவன்னியனின் 212 ஆம் ஆண்டு நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள்

தமிழினி பற்றிய சிங்கள ஊடகவியலாளர்களின் பார்வை

‘தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.’இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், வாசனா சுரங்கிக விதானகே மற்றும் மாதவா கலன்சூரிய ஆகியோர் இணைந்து எழுதியுள்ள  Thamilini’s forte – Tamil women’s liberation  கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழினி, புனர்வாழ்வு பெற்ற பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்தார். புலிகள் அமைப்பில் இருந்த… Read More தமிழினி பற்றிய சிங்கள ஊடகவியலாளர்களின் பார்வை

தகைசார் ஆளுமை மிகுந்த தமிழினி

தமிழ் கூறும் நல்லுலகம் தமிழினி என்ற தலை மகளை, தலைவியை இழந்து நிற்கின்றது. சாதாரண குடும்பம் ஒன்றில் சாதாரணப் பெண்ணாக அவதரித்த அவர், இறுதி வரையிலும் வித்தியாசமான ஒரு சூழலில் வாழ்ந்து மறைந்தவர். தகைசார்ந்த ஆளுமை, கொள்கைப் பற்று, உறுதியான செயலாற்றல், பண்புகளுக்குள்ளே மிளிர்ந்து வெளிப்பட்ட அழகிய பெண்மை போன்றவற்றின் உறைவிடமாக அவர் திகழ்ந்தார். இயற்பெயர் சிவகாமி. சுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு வயது 43. நடுத்தரப் பெண்ணாக, நடுத்தர வயதுப் பெண்ணாக தனது வாழ்க்கையின் இறுதிப்… Read More தகைசார் ஆளுமை மிகுந்த தமிழினி

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது… Read More தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கை ஐந்தாம் ஆண்டு நினைவுகள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய  நினைவுநாள் 22- ஒக்டோபர் -2012 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது. தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும்… Read More எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

தமிழுலகம் மறவாத் தமிழினி….

* அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில். – தமிழினி ஜெயக்குமாரன் – போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது. வெடியதிர்வுகளின் பேரோசைகளால குடி பெயர்ந்தலையும்’ யானைக் கூட்டங்களாக இருண்ட முகில்களும் கூட மருண்டு போய்க் கிடந்தன. பகலை விழுங்கித் தீர்த்திருந்த இரவின் கர்ஜனை பயங்கரமாயிருந்தது அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில். காதலுறச் செய்யும் கானகத்தின் வனப்பை கடைவாயில் செருகிய வெற்றிலைக் குதப்பலாக சப்பிக்கொண்டிருந்தது யுத்தம். மீளாப் பயணம் சென்ற தோழி விடைபெறக் கை பற்றி திணித்துச் சென்ற… Read More தமிழுலகம் மறவாத் தமிழினி….

இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி-விக்கினேஸ்வரன்

“ இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்து வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்டஒரு ஜீவன் எம்மைவிட்டு ஏகிவிட்டது. புற்று நோய்த் தாக்கத்தினால் உயிர் துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகாலமரணம் தமிழ்… Read More இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி-விக்கினேஸ்வரன்

தமிழினியைத் தொடர்ந்து மற்றொரு முன்னாள் பெண் போராளியும் மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் முள்ளிவாய்க்கால் மனித பேரவலமான இன அழிப்பு நடைபெற்ற நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு மகளிர்க்கு பொறுப்பாக இருந்த மருத்துவ போராளி திருமதி சசிதரன் தாருஜா (29) இன்று மர்மமான முறையில் சாவடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு மருதமடு 1 ம் வட்டாரம் கைவேலியை சேர்ந்த இவர் முன்னாள் போராளி ஒருவரின் மனைவியும் 2 பிள்ளைகளின் தாயாரும் ஆவர். இன அழிப்பு போரின் போது திருமதி தாருஜா சசிதரன் விழுப்புண் அடைந்து உடல் முழுவதும் காயங்களுடன்… Read More தமிழினியைத் தொடர்ந்து மற்றொரு முன்னாள் பெண் போராளியும் மரணம்

தமிழினி மறைவுக்கு இரங்கல்கள்

“உள்ளிருந்து குமுறும் நெருப்பு ” தமிழை உரைத்த இனி வருவாளா மீண்டும் இனி அரசியல் புரட்சி மொழி இன்று கொடுத்தோமே பலி மௌனத்தில் புதைத்தாள் மரண வதைகளை அன்று மௌனியாய் துயில்கிறாள் வீரமகள் பேழையில் இன்று காடையரின் கைக்கூலிகளே வாரும் காவுகொடுத்த உயிரின் கதை கேளும் மாற்றானுக்கு மாலையிடும் மடையர்களே வாரும் மங்கையை இழந்ததன் பின்னணியைப் பாரும் மரணத்தின் பின் முழக்கமிடும் மகான்களே அரவணைக்கா உம் அனுதாபம் அந்தியேட்டி பதாதையிலும் அனைத்துலக செய்தியிலும் எதற்கு ..? தலைமைப்… Read More தமிழினி மறைவுக்கு இரங்கல்கள்

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?

தனது பல தசாப்தகால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன. ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, நாடு கடந்து வாழ்பவராக முதிய வயதிலும் தேடப்படும் ஒருவராக ஆறுதலின்றி சதா அலைந்த ஒரு பெருவாழ்வு கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அதிகம் பேருடைய… Read More டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?