ஏன் அந்த மண்ணில் நான் பிறந்தேன்..?

eelam bornஇலங்கையைப் பற்றி
சில நாட்களுக்கு
என்னுடன் யாரும்
பேசாதீர்கள் ..

துரோகங்களையும்..
துரோகிகளையும்..
பார்த்துப் பார்த்தே..
இதயத்தில்
ஓட்டை விழுந்து கொண்டிருக்கு..

இப்போதெல்லாம்..
மனத்தில் இருக்கும் கேள்வி
ஒன்றே ஒன்றுதான்..
ஏன் அந்த மண்ணில் நாம்
தமிழர் என்று பிறந்தோம்?

மு .வே .யோ.